திருக்குறள் அறுசொல் உரை – 071. குறிப்பு அறிதல் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் தொடர்ச்சி) 02. பொருள் பால்   06. அமைச்சு இயல்  அதிகாரம் 071. குறிப்பு அறிதல்    பிறரது மனஉணர்வுகளைக்  கண்கள், முகங்கள்வழி ஆராய்ந்து அறிதல். கூறாமைநோக்கிக்  குறிப்(பு) அறிவான்,  எஞ்ஞான்றும்,      மாறாநீர் வையக்(கு) அணி.        முகக்குறிப்பால் மனஉணர்வை அறிவார்          உலகிற்கே நல்நகை ஆவார்.   ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத்,     தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல்.         மனத்தின் உள்கருத்தை ஐயம்அற,         உணர்வார் தெய்வத்திற்குச் சமம்.      குறிப்பின் குறிப்(பு)உணர் வாரை, உறுப்பினுள்,      யாது…

பாவம் செய்யாதே! – கடுவெளிச் சித்தர்

பாவம் செய்யாதே! பாபஞ்செய்யாதிரு மனமே நாளைக் கோபச்செய்தேயமன் கொண்டோடிப்போவான் பாபஞ்செய்யாதிரு மனமே. – கடுவெளிச் சித்தர்

நந்தமிழர் நாடெல்லாம் தமிழே பேசும்! – பாவலர் கருமலைத் தமிழாழன்

விடியலென நீயெ ழுந்தால் ! அஞ்சியஞ்சி வாழ்கின்ற அவலம் நீங்கும் அதிகார ஆர்ப்பாட்ட அல்லல் நீங்கும் விஞ்சிநிற்கும் கையூட்டின் நஞ்சு நீங்கும் விளைந்திருக்கும் ஊழல்முட் புதர்கள் நீங்கும் கெஞ்சிநின்று கால்வீழும் கொடுமை நீங்கும் கேடுகளே நிறைந்திருக்கும் ஆட்சி நீங்கும் கொஞ்சுமெழில் இன்பமுடன் நலங்கள் வாழ்வில் கொலுவேறும் விடியலென நீயெ ழுந்தால் ! செந்தமிழே கோலோச்சும் ! துறைகள் தோறும் செழிக்கின்ற ஆட்சியாகும் ! செவ்வாய் செல்லும் சிந்தனையின் அறிவியலும் தமிழே யாகும் சிரிக்கின்ற மழலைவாய் அம்மா வாகும் சந்தமிகு தமிழ்வழியில் கல்வி யாகும் சதிராடும்…

தண்ணீர்க் கனவு – மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா

தண்ணீர்க் கனவு மணலைப்பறி கொடுத்துவிட்டு ஏதிலியாய் நிற்கிறது ஆறு! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் ஆற்றினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ? -மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா

தாய்மை – காரைக்குடி பாத்திமா அமீது

தாய்மை  இறைவனைக் காண நினைத்தேன் உன்திருமுகம் காணும் முன்பாக உணரத் துடித்தேன் சொர்க்கமதை உன்னிரு  பாதங்களில் பணியும் முன்பாக. எழுத சொற்கள் இல்லையம்மா வளர்த்த விதம் சொல்வதற்கு பாடிடச் சொற்கள் கிடைக்கவில்லை பாடுபட்டு படிக்க வைத்ததற்கு! விறகடுப்பின் புகையில்நீ வெந்துஎம் பசிபோக்கினாய்! வியர்வை நீரூற்றி எங்களை வளர்த்து ஆளாக்கினாய்! பட்டங்கள் பெறவைத்துப் பார்த்துப் பூரித்துப்போனாய்! வெற்றிகள் பலகொடுத்து வேதனைகளை விரட்டினாய்! கவிதைகளால் தாலாட்டி கண்ணுறங்கச் செய்தாய்! வருணனைகள் பலதந்து என்னுள் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்! பாரங்களை இறக்கிட உன் பாதங்கள் வேண்டும் இனிதே தூங்கியெழ உன் மடிவேண்டும் ஒரு…

