தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டன – இராசேசு இலக்கானி

தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் சைதி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்  நாளை அதிகாரப்பூர்மாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி தேர்தல் நடத்தைவிதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன எனக்கூறிப் பின்வருமாறு தெரிவித்தார்: தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டன *தேர்தல் பரப்புரை ஆற்றுவோர், வெவ்வேறு சாதி, சமயம், மொழி அல்லது சமுதாயத்தினருக்கு இடையே, இப்போதுள்ள கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தும், ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வை ஏற்படுத்தும்…

நிதி நிலைஅறிக்கை – 2016: விலை உயர்வு – குறைவுப் பட்டியல்

நிதி நிலை அறிக்கை – 2016: விலை உயர்வு – குறைவுப் பட்டியல் தலைமையமைச்சர் நரேந்திர மோதி தலைமையிலான நடுவண் பா.ச.க அரசின் 2016-2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையினை (Budjet) மாசி 17, 2047 / பிப்பிரவரி 29, 2016 அன்று நாடாளுமன்றத்தில் நடுவண் நிதியமைச்சர் அருண் செத்லி அளித்தார். இதனால் வரி போடுவதில் மேற்கொண்டுள்ள மாற்றத்தின் எதிரொலியாக விலை உயர்கிற குறைகிற பொருட்கள், சேவைகள் போன்றவற்றின் பட்டியலைப் பார்ப்போம். விலை உயர்வு பெறுபவற்றின் பட்டியல்: – விளையாட்டுக்காகப் பயன்படுத்தும் (sport utility) ஊர்திகள்….

மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்

மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்.  “மெய்ப்பாடு என்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுதல்.” இவ்வாறு பேராசிரியர் கூறியுள்ளார். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாடு என்பது தான் “மெய்ப்பாடு” என்பதன் பொருள். புளியை உண்டால் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப முகம் சுளிக்கின்றது. எதிர்பாராத விதமாக அருகில் அரவம் இருக்கக் கண்டால் அஞ்சுகின்றோம். அவ் வச்சத்தால் ஏற்படும் உணர்ச்சிக்கேற்ப உடல் நடுங்குகின்றது. இலக்கியத்தைப் படிக்கும்போதும் இலக்கியத்தின் இயல்புக் கேற்ப நம் உள்ளத்தில் உணர்ச்சி உண்டாகின்றது. அவ்வுணர்ச்சிக்கேற்ப…

தேர்தல் அட்டவணை 2016, தமிழ்நாடு

2011இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்காவது தமிழகச் சட்டசபையின் பதவிக்காலம் 22, மே 2016 அன்று நிறைவடைகிறது. இதனால் 15 ஆம் சட்டமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் குறித்துத் தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

“செவியறி வுறூஉ”, “வாயுறை வாழ்த்து”- பிறரைத் திருத்துவதற்காகப் பாடுவனவே.

“செவியறி வுறூஉ”, “வாயுறை வாழ்த்து” என்பன புலவர்கள் பிறரைத் திருத்துவதற்காகப் பாடுவனவே.      மேனாட்டில் அரசியலறிஞர்கள் பலர் – உரூசோ, காரல் மார்க்சு, பெயின், மெக்காலே போன்றவர்கள் – அவர்தம் காலத்து அரசைத் திருத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள், இன்று பேரிலக்கியங்களாய்த் திகழ்கின்றன. அவ்வாறே, தமிழ் நாட்டிலும் அரசைத் திருத்த – நல்வழிப்படுத்த – செங்கோலாட்சி புரியக் கூறிய கருத்து நிறைந்த பாடல்கள் பேரிலக்கியப் பகுப்பினுள் அடங்குவனவாய் உள்ளன. புலவர்கள் பொருள் கருதிப் புகழ்ந்து பொய்வாழ்வு நடாத்தினர் என்று கருதுதல் கொடிது. இடித்துரைத்து மக்களுக்கு…

தேசிய உணவூட்ட நிலையத்தில் தொழில்நுட்ப அலுவலர் பணி

தேசிய உணவூட்ட நிலையத்தில் தொழில்நுட்ப அலுவலர் பணி   ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய உணவூட்ட நிலையத்தில் (nutrition) காலியாக உள்ள தொழில்நுட்ப அலுவலர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். NIN/Rectt/T&E-Posts/1/2015-16 மொத்தக் காலியிடங்கள்: 10 பணி: தொழில்நுட்ப அலுவலர் ‘அ’ (Technical Officer ‘A’), தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant). தகுதி: தாவர-விலங்கு-வேதி இயல் (BZC), கணித-இயல்பு-வேதி இயல் (MPC) பாடப்பிரிவுகளில் இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் பெற்றவர்கள், தாவர-விலங்கு-வேதி இயல் (BZC) பாடப்பிரிவில் இளநிலை அறிவியல்…

