திருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு! – வைகோ அழைப்பு

திருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு திருச்சிக்கு அலைகடலெனத் திரண்டு வாரீர்! வைகோ அழைப்பு  தே.மு.தி.க. – மக்கள்நலக் கூட்டணி – த.மா.கா. சார்பில் திருச்சிராப்பள்ளியில் சித்திரை 28, 2047 / மே 11, புதன்கிழமை யன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு  நடைபெறுகிறது.   இம்மாநாட்டில் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்ள வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.   இது தொடர்பாக, தே.மு.தி.க. – மக்கள்நலக் கூட்டணி – த.மா.கா. ஒருங்கிணைப்பாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  மாற்று அரசியல் வெற்றி…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 7. ஆசிரியரை யடைதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 6 தொடர்ச்சி) 7 7.ஆசிரியரை யடைதல்   அறிவினைத் தருபவ ராமா சிரியர். அறிவினைத் தருகின்றவர் ஆசிரியர் ஆவார். இருபா லாருந் தருவதற் குரியவர். ஆண், பெண் இருவரும் ஆசிரியர் ஆவதற்குத் தகுதி உடையவர்கள் ஆவர். அறிவு வகையா னாசிரி யர்பலர். பல வகையான அறிவினை வழங்குவதற்கு ஏற்ப ஆசிரியர்களும் பல வகையாக உள்ளனர். எவர்க்கு மொழுக்க மின்றியமை யாதது. ஆசிரியர்களுக்கு நல்லொழுக்கம் இன்றியமையாதது. அவர்கடன் மாணவ ரறிதிற னறிதல். மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறமையை அறிந்து கொள்வது ஆசிரியரின் கடமை…

உலகத் தொல்காப்பிய மன்றம், தொடர்பொழிவு- 6, புதுச்சேரி

  வைகாசி 10, 2047 -23.05.2015 திங்கள் கிழமை மாலை 6.30 மணி முதல் 8 மணிவரை   உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் ‘தொல்காப்பியம் – மரபியல்’ என்ற தலைப்பில் ஆறாம்பொழிவு நடைபெறுகின்றது. பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் சிறப்புரையாற்றுகின்றார். அனைவரும் கலந்துகொண்டு தொல்காப்பிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம்!

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23 இன் தொடர்ச்சி) 24 இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24 தமிழகக் குடியரசு   அமெரிக்க நாட்டின் ஆட்சித் தலைவராக விளங்கும் குடியரசுத் தலைவர் நம் அண்ணாவைக் காண வரவில்லை. அவர்தம் அன்புச் செயல்களில் கலந்து கொள்ளவில்லை. காரணம் தமிழகம் தனிக்குடியரசாய் விளங்கி தனது அறிவு நிரம்பிய தலைவரை அனுப்பி வைக்கவில்லையே. அந்நாள் விரைவில் தேடிவருமாக என்கிறார் கவிஞர். சப்பானியச் செலவு   உழைப்பால் உயர்ந்த நாடு சப்பான், ஓங்கிய பெருமை உடைய நாடு…

உலகத் தொல்காப்பிய மன்றம், குளித்தலை, தொடக்க விழா

  தமிழ்ப்பேரவை, குளித்தலை திங்கள்நிகழ்வு 21 உலகத் தொல்காப்பிய மன்றம், கரூர் மாவட்டக் கிளை, தொடக்க விழா  வைகாசி 01, 2047 –  21.05.2016 சனிக் கிழமை மாலை 5.30 மணிக்குக் குளித்தலையில் அமைந்துள்ள கிராமியம் அரங்கில் (பேருந்து நிலையம் அருகில்) உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கரூர் மாவட்டக் கிளை தொடக்க விழா நடைபெற உள்ளது. முனைவர் கடவூர் மணிமாறன், பாட்டரசர் கி. பாரதிதாசன், பொறிஞர் சு.சக்திவேல் மரு. பி. நாராயணன், புலவர் உ. தண்டபாணி, திரு. ப.சிவராசு, முனைவர் ப.பத்மநாபன், முனைவர் மு.இளங்கோவன்,…

