குவிகம் பதிப்பகப் புத்தகங்கள் அறிமுகம்

ஆவணி 06, 2052 / ஞாயிறு / 22.08.2021 மாலை 6.30 குவிகம் பதிப்பகப் புத்தகங்கள் அறிமுகம் விடியல்கள்   – எல்லாம் தெரிந்தவள் –   கனவுச் சங்கிலி –  பாதை தேடும் மேகங்கள் இணையவழி அளவளாவல் நிகழ்வு நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணையகூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931கடவுச் சொல் / Passcode: kuvikam123   பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09 இணைப்பைப் பயன்படுத்தலாம்

வட அமெரிக்காவில் “தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்” – தொடக்க விழா

வலைத்தமிழ்  ஆணி 05, 2052 / 21.08.2021 கிழக்கு நேரம் பிற்பகல் 3.00 தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் இன்றைய இளம் பெற்றோர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் சூழலில் வசிப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் என்று பலரும் தங்கள் பேச்சில் எத்தனை விழுக்காடு தமிழ், ஆங்கிலம் கலந்துள்ளது என்று சிந்தித்தால் நம் பேச்சுத்தமிழ் எவ்வளவு மாற்றமடைந்துள்ளது என்று தெரியும்.  இதற்கு என்ன தீர்வு?  எங்கே சென்று இதற்குப் பயிற்சி எடுப்பது?  ஒழுங்கு செய்யப்பட்ட வழிமுறை உள்ளதா?   வட அமெரிக்காவில் தொடங்கப்படும் “தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்” என்பது…

ஒளவையார்: 7 : ந. சஞ்சீவி

(ஒளவையார்: 6 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 16 2. ஒளவையார் (தொடர்ச்சி) அதிகமானோ, அவர்மேல் சென்று தன் அருமந்த நாட்டைக் காக்கும் வழி கருதி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவனாய் வாளாவிருந்தான். அதிகர் கோமான் வாளாவிருத்தல் கண்டு, ஒளவையார் அவன் நெஞ்சில் கனன்றெரியும் ஆண்மைத் தீப்பொங்கி எரியும் வண்ணம் வீர மொழிகள் பல புகன்றார் : “வெண்காந்தள் பூவும் காட்டு மல்லிகையும் மணம் பரப்பும் மலைச்சாரலில் வாழும் மறப்புலி சீறினால் அதை எதிர்க்கும் மான் கூட்டமும் உளதோ? காய்கதிர்ச் செல்வன்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 23

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 22. தொடர்ச்சி) அகல் விளக்கு இரண்டு வாரம் கழித்துச் சந்திரனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. சந்திரனுடைய கையெழுத்தைக் கண்டதும் எனக்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருந்தது. அதில் தான் சொல்லாமல் சென்னைக்குப் போனது பற்றியும், நான் தேர்வில் தவறிவிட்டது பற்றியும் வருத்தம் தெரிவித்திருந்தான். தனக்கு மனம் நன்றாக இல்லை என்றும், முன்போல் ஊக்கமாகப் படிக்க முடியவில்லை என்றும் சுருக்கமாக எழுதியிருந்தான், அவன் மனநிலையில் அப்படி மாறுதல் நேர்ந்ததற்குக் காரணம், எசு. எசு. எல். சி. யில் எண்ணியபடி வெற்றிபெற முடியாமற் போனதுதான்…

ஔவையார் 7 – இரா.இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார். : 16 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 15. தொடர்ச்சி) 3. ஔவையார் (தொடர்ச்சி) இனித் தமிழ்நாவலர் சரிதைக்கண், ‘பொய்யாமொழியார் பாதியும் ஔஒளவையார் பாதியுமாகப் பாடிய வெண்பா’ என்னுந் தலைப்பின்கீழ், ‘தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனேமண்ணா வதுஞ்சோழ மண்டலமே–பெண்ணாவாளம்பர்ச் சிலம்பி யரவிந்தத் தாளணியுஞ்செம்பொற் சிலம்பே சிலம்பு.’ என ஒரு பாட்டுக் காணப்படுவது. இஃது அம்பர்நகரத்திருந்த சிலம்பி என்பாளொருத்தியைப் புகழ்ந்து பாடியதாகும். இதனான் இவ்வௌவையார் பொய்யாமொழியார் காலத்தும் இருந்தனரென்பது அறியப்படுவது. பொய்யாமொழியார் சங்கம் ஒழிந்த காலத்தை அடுத்திருந்த புலவரென்பது அவர்…

சமற்கிருதம்செம்மொழியல்ல 9: மகாபாரதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி இல்லை

