அண்ணா! – இனியொரு நாள் நீ வந்தால் ….: சரசுவதி பாசுகரன்

அண்ணா! – இனியொரு நாள் நீ வந்தால் …..…..   இனியொருநாள் நீ வந்தால் இதயநிறை பக்தி யினால் மனித குலம் முழுவதுமே மண்டியிடும் உன் முன்னால் தனி மனித மானத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு முனிவன் என நீநின்று முடிபான வழி சொன்னாய் ! மீண்டும் இங்கு நீ வந்தால் மீண்டு வரும் நல்வாழ்வு ; வேண்டுகின்ற நல மனைத்தும் வேகமுறப் பல்கி விடும் ; மூண்டு பெருகி நிற்கும் மூடப் பழக்க மெலாம் பூண்டோடு அழிந்து பின்னர் பூத்து வரும் நல்லுலகு…

இலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு – இலக்குவனார் திருவள்ளுவன்

தடம் மாறிய தமிழ்த்தேசியப் பேரியக்கம்    1938 மொழிப்போர் என்பது அறிஞர்கள், தலைவர்களின் பெரும்பங்கும் ஆங்காங்கே தொண்டர்களின் பங்கும் கொண்டதாக இருந்தது. ஆனால், 1965 மொழிப்போர் என்பது உள்நாட்டுப்போருக்கு இணையான மக்கள் போராக இருந்தது. கட்சி வேறுபாடின்றி நாடு முழுவதும் மாணாக்கர்கள் திரண்டு நடத்திய இப்போரால் காவல் துறையாலும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுக்கட்சியினராலும் தாக்குதலுக்கு உள்ளான மாணாக்கர்களின் பெற்றோர்களே களத்தில் இறங்கியதால் மக்கள் போரானது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பேராயக்கட்சி 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை ஆட்சிக்கட்டிலில் ஏற இயலவில்லை.   ஆனால்,…

பரதநாட்டியம் தமிழரின் கலையே! – மயிலை சீனி.வேங்கடசாமி

பரதநாட்டியம் தமிழரின் கலையே! – மயிலை சீனி.வேங்கடசாமி   பாரத நாட்டிலே பல நாட்டியக் கலைகள் உள்ளன. அவற்றில் பரதநாட்டியம், கதக், கதகளி, மணிபுரி நாட்டியங்கள் பேர் போனவை.   இவற்றில் தலைசிறந்த உயர்ந்த கலையாக விளங்குவது பரதநாட்டியம். இதைத் தமிழனின் தற்புகழ்ச்சி என்றோ, முகமன் உரை என்றோ யாரும் கருதக்கூடாது. உவத்தல் வெறுத்தல் இல்லாத மேல்நாட்டு ஆசிரியர் கூறும் கருத்தையே கூறுகிறேன். “இந்திய நடனங்களிலே பெருமிதம் உடையது (தலைசிறந்தது) பரத நாட்டியம்” என்று இந்திய நடனக் கலைகளைப் பற்றி ஆராய்ந்து எழுதிய ஓர்…

மக்கள் கலைஞர் முனைவர் குணசேகரன் நினைவேந்தல், புதுச்சேரி

மக்கள் கலைஞர் முனைவர் கரு. அழ. குணசேகரன் நினைவேந்தல் கூட்டம் நாள் : தை 17, 2047 / 31. 01. 2016 – ஞாயிறு காலை 10 மணி  இடம் : பல்கலைக்கழகம் மரபுநிலை அரங்கம் புதுவை பொறியியல் கல்லூரி எதிரில் காலாப்பட்டு, புதுச்சேரி அன்புடையீர் வணக்கம்.   என் கணவரும், புதுவை பல்கலைக்கழக நிகழ்கலைத்துறைப் புல முதன்மையரும், பேராசிரியருமான முனைவர். கரு. அழ. குணசேகரன் தை 03, 2047 / 17. 01. 2016 அன்று காலமானார். அவரது உடல் கருவடிக்குப்பம்…

சவ்வாது மலைச் சிற்றூர்கள் – பல்லுயிர்ச்சூழல் – நினைவூட்டல்

 சவ்வாது மலைச் சிற்றூர்கள் – பல்லுயிர்ச் சூழல் – நினைவூட்டல் 15  ஆண்டிற்கு முன் வீட்டுக்கு முன் இரண்டு பெரிய வேப்ப மரமும், பெரிய வட்டக் கிணறும், மல்லிகைப் பூந்தோட்டமும்,  இருக்கும்; மழை பெய்தால்  இரவு முழுவதும் தண்ணீர் வாய்க்காலில் ஓடும்  ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். இப்படி ஒவ்வொருத்தருக்கும் தங்களுடைய ஊரைப்பற்றின பழைய  நினைவு இருக்கும். ஆனால், இப்பொழுது, இந்த இடம் அவ்வளவு பசுமையாக இருந்தது என்று சொன்னால் யாரும் நம்புவதில்லை. குறைந்தஅளவு பசுமையைக் கண்ணில் பார்ப்பதற்கும் துய்ப்பதற்கும் இருக்கிற கடைசிக் கட்ட வாய்ப்பு…

ஆங்காங்கு தமிழ் வகுப்புகள் – மு. இராமநாதன் உரை

ஆங்காங்கு தமிழ் வகுப்புகள்  தமிழ்க் கல்வி அறிவுரைஞர் மு. இராமநாதன் உரை   ஆங்காங்கு (Hongkong) தமிழ் வகுப்புகள் 11 ஆண்டுகளை நிறைவு செய்து 12ஆம் ஆண்டில் நடைபோடும் இந்த நல்ல நேரத்தில், இந்த வகுப்புகளைப் பற்றியும் அதற்கு முன்பாக இப்படியான வகுப்புகளின் தேவையைப் பற்றியும் சொல்லலாம் என நினைக்கிறேன்.  நான் ஆங்காங்கு பொறியியல் கலந்தாய்வு (ஆலோசனை) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இந்த நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது நான் பணியாற்றி வரும் நிறுவனத்தில், கிழமைக்கு (வாரம்) ஒருநாள் பகல் உணவு…