வேற்றுமொழிப் பெயர்ச் சொல்லைத் தமிழோசைவூட்டியே கொள்ளல் வேண்டும் – சி.இலக்குவனார்

           வேற்று மொழிப் பெயர்ச் சொல்லைக் கொள்ள வேண்டிய இன்றியமையாத நிலை ஏற்படின் கொள்ளலாம் என்றும், கொள்ளுங்கால் தமிழோசையூட்டியே கொள்ளல் வேண்டுமென்றும் ஆசிரியர் கூறியிருப்பதை அறியாது வரையறையின்றி வேற்று மொழிச் சொற்களை அம்மொழிகளில் உள்ளவாறே தமிழில் எடுத்தாளத் தொடங்குவது தமிழுக்கு அழிவு தேடித் தருவதாகும்; தொல்காப்பியர் கொள்கைக்கு மாறு பட்டதாகும்; மொழி நூலுக்கும் முரண்பட்டதாகும். செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார்  : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 117

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்!

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்! திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் என்னும் பாரதியார் நல்லுரைக்கிணங்க அயல்நாட்டாராலும் போற்றத்தகும் புலமையும் பிறர் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகம் வணங்கச் செய்யும் தமிழ் வளமையும் மிக்க அருந்தமிழ்ச் சான்றோர் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள்.   தமிழ்நாட்டில் சென்னை மாநிலக்கல்லூரியில் 30 ஆண்டுகளும் புறநகர்க்கல்லூரிகளில் 5 ஆண்டுகளும் கல்விப்பணி ஆற்றியதுடன் ஓராண்டுக்காலம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். அங்குப் பணியாற்றுகையில் அப்பல்கலைக்கழகம் சார்பில் பிற அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும்…

ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை1/2 – புகழேந்தி தங்கராசு

1/2     ஒரு தலைமுறையையே தலைநிமிரச் செய்த பிரபாகரனின் பிறந்தநாளை, எண்ணூர் அசோக்கு இலேலண்டுத் தொழிலாளர்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வை.கோ கொண்டாடியதுதான், இந்த வாரத்தின் நெகிழ்ச்சி நிகழ்ச்சி. காலை ௭ (7.00) மணிக்குத் தொழிலாளர்களுக்கு இனிப்புருண்டை (இலட்டு) வழங்கத் தொடங்கியவர், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குக் கொடுத்து முடிக்கிற வரை சலிக்கவேயில்லை. இத்தனைக்கும் தொழிலாளத் தோழர்கள், வை.கோ-விடமிருந்து இனிப்புப் பெறுவதைக் காட்டிலும், அவருடன் கைக்குலுக்குவதில்தான் அதிக அக்கறை காட்டினர்.  அசோக்கு இலேலண்டிலிருந்து மகிழ்ச்சியுடன் திரும்பிய ஓரிரு மணி நேரத்தில், யாழ்ப்பாணம் அருகே ௧௮ (18)…

மருத்துவமாமணி கண்ணப்பன் போற்றி விழாக்கள்

மருத்துவமாமணி கண்ணப்பன் அவர்களின் 81-ஆம் பிறந்தநாள் விழா & 5-ஆம் நினைவுநாள்   மறைமலை இலக்குவனார், திருக்குறள் மோகனராசு,பெங்களூர் மருத்துவர் நாகேசு, பால.சீனிவாசன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். வாசுகி கண்ணப்பன் விழாவைச் சிறப்பாக நடத்தினார். இசைப்பாவலர் இரமணன், பா.ச.க.தலைவர் இல.கணேசன், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.தாண்டவன், மு.சிவச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 02 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 1 – தொடர்ச்சி)  02 யார்க்கும் அஞ்சாதே! எதற்கும் அஞ்சாதே!   இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் வாழ்ந்த பாரதியார், மக்களின் அடிமைத்தனத்திற்குக் காரணம் அச்சமே என்பதை உணர்ந்தார். எனவே, அச்சப்பேயை விரட்டுமாறு பல இடங்களில் வலியுறுத்துகிறார். அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம் கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம் யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம் (பாரதியார் கவிதைகள் பக்கம் 98/ விநாயகர் நான்மணிமாலை) என்கிறார். எதற்கும் அஞ்ச வேண்டா என்பதற்காக, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதும்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: தொடர்ச்சி) 11   தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க கால வரலாறு சரியாக எழுதப் பெறவில்லை. புலவர்கள் பிறந்த இடம், பிறந்த நாள், வளர்ந்த சூழ்நிலை ஆகியவை முறையாக எழுதி வைக்கப் பெறவில்லை. சிறப்பான செய்யுட்கள் பலவற்றை எழுதிய புலவர்கள் தம்மைப் பற்றி எழுதுவதைத் தற்புகழ்ச்சி என எண்ணி விட்டார்கள் போலும். அதனால் சங்கச் செய்யுட்களைக் கால வரிசைப் படி தொகுக்க முடியவில்லை.   பதிற்றுப் பத்து என்ற செய்யுள் தொகுப்பு மட்டும் இதற்கு சிறிது…

க.இராமகிருட்டிணன் – பாஞ்சாலி அம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு

மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 முற்பகல் 10.00 புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் நூல் வெளியீடு கருத்தரங்கம் புதுவை முரசு  இதழின் இலக்கியப் பணிகள்

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 10 தொடர்ச்சி) புட்க ளிரண்டு பொருந்திப் பாடிக் களிப்பதைக் கண்டு கலந்துரை யாடத் தோழ னின்றிச் சோகமுற் றிடுவள் வானுற வோங்கி வளர்ந்து நெருங்கிய மரங்களின் மீது, மார்புறத் தழுவிய தலைவியைப் போலத் தாவிப் படர்ந்த கொடிகளைக் கண்டு வடித்தனள் கண்ணீர் இவ்வகை நிலையை யெய்திய அரசியும் குருதி தோய்ந்து கொடியிற் சிக்கிய * கைத்துணி யொன்றைக் கண்டன ரவர்கள் கரும்பொன் னிழுக்குங் காந்தம் போன்று அரசியை யீர்க்க அவளும் ஒடி எடுத்தனள்; தைத்து இவளே அன்பின் தோழனுக்…