அசித்தர்

பேசி – 93827 19282 

 (முன் இதழ்த் தொடர்ச்சி)

muuligai

பாதரசம்        –     இதளியம், இதள்

பாதாம்           –     கற்பழவிதை

பாயசம்           –     பாற்கன்னல்

பார்லி           –     பளிச்சரி, வாற்கோதுமை

பாரதம்          –     இதளியம், இதள்

பாரிசாதம்       –     பவழமல்லிகை

பால்கோவா    –     திரட்டுப்பால்

பாசாணம்       –     கல், நஞ்சு

பிசுதா           –     பசத்தம்

பித்தபாண்டு    –     இளைப்பு, மஞ்சநோய்

பித்தளை        –     மங்களை

பிப்பிலி         –     திப்பிலி

பிரசாதம்        –     படையலுணா, திருவுணா, திருச்சோறு

பிரமசரியம்     –     ஓதல், திருவாழ்வு

பிரமம்           –     பெரும், முழுமுதற்பொருள்

பிரமேகம்       –     வெட்டைநோய்

பிரமை          –     மயக்கம், மருள்

பிரவாளம்       –     பவழம், பவளம்

பிரளயம்        –     ஊழிமுடிவு, பெருவெள்ளம்

பிராணவாயு    –     உயிர்வளி

பிருதிவி        –     புடவி, உலகம், நிலம்

பில்லி           –     வைப்பு, சூழியம்

பிலீகம்          –     மண்ணீரல்

பிளாசுதிரி       –     மருந்துபற்று, பற்றத்துணி

பிளேக்கு        –     கொள்ளைவாரி

பீங்கான்        –     வழைக்கலம், வழைக்கான்

பீசம்             –     விதை, மூலம்

பீனிசம்          –     உளைச்சளி

புதன்             –     அறிவன்

புதினா          –     ஈயெச்சக் கீரை.

பூரம்             –     எரியணம், பளிதம்

பூராசக்கரை    –     பழுப்புச் சக்கரை

பூரி              –     பூதி, மாப்பூதி

பேரிக்காய்      –     நீரிக்காய்

போதி           –     அரசமரம்

போளி           –     கோந்தினியாரம்

மகரந்தம்       –     பூத்தாது, மலர்த்தாது, பூத்தேன்

மகோதரம்       –     பெருவயிறு

மச்சை           –     மஞ்சட்சோறு, எலும்புச் சோறு, 

மஞ்சி, எலும்பு மூளை

மசால்           –     கறிக்கூட்டு, மசியம்

மஞ்சட்காமாலை –   மஞ்சனோய்

மண்டூரம்       –     இரும்புக்கிட்டம்

மணிபூரம்       –     கொப்பூழ்

மணிலாக்

    கொட்டை   –     நிலக்கடலை,வேர்க்கடலை

மதுப்பிரமேகம் –     நீரிழிவு

மந்தம்          –     மெதுமை, செரியாமை

மந்தாக்கினி    –     பசியின்மை

மரணம்         –     சாவு, இறப்பு

மரீசம்           –     மிளகு

மல்கோவா          –     பைந்தசைமா, பைங்கெழுமா

மலையேலம்   –     பெருமணகம், மலைமணகம்

மனோசிலை    –     செம்மஞ்சுள்ளி

மாகதி           –     திப்பிலி

மாகந்தி         –     நெல்லி

மாங்கிசம்       –     இறைச்சி, தசை, ஊன்

மாதுளை        –     பல்லணிப்பழம்

மாமிசம்         –     இறைச்சி, தசை, ஊன்

மிசரி             –     நரிவிரைக்கிழங்கு

மிருத்தியுஞ்சயம் –   சாநீக்கமந்திரம்

மிருதசஞ்சீவி   –    உயிர்மீட்பு மருந்து

மிருதாரசிங்கி        –     அழுக்கீயம்,  ஈயம்

முடக்குவாதம் –     முடக்குவலிப்பு

மூத்திராதிசாரம்-     நீரிழிவு

மூர்ச்சை        –     நினைவிழப்பு

மேகக்காங்கை –     வெட்டைநோய், கணைச்சூடு

மேகம்           –     வெள்ளைப் பிணி

மேக வித்திரதி –     பிளவைநோய்

மேதசு           –     கொழுப்பு

மைசூர்பாகு     –     கண்டப்பாகு

மைதா          –     மைதம், மைதமா

மைதுனம்       –     புணர்ச்சி, கலவி

மொலான்       –     அரத்திப்பூசனி

யவனாசலம்    –     வெடியுப்பு

யாகம்           –     வேள்வி, வழிபாடு

யுனானி         –     சேணியம்

யோகம்         –     ஓகம்

யோகாசனம்    –     ஓகவிருக்கை

யோனி          –     பெண்குறி, கருப்பை

ரசகுல்லா       –     சுவைக்கோளி

ரசதம்           –     வெள்ளி  

ரசதாளி         –     தேங்கொழு வாழை,

தேங்கொழுவம்         

ரசம்             –     சாறு

ரசாயனம்       –     வேதியல்

ரணம்           –     புண், புரைக்காயம்

ரணவைத்தியம் –     அறுவைப் பண்டுவம்

ரத்தகாசம்       –     குருதியுமட்டல், குருதியுமிழ்வு

ரத்தபித்தரோகம் –    குருதிப்பித்தநோய்

ரத்தினம்        –     அரத்தினம், மதி

ரவை            –     குறுநொய்

ராகி             –     கேழ்வரகு

ராத்தல்         –     40 துலையம்

ருத்திரசடை    –     திருநீற்றுப்பச்சை

ருமானி         –     செம்மா, செம்மாம்பழம்

ரொட்டி          –     செவப்பம்

ரோசா           –     முளரி

லவணம்        –     உப்பு

வகாரவுப்பு      –     கல்லுப்பு

வங்கம்          –     ஈயம்

வர்மம்          –     மருமம்

வராடி (க)       –     பலகறை

லிங்கம்         –     இலங்கம், குறி, ஆண்குறி,  

அடையாளம்     

லேகியம்        –     இளகியம், நக்கியம்

வன்னி          –     நெருப்பு

வாகடம்         –     மருத்துவநூல்., பண்டுவநூல்            

வாந்தி, பேதி    –     கக்கல், கழிச்சல்

வாய்வு          –     காற்று, வளிப்பு, காற்றுப்பிடிப்பு

விப்புருதி       –     புண்

விரோசனம்     –     வயிற்றுப்போக்கு

விலாமிச்சை   –     எற்பழம், மஞ்சைப்பழம்

வைடூரியம்     –     ஒள்ளூரியம்


கருவி நூற்கள்

அயற்சொல் அகராதி  –  ப,அருளி

மலை (வாகடம்) அகராதி