கண்ணகிக் கோவிலில் வழிபாட்டுரிமை – கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு வைகோ மடல்

கண்ணகிக் கோவிலில் வழிபட 3 நாள் இசைவு தருக! –  வைகோ மடல்   மங்கலதேவிக் கண்ணகிக் கோவில் வழிபாடு செய்யத் தமிழ்நாட்டு மக்கள் வரும் சித்திரைப் முழுநிலா(பௌர்ணமி) அன்று ஒரு நாளுக்கு மாறாக மூன்று நாட்கள் வழிபட இசைவளித்து (அனுமதித்து) உதவிட வேண்டுகிறேன் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு மடல் எழுதியுள்ளார்.   தமிழ்நாட்டு எல்லையோரம் கம்பம், கூடலூர் கடந்து பளியங்குடி வனப்பகுதியில் ஏறத்தாழ 6.6 புதுக்கல் (கி.மீ). தொலைவிலும், குமுளியிலிருந்து ஏறத்தாழ 14 புதுக்கல்…

நடுவண் அரசுக் கல்லூரிகளில் 170 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்

நடுவண் அரசுக் கல்லூரிகளில் 170 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு     நடுவண் அரசுக் கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 170 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தேசியத் தகுதித் தேர்வு (NET), மாநிலத் தகுதித் தேர்வு (SET) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – காலியிடங்கள் விவரம்: பணி: அறிவியல் இளநிலை அலுவலர் (மின்னணுவியல்) [Junior Scientific Officers (Electronics)] – 02 அகவை (வயது) வரம்பு: 30க்குள்…

அறிமுகம் : “நமது மண்வாசம்” – தமிழ் மாத இதழ்

“நமது மண்வாசம்” தமிழ் மாத இதழ் மதுரையிலிருந்து வெளிவருகிறது. ஆசிரியர். ப.திருமலை  வரலாறு,கலந்துரையாடல், மருத்துவம், தியாகம், நூல்ஆய்வு, விருந்தினர்,கல்வி, பெண்கள், நகைச்சுவை, ஆளுமை, அரசியல், கலை, வேளாண்மை, தண்ணீர், சட்டம், நெய்தல், நாடும்நடப்பும், கவிதை ஆகியவை இதழில் இடம்பெற்றுள்ளன. தனிஇதழ் விலை. உரூ.20/- ஆண்டுக்கட்டணம்.உரூ.200/- முகவரி: நமது மண்வாசம் பட்டறிவு பதிப்பகம் 1-ஏ,வைத்தியநாதபுரம் கிழக்கு கென்னத்து குறுக்குத்தெரு மதுரை 625 016. தொலைபேசி.91 452 2302566 தொலைப்பதிவு +91 452 2602247 தமிழ்வானம் சுரேசு

தமிழ் வளர்ச்சி இயக்குநரகத்தில் தமிழ் ஆசிரியர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள்

  தமிழ் வளர்ச்சி இயக்குநரகத்தில் காலியாக உள்ள ஆசிரியர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் விவரம்: பணி: தமிழ் ஆசிரியர் – 02 பணி: ஓட்டுநர் – 01 பணி: அலுவலக உதவியாளர் – 02 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 8. இம்முகவரிக்கு நேரிலும் வந்து கொடுக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.03.2016 மேலும் முழுமையான விவரங்கள் அரிய…

இந்திய அஞ்சல் துறை: நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள்

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!     இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்குத் தகுதியுள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து இணையம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எண்.REP/83-1/DR/2016 நாள்: 29.02.2016 பணி: பல்வினைப் பணி (Multi Tasking Job) காலியிடங்கள்: 127 ஊதியம்: மாதம் உரூ.5,200 – 20,200 + தர ஊதியம் உரூ.1,800 மற்றும் உரூ.1,900. அகவை வரம்பு: 27.03.2016 நாளின்படி 18 – 25க்குள்…

தமிழர்களின் அடையாளம் திருக்குறள் – அமெரிக்கவாழ் தமிழர் உரை

      தமிழர்களின் அடையாளம் திருக்குறள் அமெரிக்க வாழ் தமிழர் உரை   காட்சி வழியாகத் தமிழில் இயற்பியல் கணிதம்,  பாடங்களைப்   பெருந்தொடர் குறுந்தகடாக  வழங்குதல் விழா      தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்ற காட்சி வழி  இயற்பியலும்,கணிதமும், அவற்றின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு வழங்குதல் விழா நடைபெற்றது.        பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம், விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றார்.   பள்ளிச் செயலர்…