தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம்

    தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம்   வைகாசி 16, 2047 /  29/05/2016 ஞாயிறு   வள்ளுவர் சமையற்கலை கல்லூரி, கரூர் தலைவர் :  இராமநாதபுர மன்னர்  குமரன் சேதுபதி, தலைவர், மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் தமிழ் ஆர்வலர்கள் மகிழச் சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும்.   தமிழ் இராசேந்திரன் வழக்கறிஞர், கரூர் செயலாளர், கரூர் தமிழ்ச்சங்கம். 9789433344

வேலையில்லாத் திண்டாட்டம் – இலக்கியச் சான்று : தி.வே.விசயலட்சுமி

வேலையில்லாத் திண்டாட்டம் – இலக்கியச் சான்று   நம் குமுகாயச் சூழலில் ஒரு நிறைவான வாழ்வு வாழ அனைவர்க்கும் கல்வியறிவு இன்றியமையாதது. கல்வியை முறையாக, ஆழமாகப், பல அல்லல்கட்கிடையே (பெற்றோரை வருத்தி, அவர்கள் தேவையைக் குறைத்து) 4, 5 பட்டங்கள் பெற்றாலும், நாட்டில் வேலை கிடைப்பது எளிதான ஒன்றல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு பெண்மணி தன் அணிகலன்களை விற்று, இருவேளை உணவை ஒரு வேளையாகக் குறைத்துத் தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தாள். படிப்புக்கேற்ற வேலை மகனுக்குக் கிடைக்கவில்லை. என்னிடம் தன் பெரிய…

பாராட்டு – அரவிந்தன் சுமைதாங்கி சாம்பசிவம்

பாராட்டு குறள் வெண்செந்துறை பாராட்டை வேண்டாரும் உண்டோ உலகினில் சீராட்டும் தாயையே வேண்டிடும் சேய்மை மெச்சுதலைத் துச்சமாய் எண்ணினாலே நம்திறமை உச்சத்தை எப்பொழுதும் காணாது காண்க ஏற்பளிக்கும் போற்றுதலை நல்மனத்தில் நீவிதைத்தால் நாற்றங்கால் நெல்மணியைத் தந்திடுமே பார்! நேர்மறையின் எண்ணமுடன் தட்டிக் கொடுப்பதுவே பார்போற்றும் பாராட்டாய் நின்று பேசும்! கலித்தாழிசை மெச்சுதலும் முகத்துதியும் சமமெனவே நினைப்பவரோ தன்முனைப்பை ஆவணத்தைச் சரிவரவே பிளந்தறியார்! அரவிந்தன் சுமைதாங்கி சாம்பசிவம்

முதல்வர் நாற்காலிமீதுள்ள விருப்பம் தமிழ்மீது இல்லையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

  முதல்வர் நாற்காலிமீது விருப்பம் உள்ளவர்களுக்குத் தமிழ்மீது விருப்பம் இல்லையே!     நிலையான(நிரந்தர) முதல்வர் என்று ஒருவர்!  அடுத்தவாரம் முதல் முதல்வர் என்று சிலர் இருக்கின்றனர். தமிழ்நாட்டின் முதல்வராக விழைவோரின் தமிழ் உணர்வு எப்படி இருக்கிறது என்பதற்கு அடையாளமாக அவர்களின்  வேட்பு உறுதிப் பத்திரத்தைப் பார்த்தோம்.    இன்றைய முதல்வர் தன் வேட்புறுதியை ஆங்கிலத்தில் அளித்துள்ளார். ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இட்டுள்ளார். அரசின் பணியாளர்கள் தமிழில்  கையொப்படமிட வேண்டும் என்று ஓர்  ஆணை உள்ளது. இருப்பினும் ஏறத்தாழ 14 ஆண்டுகள் அரசை வழிநடத்தியும் கையொப்பம் …

குறுஞ்செயலி உருவாக்கப் பயிலரங்கம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி

சித்திரை 26 – வைகாசி 02, 2047  / மே 09- மே15, 2016   கணித்தமிழ்ப்பேரவை தமிழ் இணையக்கல்விக்கழகம்

நீரோடு நிலம் காப்பவனை ஆட்சியில் அமர்த்து! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

தமிழினத்தின் பொற்காலம்! வாரங்கள் ஒன்றிரண்டு மட்டும் தான் உள்ளதடா, ஊரெங்கும் பரப்புரை ஒளிவேகம் எடுக்குதடா, கூரம்பாய் சிந்தனையை நீ கொஞ்சம் தீட்டிடடா, பாரங்கள் தீர்ப்பவர்கள் யாரென்று தேர்ந்திடடா! வீரங்கொண் டிதுவரையில் வசனங்கள் பேசியவர், கோரப்பல் சிரிப்பாலே கொடுங்கோலாய்ச் சீறியவர், வேரின்றி வீழ்கின்ற மரம்போலுன் காலடியில், பேரன்புச் சாயமிட்டு வீழ்வார்கள் புறந்தள்ளடா! ஈரங்கொண் டுள்ளத்தில் எரிமலையாய் வெடிப்பவனை, மாரெங்கும் தமிழனென்னும் பெருமிதத்தில் திளைப்பவனை, பாரெங்கும் தமிழகத்தின் பெருமைகளை வளர்ப்பவனை, நீரோடு நிலம் காக்கப் போராடும் நல்லவனை, யாரென்ன சொன்னாலும் தடுமாற்றம் இல்லாமல், ஆராய்ந்து பார்த்தபின் ஆட்சியில்…

