சோறு போடுமா தமிழென்று கேட்கலாமோ? – யாழ்ப்பாவாணன்

தமிழ் சோறு போடுமா என்றே தமிழர் தான் பாடுகிறார் இன்றே                             (தமிழ்)   வழித்தோன்றல் வழிவந்து வாழ்நாளில் பேசிநின்று வழிநெடுக நடைபோட முயன்றால் தமிழனென்று ஆளுயர அறிவுயரத் தலைநிமிரத் துணைநின்று ஒத்துழைத்த தமிழைச் சோறுபோடு என்கிறாயே! நானும் தான் கேட்கிறேன் இங்கே!                                            (தமிழ்)   சுற்றும் உலகில் பிறமொழி பேசிநின்று உலகம் சுற்றி வருகையில் தமிழனென்று வயிற்றை நிரப்ப வழியேதும் இல்லையென்று சோறு போடுமா தமிழென்று கேட்கலாமோ? நானும் தான் கேட்கிறேன் இங்கே!                                            (தமிழ்)  …

வைகோ சொல்பவர் நீங்கள்தாமா? தடம் புரளலாமா?

வைகோ சொல்பவர் நீங்கள்தாமா? தடம் புரளலாமா? தலைக்குனிவிற்கு ஆளாகலாமா?   தமிழ்நாட்டில் மாறி,மாறி இரு கட்சிகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவும் இரு கட்சிகளுடனும் மாறி மாறிக்  கூட்டணி வைத்து, வெறுப்படைந்ததாலும் வைகோ முதலானவர்கள் புதிய கூட்டணியை உருவாக்க எண்ணுவது தவறல்ல! ஆனால்,    கூட்டணியின் பொதுவான கொள்கைகளுக்காகத் தனக்கே உரிய கொள்கைகளை விட்டுக் கொடுப்பது முறையல்லவே! வைகோ பொதுவான கருத்தொற்றுமைக்காகத் தமிழ்ஈழம் பற்றியும் கூடங்குளம் பற்றியும்பேசப்போவதில்லை என்கிறார். நாளை இவர் ஆட்சி அமைத்தால், கருத்தொற்றுமைக்காக எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுப்பார் என்றுதானே பொருள்.  தமிழ்ஈழத்திற்காகக் குரல்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 7 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி)     மகிழ்ச்சி ததும்பும் மாநட் பினர்போல் வேடிக் கையுடன் வியப்புச் சொற்களும் கலந்துரை யாடியே காத்தவீ ரனுக்குப் பலியிடுங் கடாவைப் பொலிவுறச் செய்து இழுத்துச் செல்லு மேழை களிடை 6 துள்ளுங் கடாப்போல் தோற்றம் விளைத்து அடைந்தனர் முடிவில் யாருமில் காட்டை. அவருடை தங்கை யவனுடை மையலில் வீழ்க் காரணம் விளைத்த பிழைக்கு பழிகொள வெண்ணினர் விழிக ளழன்றன ஒருவரை யொருவ ருற்று நோக்கினர் கைகள் சென்று கைவாள் தொட்டன…

ஆட்சிமொழிக்காவலர் இராமலிங்கனார்புகழ் வெல்க!

ஆட்சிமொழிக்காவலர் இராமலிங்கனார்புகழ் வெல்க!     தமிழகத் தலைமைச் செயலகம் முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வரை இன்றைக்கு ஓரளவுக்காவது ஆட்சிமொழி நிருவாகம் தமிழ்மொழியில் நடைபெறுவதற்கு மூல காரணமாகத் தமிழறிஞர் ஒருவர் இருந்துள்ளார். அவரை இப்போது தெரிந்து கொள்வோம். அவர் பெயர் கீ.இராமலிங்கனார்.   1956ஆம் ஆண்டில் மொழிவழி மாகாணமாகத் தமிழ்நாடு உருவாக்கப்பட்ட போது ஆட்சிமொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்னும், பின்னும் பிரித்தானியரின் ஆங்கிலமொழியே தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. நீண்ட காலத்திற்கு முன்பே ஆங்கில…

நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் வேறுபாடு – பாவாணர்

அகச் செம்மை பண்பாடு; புறச் செம்மை நாகரிகம் நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவது. பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப் பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது. இலக்கணப் பிழையின்றிப் பேசுவதும், எல்லாவகையிலும் துப்புரவாயிருப்பதும், காற்றோட்டமுள்ளதும் உடல் நலத்திற் கேற்றதுமான வீட்டிற் குடியிருப்பதும், நன்றாய்ச் சமைத்து உண்பதும், பிறருக்குத் தீங்கு செய்யாமையும், நாகரிகக் கூறுகளாம்; எளியாரிடத்தும் இனிதாகப் பேசுவதும், புதிதாய் வந்த ஒழுக்க முள்ள அயலாரை விருந்தோம்புவதும், இரப்போர்க்கிடுவதும், இயன்றவரை பிறருக்குதவுவதும், கொள்கையும் மானமுங் கெடின் உயிரை…

இலக்கியவீதி-மறுவாசிப்பில் தமிழ்வாணன்,சென்னை

பேரன்புடையீர் வணக்கம்.  இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்  வரிசையில் இந்த மாத நிகழ்வாக, கார்த்திகை 03, 2046 / 19.11.2015 அன்று மாலை 6.30 மறுவாசிப்பில் தமிழ்வாணன் உறவு நட்போடு வருகை தர வேண்டுகிறோம்.

