குறும்புக் கவிதைகள் – தமிழ்த்தேனீ

குறும்புக் கவிதைகள் – தமிழ்த்தேனீ மின்னூலாக்கம்   உரிமை –  எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். “கவிதை “   முகில்களின் இடைவெளிகளில் கதிர் பரப்பி ஒளிக்கதிர்களாய் தோன்றுவது கவிதை. பலகணி வழியே ஒளி வெள்ளமாய்ப் பெருகி வருவது போன்றது கவிதை.   மேற் கூரையின் இடைவெளிகளில் ஊடுருவி வரும் ஒளிக் கோலங்கள்தான் கவிதை.  ஒரு புள்ளியில் தொடங்கி முழுமை பெறும் கோலம் போன்றது கவிதை.  சிற்றுளியின் வண்ணத்தால் சிற்பியின் எண்ணத்தால் கற்பனையால் விளையும் சிற்பம் போன்றது கவிதை. கவிதை எனும் சொல்லிலேயே கற்பனை விதை அடங்கி…

தமிழ் இந்து நடத்தும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

அன்பினிய நண்பர்களுக்கு., வணக்கம். மாமேதை அப்துல் கலாம் குறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நடத்திய ஓவிய – கட்டுரைப்போட்டிகளைத் தொடர்ந்து தற்போது – 9,10-ஆம்  வகுப்புகளுக்கு கட்டுரைப் போட்டியையும், 11,12-ஆம் வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டியையும் நடத்துகிறது.   தங்கள் பள்ளிப் பிள்ளைகள் இப்போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வென்றிட ஆவண செய்யுங்கள்.   கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்து – = மு.முருகேசன், முதுநிலைத் துணை ஆசிரியர் தி இந்து -தமிழ் நாளிதழ், கத்தூரி கட்டடம் 124, வாலாசா சாலை, சென்னை – 600 002. பேசி: 74013 29364….

முதலமைச்சர் கணிணித்தமிழ் விருதின் முதல் விருதாளர் தெய்வசுந்தரம்

பேரா.முனைவர் ந.தெய்வசுந்தரத்திற்கு முதலமைச்சர் கணிணித்தமிழ் விருது வழங்கப் பெற்றது!  முதலமைச்சர் கணினித்தமிழ் விருது (2013-14) வழங்கும் விழா புரட்டாசி 25, 2046 /  12-10-2015 திங்கள்கிழமை சென்னை தமிழ்நாடு அரசுத் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருது வழங்கினார். இவ்விருது தோற்றுவிக்கப்பட்டதும் முதலாவதாக விருதினைப் பெறும் பெருமைக்குரியவர் பேரா.ந.தெய்வசுந்தரம். தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர், சமூகவளர்ச்சித்துறை அமைச்சர், செயலர், தமிழ்வளர்ச்சித்துறைச் செயலர், தமிழ்நாடு அரசு தலைமைச்செயலர், முதலமைச்சரின் அறிவுரைஞர், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். ‘மென்தமிழ் – தமிழ்ச்சொல்லாளர் ‘ என்ற தமிழ்க்கணியனை(மென்பொருளை) உருவாக்கியதற்காக…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 03 : ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 100, புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 தொடர்ச்சி) இயல் – 2 இலக்குவனார் வரலாறும் கவிதை தோன்றிய சூழலும்   வரலாறு, மனித வாழ்வுக்கு மிக இன்றியமையாதது. வரலாறு நடந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது. அதாவது உள்ளதை உள்ளபடி கூறுவதாகும். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் இன்று வரலாறாக மலர்கின்றன. உலக வரலாறு, அரசியல், வரலாறு, பொருளியல் வரலாறு, சமூக வரலாறு, அறிவியல் வரலாறு, மொழி வரலாறு, கவிதை வரலாறு என வரலாறு பல வகைப்படும். தனிமனித வரலாறு உலக வரலாற்றுக்கு உறுதுணையாக…

சண்டைகள் அனைத்தும் வடக்கில் இருந்துதான் வருகின்றன-அமைதி ஆனந்தம்

சண்டைகள் அனைத்தும் வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி வருகின்றன!   மதச் சண்டைகள், சாதிச் சண்டைகள், இனச் சண்டைகள் அனைத்தும் வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி வருகின்றன. இலங்கைக்கும் ஊடுருவுகின்றன. இதற்கு மூல காரணம் சமற்கிருதம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? சமற்கிருதம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை இந்தியத் துணைக்கண்ட வரலாற்றைக் கூர்ந்து கவனித்தாலே புரிந்து கொள்ளலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்வாறுதான் நடைபெற்று வருகின்றது.   இந்தியத் துணைக் கண்டத்தில்  பல மொழிகள் தோன்றியதற்கும் பல மதங்கள் உருவானதற்கும் பல சாதிகள் ஏற்பட்டதற்கும்…