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 இன் தொடர்ச்சி) 5 இர.சிறீகந்தராசா: நீங்கள் அங்கு இருந்தபொழுது உடனிருந்த கைதிகள் உடலளவிலோ உளவியலளவிலோ ஏதேனும் வதைகளுக்கு உட்பட்ட காட்சிகளைக் காண முடிந்ததா? து.வரதராசா: உளவியல் தாக்குதல் எல்லாருக்குமே இருந்தது. எனக்குக் கூட! மற்றைய மருத்துவர்களுக்கும் எல்லாம். தொடக்கத்தில் நாங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் நம்ப மறுத்திருந்தார்கள். மறுத்திருந்த பொழுது அவர்களுடைய சித்திரவதை முறைகளைச் சொல்வார்கள், உண்மையைச் சொல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடக்கும் என்று. இர.சிறீகந்தராசா: எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறுங்கள்! து.வரதராசா: எங்களை அந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போவதாகக் கூறுவார்கள்….

‘நான் அறிந்த சுசாதா’ – கலந்துரையாடல்,சென்னை

   வைகாசி 08, 2047 –    21  மே   2016,        சனிக்கிழமை,    மாலை – 6.30 மணி பனுவலின் பதின்மூன்றாம்  நிகழ்வு ‘நான் அறிந்த சுசாதா’ முன்னிலை:  சுசாதா தேசிகன் செயராமன் இரகுநாதன் கலந்துரையாடல் : வருகை தருவோர் தங்கள் வாசிப்புணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். வர இயலாதவர்கள் மின்னஞ்சல் (ilakkiyavaasal@gmail.com) அனுப்பினால் அவை வாசிக்கப்படும் சுசாதாவின் குட்டி நாடகம் சுட்டிக் குழந்தைகளால் நடிக்கப்படும் இம்மாதக் கதை, கவிதை வாசிப்பும் வழக்கம் போல்  நிகழும்!   பனுவல் புத்தக நிலையம்,  எண்….

தொல்காப்பியக் கருத்தரங்கு தொடர் – 3, கனடா

வைகாசி 01, 2047 / மே 14, 2016 பிற்பகல் 3.00 – 5.00 உலகத் தொல்காப்பிய மன்றம், கனடாக் கிளை “உயிரின வகைப்படுத்தல் குறித்து அரிசுட்டாட்டிலும் தொல்காப்பியரும் – ஓர் ஒப்பீடு” உரை – முனைவர் பால சிவகடாட்சம்    

தமிழர் திருமண முறை – கே.கே.பிள்ளை

தமிழர் திருமண முறை   அகத்திணையுள் திருமண வாழ்க்கை ‘கற்பு’ என அழைக்கப்படுகின்றது. தலைவன் தலைவி இருவரின் பெற்றோரும் அவர்களுடைய திருமணத்துக்கு உடன்படுவர்.1 திருமணம் ஒரு நல்ல நாளில் நடைபெறும்.2 தீய கோள்கள் இடம் விட்டு விலகவும், நிலா உரோகிணியுடன் கூடவும் வேண்டும். விடியற்காலையிற்றான் திருமணம் நடைபெறும். திருமணப் பந்தலில் புதுமணல் பரப்பப்படும்; மாலைகள் தொங்கவிடப்படும்; அழகிய விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். வயது முதிர்ந்த மங்கல மகளிர் தண்ணீரைக் குடங்களில் முகந்து தம் தலையின் மேல் தூக்கிக் கொண்டு வந்து ‘சிறு மண்டை’ என்னும்…

எழுவகை நாடோடிப் பாடல்கள் – கி.வா.சகந்நாதன்

எழுவகை நாடோடிப் பாடல்கள்   நாடோடிப் பாடல்களில் பல வகைகள் உண்டு. ஏற்றம் இறைத்தல், மீன்  பிடித்தல், சுண்ணாம்பு குத்துதல் முதலிய தொழில்களைச் செய்பவர்கள் அத்தொழில்களால் உண்டாகும் அலுப்புத் தெரியாமல் பாடிக்கொண்டே அவற்றைச் செய்வார்கள். நெடுநேரம் தொழில் செய்வதனால் அவர்கள் பாடும் பாடல்கள் நீண்டனவாக இருக்கும். அவை ஒரு வகை.  வண்டிக்காரன், இடையன், வீட்டில் இருக்கும் மகளிர் முதலியோர் பாடும் பாடல்கள் இன்பமாகப் பொழுதுபோக்குவதற்கு உதவுவன. அவை ஒரு வகை.   திருமணத்தில் பாடும் பாடல்கள், யாரேனும் இறந்தால் பாடும் ஒப்பாரி, தெய்வத்தை வழிபடும்போது…