மானமிகு மறவன் இலக்குவனார் ! – மா. கந்தையா –செயா

 தோற்றம்: கார்த்திகை 01, 1940 / நவம்பர் 17, 1909 மறைவு ஆணி 18, 2004 / செத்தம்பர் 03, 1973   மானமிகு  மறவன்  இலக்குவனார் ! ஏனத்தைத்  தூக்கிக்கல்லுக்கு  எழுச்சிப்பா  பாடும்மண்ணில் வானத்தை நோக்கி வணங்கி வழியனுப்பும்மன ஊனமுற்றோர் உலவிடும் ஈனமனத்தாரை இனமொதுக்கி வானமே வீழ்ந்தாலும் தான்வீழா தகைமையாளர் ! ” அள்ளிக்கொள் அருந்தமிழைவிலை சொல்லிக்கொடு ” எனப்பெரும் புள்ளிகள் கூறும்போதுஎரி கொள்ளியால் சுட்டெரிப்பார் . வெள்ளிநிற மீசைமேலுதட்டில் துள்ளித்துடிக்கும் சினம்கொண்டால் அள்ளி யணைத்துத்தமிழை சொல்லிவளர்ப்பதில் தாயாவாள் ! வாய்மையே வெல்லுமென்ற…

மொரிசீயசில் கவினியனின் குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளியீடு

  தமிழ் இலக்கிய வரலாற்றின் தவிர்க்க இயலாப் பெயர் வைதேகி எர்பர்ட்டு. தூத்துக்குடி தந்த நன்முத்தான திருவாட்டி வைதேகி எர்பர்ட்டு, சங்க இலக்கியங்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். நூலாக்கத்துடன் சங்க இலக்கியப் பரப்புரைக் களமும் நடத்தும் வைதேகி அம்மையார், எந்தப் பொதுநிறுவனத்திடமிருந்தும் உதவித்தொகை பெறாமல், தன்னுடைய சொந்தச்செலவில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வருகிறார். இதைப்பின்பற்றி, கவினியன், தமிழுலகு நன்மை எய்த குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பைக் கொணர்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியது.   இவ்வாறான 93 குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பை, மொரிசீயசு தமிழன்பர் கவினியன், நூலாக…

இராசபக்சவை வீழ்த்தியது எது? – திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு

  இராசபக்சவை வீழ்த்தியது எது?   “எமது விடுதலை தொடர்பாக இலங்கைக் குடியதிபர்(சனாதிபதி) மைத்திரிபாலா கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாததால், காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மீண்டும் தொடங்குகிறோம். இறப்புக்குப் பிறகு, எங்கள் உடல்களை யாழ் பல்கலைக்கழக மருத்துவப் புலத்தில் ஒப்படைக்கும்படி மைத்திரியைக் கேட்டுக்கொள்கிறோம்! எம் மாணவர்களின் மருத்துவ ஆய்வுகளுக்கு எம் உடல்கள் பயன்படட்டும்….”  இப்படியோர் உருக்கமான அறிவிப்புடன் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார்கள், இலங்கையின் ௧௪ (14) சிறைகளில் நீண்ட காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ௨௧௭ (217) தமிழ் அரசியல் கைதிகள்.  அத்தோபர் இறுதியில், தங்களது விடுதலை…

கவிதைக்கு அழிவில்லை! – -முனைவர் இராம.குருநாதன்

சீறிப் பாய்வேன் தமிழாலே! காற்றும் மழையும் அழித்தாலு்ம் – என் கவிதைக் கனலுக் கழிவில்லை ஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை – இனி உறைக்குள் போட மனமில்லை மண்ணும் மலையும் சரிந்தாலும் – என் மானிடப் பார்வைக் கழிவில்லை விண்ணும் கடலும் திரண்டாலும் – என்னுள் விரியும் கவிதைக் கழிவில்லை வெட்டிப் பொழுது போக்குவதை – நான் வீணாய் என்றும் கழித்ததில்லை கொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி -என்றும் கூர்மை வாளாய் க் களமிறங்கும் சொல்லும் பொருளும் உள்ளவரை – என்னுள் தொடரும் சமூகச் சிந்தனைகள் வெல்லும்…