தமிழினியின் கவிதை

  சித்திரை 11, 2003 – ஆனி 01, 2046 : 23.04.1972 – 18.10.2015 போருக்குப் புதல்வரைத் தந்த தாயாக வானம் அழுது கொண்டேயிருந்தது. வெடியதிர்வுகளின் பேரோசைகளால் குடி பெயர்ந்தலையும் யானைக் கூட்டங்களாக இருண்ட முகில்களும் கூட மருண்டு போய்க் கிடந்தன. பகலை விழுங்கி தீர்த்திருந்த இரவின் கர்சனை பயங்கரமாயிருந்தது அம்பகாம பெருங்காட்டின் போர்க்களத்தில். காதலுறச் செய்யும் கானகத்தின் வனப்பை கடைவாயில் செருகிய வெற்றிலைக் குதப்பலாக சப்பிக்கொண்டிருந்தது யுத்தம். மீளாப் பயணம் சென்ற தோழி விடைபெற கை பற்றி திணித்துச் சென்ற கடதாசி…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 – ஒளிப்படங்கள்

  கணிணிப்  பயன்பாட்டிற்காகத் தமிழ் எழுத்துருக்களை வெவ்வேறு   தோற்றத்தில் உருவாக்கிவருவதை விரிவாக்கவும் அதற்கான தேவையை உணர்த்தவும்  புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 நாள்களில் நடைபெற்ற தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 இல் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் வருமாறு. பட உதவி :  நூ த.உலோ. சு. & அகரம் படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!

தமிழிசையாயிருந்தும் அயலிசைக்கு அடிமையாகும் தமிழ்மக்கள்!

தமிழர் வாழ்வில் நிகழும் இசைவிழாக்கள் சில பிள்ளைப் பேற்று விழா 2. வளைக்காப்பு விழா, 3. பிறப்பு விழா, 4. தொட்டில் ஆட்டும் விழா 5. பாலூட்டும் இசை விழா 6. சோறூட்டும் இசை (நிலாப் பாட்டு)விழா 7. ஆடை அணிவிக்கும் விழா 8. அணிகலன் அணிவிக்கும் விழா (காது குத்தல்) 9. பள்ளிக்கு வைக்கும் பாட்டிசை 10. பந்தடிப்பாட்டு, அம்மானைப் பாட்டு, கழற்சிப் பாட்டு (கழங்கு) 11. உரம் வைத்தல் (எருப் போடல்) 12. நாற்று நடுதற் பாட்டு 13. நீர் இறைத்தல்…

விசயலக்குமி இளஞ்செழியன் படத்திறப்பு

திருவாட்டி விசயலக்குமி இளஞ்செழியன் படத்திறப்பு புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015 காலை 10.00 பெரியார் நகர் 5 ஆவது தெரு, மடிப்பாக்கம், சென்னை 600 091  பெரிதாகக் காணப் படங்களை அழுத்தவும்!

புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு

புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு   உலகத்     திருக்குறள் மையத்தின் எதிர்காலத் திருக்குறள் எழுச்சி விழா      வள்ளுவர்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்டாசி 30, 2046 / 17.10.2015   காலை 10.00மணிக்கு நடைபெற்றது.   இந்நிகழ்வில் ஆய்வியல் நிறைஞர், புலவர் தி.வே. விசயலட்சுமி   எழுதிய `திருக்குறள் அலைகள்’, `ஒரு வரியில் வள்ளுவம்’  என்ற இரு  நூல்கள்   மேனாள்   துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டன.   அமுதசுரபி ஆசிரியர் முனைவர்திருப்பூர் கிருட்டிணன் நூல்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.   பேராசிரியர் முனைவர்…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 15 : இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 100, புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 தொடர்ச்சி)   15 காப்பிய இலக்கியங்கள் அட்டவணை – 03   பெருங்கதை உரை மூலப்பக்கத்திலேயே உருவாகிறது. பிற வற்றிற்குத் தனிப் பக்கமாகப் பெட்டிச் செய்திபோல் வருகின்றது.   அடுத்துள்ள சமய இலக்கியப் பகுதிகளில் தேடுபொறி வாய்ப்பு குறித்துத் தனித்தனியாகக் காணாமல் அடுத்துவரும் அட்டவணை மூலம் காணலாம். (தேடுதல் தொடரும்) -இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை, இசை, இசையே!

தமிழர் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை, இசை, இசையே தமிழகத்தில் ஒரு குழந்தை பிறந்த நாள் தொட்டு அதாவது அது தன் முதலாவது உயிர்க்காற்றை இழுக்க ஆரம்பித்தது முதல் தொட்டு, இறுதி மூச்சு வரை தமிழ் இசை அதன் வாழ்க்கையோடு ஒன்றித்து நிற்கிறது. ஏன்? அது உயிர்நீத்த பின்னர்கூட அதன் தாயும் உறவினரும் இசைக்கும் ஒப்பாரிப் பாடல் அதன் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் எல்லாச் சடங்குளிலும் பிறப்புத்தொட்டு இறப்பு வரை வாழ்விலும் தாழ்விலும் இசையை இசைத்து…