தமிழே விழி !                                                                                                               தமிழா விழி !…

தமிழ்த்தேவை மதிப்பை உயர்த்துங்கள், இலக்குவனார் திருவள்ளுவன், காணுரை, தேசத்தின் குரல்

தமிழ்த்தேவை மதிப்பை உயர்த்தினால்தான் தமிழ் வாழும், தமிழரும் வாழ்வர் என்பது குறித்து இலக்குவனார் திருவள்ளுவன் தேசத்தின் குரல் என்னும் நம் ஒளியலை அலைத்தளத்தில் ஆற்றிய காணுரை –  தாய்மொழியைப் புறக்கணிப்பதால் தோற்கும் தமிழர்கள் –   

தமிழர் மெய்யுணர்வுக் கொள்கை – சி.இலக்குவனார்

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  18 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  17 –  தொடர்ச்சி) வாழ்வியல் உண்மைகளை மக்களுக்கு அறிவுறுத்த முற்படுபவர்கள் சான்றோர்கள் எனச் சிறப்பிக்கப்படுவார்கள்.  இவர்களே உயர்ந்தோர் என மதிக்கப்படும் தகுதியுடையவர்கள்.  இவ் வுயர்ந்தோர் வழியே ஏனையோர் செல்லுதல் வேண்டும் என்பது பழந்தமிழர் கொள்கை. உயர்ந்தோர் வழக்குத்தான் உலக வழக்காகக் கருதப்பட்டது.  உலக நிகழ்ச்சியை இயக்க வேண்டியவர்கள் உயர்ந்தோர்களே என எண்ணினர். “வழக்குஎனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான”   (தொல்காப்பியம், பொருளதிகாரம்,…

ஒளவையார்:6 : ந. சஞ்சீவி

(ஒளவையார்: 5 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 15 2. ஒளவையார் (தொடர்ச்சி) இத்தகைய தலை சிறந்த வள்ளியோன் வீரத்தின் பெருமையையும் நாம் நன்கு அறிவோமல்லமோ? எழுவரொடு முரணி அவன் போர் புரிந்து கண்ட வெற்றியும் கோவலூரை நூறி அவன் கொண்ட கொற்றமும் என்றென்றும் அவன் புகழ் பேசுவன அல்லவோ? அத்த கைய போர் அடு திருவினாகிய பொலந்தார் அஞ்சியின் இணையற்ற வீரத்தை எத்தனையோ அருந்தமிழ்க் கவிதையால் பெருமிதம் தோன்றப் புகழ்ந்துள்ளார் ஒளவையார். அவற்றுள் எல்லாம் தலை சிறந்தது ஒன்று….

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 22

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 21. தொடர்ச்சி) அகல் விளக்கு தேர்வும் வந்தது. இருவரும் எழுதினோம். சந்திரன் இதற்கு முந்திய ஆண்டுகளில் வெற்றிக் களிப்போடு இருந்ததுபோல் இல்லை; சோர்வோடு வாடியிருந்தான். என் நிலைமை எனக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. எப்போதும் கடிந்து பேசும் அப்பாவே, அதைப்பற்றிக் கவலைப்படாமல், “என் பையன் தேர்வில் தவறிவிட்டாலும் கவலை இல்லை. உடம்பு தான் முக்கியம். சுவர் வைத்துத்தானே சித்திரம் எழுதவேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த ஆண்டில் உங்கள் ஊர்ப் பங்குனித் திருவிழா பள்ளி இறுதித்(எசு.எசு.எல்.சி.) தேர்வு முடிந்த பிறகுதான்…

மொழியியல் பல்கலைக்கழகம் தேவையா? இலக்குவனார் திருவள்ளுவன் காணொளி உரை, தேசத்தின் குரல்

மொழியியல் பல்கலைக்கழகம் தேவையில்லை என்பது குறித்துத் தேசத்தின் குரல் என்னும் நம் ஒளியலை அலைத்தளத்தில் இலக்குவனார் திருவள்ளுவன் ஆற்றிய உரையின் காணொளிப் பதிவு- 

குவிகம் விநாடி வினா

ஆடி 30,2052 / ஞாயிறு 15.08.2021  மாலை 6.30 குவிகம் விநாடி வினா நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய  கூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931 கடவுக் குறி / Passcode: kuvikam123                                                    அல்லது இணைப்பு    https://bit.ly/3wgJCibyoutube இணைப்புhttps://bit.ly/3v2Lb38  நடத்துநர் கவியோடை விக்கிரம் வைத்தியா