சிறு பத்திரிகைகளின் தேவை – அன்றும் இன்றும்: சிறப்புரை

குவிகம் இணையவழி அளவளாவல் சிறு பத்திரிகைகளின் தேவை – அன்றும் இன்றும்  சிறப்புரை: திரு அழகிய சிங்கர் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய:  கூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931 கடவுக் குறி / Passcode: kuvikam123   பயன்படுத்தலாம் அல்லது இணைப்பு: https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

ஔவையார் 4 – இரா.இராகவையங்கார்

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 12. தொடர்ச்சி) 3. ஔவையார் (தொடர்ச்சி)   இக்கதை, ‘எரி னியற்றுங் களைக்கோலை யீந்தன்ன மிட்டுநல்லபாரி பறித்தென்னும் பாடல்கொண் டோன்பண்பு சேர்பழையனூரி லிருப்பவ னௌவைதன் பாடற் குவந்தபிரான்மாரி யெனத்தரு கைக்காரி யுந்தொண்டை மண்டலமே.’ என்னும் தொண்டை மண்டல சதகச் செய்யுளானும் அறியப்படும். பின் அக்காரிக்கு ஆடு வாங்கிக்கொடுக்கவேண்டி வாதவன் வத்தவன் யாதவன் என்னும் மூவரிடத்துப்போய்க் கேட்க அவர்கள் கொடாமையாற் சேரநாட்டுச் சென்று வஞ்சிநகர்புக்கு ஆண்டுள்ள சேரன்பால், வாதவர்கோன் பின்னையென்றான் வத்தவர்கோ னாளையென்றான்யாதவர்கோன் யாதொன்று மில்லையென்றா–னாதலால்வாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோ னாளையினும்யாதவர்கோ…

இலக்கியம் கூறும் தமிழர் இல்லறம் (சங்கக் காலம்) – சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  14–  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  15 7. இல்லறம்   ‘இல்லறம்’ என்பது வீட்டிலிருந்து வாழும் அறநெறி என்னும் பொருளதாகும்.  இல்லற வாழ்வே மக்களை மாக்களினின்றும் வேறு பிரித்து உயர்த்துவதாகும்.  மக்களும் மாக்கள்போல் பசித்தபோது கிடைத்தனவற்றை உண்டு, உறக்கம் வந்தபோது உறங்கி, அவ்வப்போது பொருந்தியோருடன் விரும்பியஞான்று மணந்து, வேண்டாதஞான்று தணந்து நாளைக் கழித்த காலம் உண்டு.  மரங்களிலும் மலைப்புழைகளிலும் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்த காலம் அது.  நாளாக நாளாக அறிவு…

இளங்குமரனார்க்கு இணையவழியில் புகழ் வணக்கம் – 08.08.21 காலை 10.00

அன்புடையீர்,  வணக்கம். தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் வரும் ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணிப் பொழுதில் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்கு நிகழ உள்ள நினைவேந்தல் தகவலிதழ் அனுப்பியிருந்தோம். ஐயாவிடம் பள்ளியில் பயின்ற மாணாக்கர்களும் ஆசானாக ஏற்றுக்கொண்டு கற்றவர்களும் நினைவுரை ஆற்ற உள்ளனர். அந்நிகழ்விற்கான இணைய வழிப் பதிவு விவரம் வருமாறு– கூட்ட எண் 864 136 8094   புகு எண் 12345  அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தமிழ்க்காப்புக் கழகம்

ஒளவையார்:3 : ந. சஞ்சீவி

(ஒளவையார்: 2: ந. சஞ்சீவி தொடர்ச்சி)   சங்கக்காலச் சான்றோர்கள் – 12 2. ஒளவையார் (தொடர்ச்சி) வள்ளன்மையில் தலை சிறந்து விளங்கிய அதியமான் வீரத்திலும் நிகரற்ற பெருவிறல் வேந்தனாகக் காட்சியளித்தான். ஒரு நாளில் எட்டுத் தேரை இயற்றும் கைவல் தச்சன் ஒருவன் ஒரு திங்கள் முழுதும் அரும்பாடு பட்டுத் தேர்க்கால் ஒன்றை மட்டும் செய்வானாயின், அத்தேர்க் கால் எத்துணை வலிவுடையதாகும்? அத்துணை உடல் வலி பெற்ற வல்லாண்மைக் குரிசிலாய் விளங்கினான் அதிகமான். அவன் படை வலி கண்டு அஞ்சாத திக்கில்லை; தன்மை தெரியாது,‘இளையன்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 19