அம்மிக்கல் தமிழனும், ‘ஆட்சி’ என்னும் மிளகாயும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

அம்மிக்கல் தமிழனும், ‘ஆட்சி’ என்னும் மிளகாயும்! அவலங்கள் ஆயிரம் அரங்கேற்றி, மக்களின் கவனத்தை வேறிடம் திசைமாற்றித் துணிவுடன், எவருக்கும் அஞ்சாமல் பாதகம் செய்வோரை, ஆண்டாண்டு காலமாய் ஆட்சியில் ஏற்றி, அடையாளம் தெரியாமல் போகின்ற தமிழா! அடிமைக்கும் அடிமைபோல் முதுகுத் தண்டுடைந்து, அல்லல்கொண் டழிவதிலே ஆனந்தம் கண்டாயோ? அடைகாக்கும் கோழிகூட அன்னியரைக் கண்டால், அடையாளம் கண்டுடனே தற்காத்துக் கொள்ளும்! அரைநூறு ஆண்டுகளைக் கடந்த பின்னும்கூட, அம்மிக்கல் போல்நீயும் அசையாமல் இருந்தால், அன்றாடம் மிளகாயை அரைத்துந்தன் தலைமீது, ‘ஆட்சி’ என்னும் பெயரிலே பூசுவார்கள் என்றும்! அறிவுக்கண் திறந்துந்தன்…

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200: இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175  தொடர்ச்சி)   காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200   செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் : 24. பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம் 8.2   சில பகல் கடந்து சென்று செந்தமிழ்த் திருநாடு எய்தி – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் : 25. காரைக்கால் அம்மையார் புராணம் : 43.1   அந் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து…

வாக்குச் சீட்டு காகிதமா ? ஆயுதமா ? – இரவி கல்யாணராமன்

வாக்குச் சீட்டு காகிதமா? ஆயுதமா? நெஞ்சைப் பிழிந்து கண்ணீர் மல்கக் கெஞ்சிக் கேட்கிறேன் அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் அடிமையாகி வீழ்ந்தது போதும் கொஞ்சம் நிமிர்ந்து நோக்குங்கள் எங்கும் உங்கள் குரலொலிக் கட்டும் தானம் இலஞ்சம் மறுத்து விடுங்கள் – தன் மானம் காக்க வாக்களியுங்கள் நேர்மை, துணிவு, பணிவெல்லாம் தேர்வு செய்து வாக்களியுங்கள் உங்களுக் காக உழைப்பேன் என்று வேலை கேட்டு வருகிறார்கள் வேட்பாளர்களாய் வீதிதோறும் வாக்கு கேட்டு வருகிறார்கள் பரப்புரையை நிறுத்தி விட்டுச் சிக்கல்களைக் கேட்கச் சொல்லுங்கள் அடக்கமாக வரச் சொல்லுங்கள்…

‘வட்டுக்கோட்டை தீர்மானம் 40′ : தமிழ்த்தேசியக்கருத்தரங்கு, செருமனி

‘வட்டுக்கோட்டை தீர்மானம் 40′ யேர்மனியில் தமிழ்த் தேசியக் கருத்தரங்கு – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை. ‘ வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதன் 40ஆவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு சிறப்பு பெற்றுள்ளது. தந்தை செல்வநாயகம் தலைமையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் விடுதலைத் தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிலையான தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும்…

மதி படைத்த யானை! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதி படைத்த யானை   குள்ளநரிகள் கள்ளவெறியில் தேர்தல் மணியை அடிக்குதாம், குருட்டு மறிகள் அந்த ஒலியில் பழசையெல்லாம் மறக்குதாம், குருதி வெறியில் நரிகளோடு கழுதைப்புலிகள் சேருதாம், குற்றுயிராய்க் குலையுயிராய் மறிகள்சாகு மென்றறிந்து, கொல்லும் அலகுக் கழுகுகளும் ஆசையோடு பறக்குதாம்! உள்ளம் குமுறிக் கண்டவர்கள் என்னசொல்லித் தடுத்த போதும், உண்மை அறியும் ஆற்றலின்றி ஊனமறிகள் சிரிக்குதாம்! மறிகளுக்கு அறிவையூட்டி, நல்வழியைக் காட்ட, மதிபடைத்த யானைஒன்று, தரை நடுங்க வருகுதாம்! தமிழ் நலம்பெருக்க வருகுதாம்! தன் நலம்மறந்து வருகுதாம்! தேர்தல் களம்வெல்ல வருகுதாம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி