நிறைநலம் மரபு மருத்துவமனை தொடக்க விழா – மரு.வ.நா.தன்மானன்

ஐப்பசி 13, 2046 வெள்ளி அக்.30, 2015  காலை 9.00 அம்மன்கோயில் மேற்குத் தெரு, வடபழனி, சென்னை [தி.இரா.நினைவு(எசு.ஆர்.எம்.) மருத்துவமனை அருகில்]

சாதி வெறி அரசியல் எதிர்ப்பு, சாதி ஒழிப்பு மாநாடு

மா.இலெ.பொதுவுடைமைக்கட்சி மக்கள் விடுதலை இரசியப் புரட்சி நாள் ஐப்பசி 21, 2046 சனி  நவ.07, 2015 பிற்பகல் 2.30 – இரவு 9.00 மாதவரம், சென்னை தோழரே! வணக்கம். நவ -7 சென்னை, மாதவரத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! மீ. த. பாண்டியன் (Mee.Dha. Pandian)  

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 04 : ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015 தொடர்ச்சி) 4   தமிழர் மானத்தோடு வாழ வழிகாட்டியவர் தன் மதிப்பு இயக்கத்தலைவர் பெரியார் ஆவர். அதனால் இலக்குவனாருக்குப் பெரியாரிடம் பற்று ஏற்பட்டது. தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவனார்க்கு ஆசிரியர். இவர் சொல்வன்மை படைத்தவர். மாணவரிடையே தூய தமிழ்ப் பற்றை வளர்த்து வந்தார். தன்மதிப்பு இயக்கப் பற்றாளராக விளஙகினார். அதனால் ஆசிரியரைப் பின் பற்றி மாணவராகிய இலக்குவனாரும் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அதன் வழி நடந்தார்.   நீதிக்கட்சி பிராமணரல்லாதாரை எல்லா…

ஆரியக் கலாம் – முகிலன்

ஆரியக் கலாம்     (குறிப்பு: இறந்தவரை பற்றித் தூற்றும் எண்ணம் கொண்டு நான் இந்தக் கட்டுரையை வடிக்கவில்லை. கலாம் போல் இன்னும் பல அடிமைகள் உள்ளனர். அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில்தான் என் பணி செய்கிறேன்) “பிறர்க்கென வாழ்ந்து மடிவது மலையை விடக் கடினமானது, தனக்கென வாழ்ந்து மடிவது இறகை விட எளிதானது”. என்பார் மாபெரும் மக்கள் தலைவர் தோழர்.மாசேதுங்கு.   கடந்த ஆடி 11, 2046 /27-07-2015இல் இந்திய ஒன்றியத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இறந்து விட்டார். அதையொட்டி இந்திய…

வலைமச் சொற்கள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015) 5 ஐ.) இலி /இன்மை(null) நல்(null)  என்றால் வெறுமை அல்லது ஏதுமற்ற என்று பொருள்.  நல் என்னும் தமிழ்ச்சொல்லிற்கு நல்ல என்று பொருள்.  ஆனால், ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தினால் நல்ல என்னும்  பொருந்தாப் பொருள் அல்லவா தோன்றும். நல் என்று தமிழ்வரிவடிவிலேயே பயன்படுத்திவிட்டு நல் என்றால் நல்ல அல்ல என்று சொல்வதால் பயனில்லை. அந்த இடத்தில் வேண்டுமென்றால் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கலைச் சொற்களைப் பயன்படுத்தும் இடங்களில் படிப்போர் தவறாகவே எண்ணுவர்….

இலக்கியவீதியின் மறுவாசிப்பு – இரா.கி.இரங்கராசன்

பாரதியவித்யா பவன் கிருட்டிணா இனிப்பகம் ஐப்பசி 13, 2046 வெள்ளி அக்.30, 2015 மாலை 6.30, சென்னை இலக்கிய அன்னம் விருது: மது.இராசேந்திரன் வணக்கம். ‘இலக்கியவீதி’யின் – ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த மாதம், ‘மறுவாசிப்பில்  இரா. கி.இரங்கராசன்’. தொடர்ந்து தங்கள் வருகையால் இலக்கியவீதி அமைப்பைப் பெருமைப்படுத்தும்  தங்களைனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.

தமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்டிய முதல்வருக்கு நன்றியும் வேண்டுகோளும்

தமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்டிய முதல்வருக்கு நன்றியும் வேண்டுகோளும்   எழும்பூர் ஆல்சு சாலையின் பெயரைத் ‘தமிழ்ச்சாலை’ என மாற்றி அதற்கான  பெயர்ப் பலகையைக் கடந்த திங்கள் முதல்வர் திறந்து வைத்தார்.   நாம் இதற்காக நன்றியையும் மேற்கொண்டு வேண்டுகோளையும் தெரிவிக்கிறோம்.   திரு மா.சுப்பிரமணியன் சென்னை மாநகரத் தலைவராக இருந்த பொழுது, பெயர்ப்பலகைகள் தமிழில் அமைய நடவடிக்கை எடுத்தார். அத்துடன் நீண்ட காலமாகத் தமிழமைப்பினர் வேண்டுகோள் விட்டவாறு தெருக்களுக்குத் தமிழறிஞர்கள் பெயர் சூட்டவும் முயற்சி மேற்கொண்டார்.  அப்பொழுது, அவருக்குத் ‘தமிழ்க்காப்புக்கழகம்’ சார்பில் பின்வரும்…

தமிழில் தேசியக் கல்வி – பாரதியார்

தமிழில் தேசியக் கல்வி   தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ் மொழியில் நடத்த வேண்டுமென்பது பொருள்.   ஆரம்ப விளம்பரம் தமிழில் பிரசுரம் செய்யப்பட வேண்டும் பாடசாலைகள் தாபிக்கப்பட்டால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமின்றி பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலேயே பெயர் சொல்ல வேண்டும்.  ‘ஃச்லேட்டு’, ‘பென்சில்’ என்று சொல்லக் கூடாது. பாரதியார் : ஞானபாநு, செப்டம்பர் 1915