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 18. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தை வீட்டில் விருந்தினர் வந்தபோதெல்லாம் ஒதுங்கியிருந்த நான், கற்பகம் வந்தபோது அவ்வாறு ஒதுங்கியிருக்கவில்லை. அப்போது மட்டும் அடிக்கடி போய்க் கொண்டிருந்தேன். கற்பகத்தைக் காண்பதற்கென்றே அடிக்கடி போனேன். அவளும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து, என் அலமாரியையும், பெட்டியையும் திறந்து புத்தகங்களை எடுத்துப் படங்கள் பார்த்துவிட்டுச் செல்வாள். என் தங்கை மணிமேகலையோ தம்பி பொய்யா மொழியோ அப்படி என் அலமாரியிலும் பெட்டியிலும் கை வைத்தால் எனக்கு உடனே கோபம் வரும். ஆனால் கற்பகம் வந்து எடுத்தால்…

முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் 08.08.21

(தை 17, 1951 / 30.01.1930 ***ஆடி 09, 2052 / 25.07.2021) தமிழே விழி!                                                                                                               தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார் இணையவழி நினைவேந்தல் ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணி கூட்ட எண் 864 136 8094   புகு எண் 12345  தலைமை & நினைவுரைஞர்கள் அறிமுக உரை :  இலக்குவனார் திருவள்ளுவன் இணை நிகழ்த்துநர்: தோழர் தியாகு தொடக்க நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார் முதன்மை நினைவுரை : மாண்புமிகு கோ.தளபதி, ச.ம.உ நினைவுரைஞர்கள்:…

ஔவையார் 3 – இரா.இராகவையங்கார்

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 11. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார். : 12 3. ஔவையார் (தொடர்ச்சி) ஒரு காலத்தவரும் ஒரு தன்மையரும் ஆதல்பற்றி இவரது ஓருடற்பிறப்பு ஒருவழியான் வலிபெறுவதாகும். இப்பிறப்பையும் அதிகமான்பாலே பெரிதுமுறலாகும். அதுவும் அவன் பரிசில் நீட்டித்தபோது ஔவையார் அவனைச் சினந்து, அதிகமான், ‘தன்னறி யலன்கொல் என்னறி யலன்கொல்’ என்றது ஔவையார்க்கும் அவ்வதிகற்கும் உளதாகிய இவ்வுறவினையே குறிப்பாற் றெரித்துக் கூறப்பட்டதெனக் கொள்ளுதற்கும் இயைதலின் நீங்கும் என்க. இவ்வாறு கொள்ளுதலே பண்டுதொட்டு வழங்கும் உலகவழக்கிற்கும் செய்யுள்வழக்கிற்கும் இயைபுடைத்தாகும். ஔவையார் பெண்ணையாற்றங்…

இலக்கியம் கூறும் தமிழர் கல்வி (சங்கக் காலம்) – சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  13 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  14 6. கல்வி பழந்தமிழ் நாட்டில் கல்வியின் சிறப்பை யாவரும் உணர்ந்திருந்தனர்.  கல்வியற்ற மக்களை விலங்குகளோ டொப்பவே கருதினர் என்பது, “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்  கற்றாரோடு ஏனை யவர் ”        ( குறள்-410) என்னும் வள்ளுவர் வாய்மொழியால் அறியலாகும்.  அரசரும் இவ் வுண்மை தெளிந்து தம் கடனாற்றினார் என்பது பின்வரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றால் தெளியலாகும். “ உற்றுழி உதவியும்…