திருக்குறள் அறுசொல் உரை – 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 069. தூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ஆட்சியரிடம் பழகும் பொழுது  கடைப்பிடிக்க  வேண்டிய  முறைகள்.   அகலா(து), அணுகாது, தீக்காய்வார் போல்க,      இகல்வேந்தர் சேர்ந்(து)ஒழுகு வார்.         மாறுபட்டு ஆள்வாரோடு விலகாமல்,         நெருங்காமல் ஆய்ந்து பழகு.   மன்னர் விழைய விழையாமை, மன்னரால்      மன்னிய ஆக்கம் தரும்.      ஆட்சியார் விரும்புவதை விரும்பாமை,         நிலைக்கும் நன்மைகள் தரும்.     போற்றின், அரியவை போற்றல்; கடுத்தபின்,      தேற்றுதல்…

சிந்தனையை விதைப்பது எழுத்தாளர்களின் கடமை

சமூக மாற்றத்திற்கான சிந்தனையை விதைப்பது  எழுத்தாளர்களின் கடமையாகும்  வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் உரை            வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கட்டுரை நூல்கள் அறிமுக விழாவில் (புரட்டாசி 17 / அக்.04) சமூக மாற்றத்திற்கான சிந்தனையைத் தனது படைப்புகளின் வழியே விதைப்பது எழுத்தாளர்களின் கடமையாகும் என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசினார்.          கிளை நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் பா.சீனிவாசன்,…

எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ! – நந்திக்கலம்பகம்

எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ! அனைத்துலகில் பிறப்பும் நீ; அனைத்துலகில் இறப்பும் நீ; அனைத்துலகில் துன்பமும் நீ; அனைத்துலகில் இன்பமும் நீ; வானோர்க்குத் தந்தையும் நீ; வந்தோர்க்குத் தந்தையும் நீ; ஏனோர்க்குத் தலைவனும் நீ; எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ! – நந்திக்கலம்பகம்

திருக்குறள் அறுசொல் உரை – 069. தூது : வெ. அரங்கராசன்

(அதிகாரம்  068. வினை செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 069. தூது தூதரது கல்விஅறிவு, தூதுஇயல் அறிவு, செயல்உறுதி, சொல்முறை.       681.  பண்(பு)உடைமை, தூ(து)உரைப்பான் பண்பு.               நாட்டுப்பற்றும், உயர்குடிப் பிறப்பும்,          பண்பும், தூதர் இலக்கணம்.   அன்(பு),அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை, தூ(து)உரைப்பார்க்(கு)             இன்றி யமையாத மூன்று.         அன்பும், அறிவும், சொல்ஆய்வுத்         திறனும், தூதர்க்கு மிகத்தேவை. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல், வேலாருள்      வென்றி வினைஉரைப்பான்…

பன்னாட்டு நீதிப் பொறிமுறை வேண்டும் கூட்டறிக்கை

  ஈகச் சுடர் திலீபன் நினைவு நாளில் (2015 செப்டம்பர் 26) ஒரு கூட்டறிக்கை இருபத்தெட்டு ஆண்டுகள் முன்பு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தாலும் இந்தியப் படையிறக்கத்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்தித்த நெருக்கடியை வெற்றி கொள்ளச் சொட்டு நீரும் அருந்தாமல் பட்டினிப் போர் புரிந்து இன்னுயிர் தந்த திலீபன் நினைவாக – திலீபனின் 28 ஆவது நினைவு நாளான சென்ற 26.09.2015 அன்று மாலை 6  மணியளவில்  சென்னை  தியாகராய நகரிலுள்ள செ. தெ. தெய்வநாயகம் பள்ளியில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய  “வேண்டும்…

திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 தொடர்ச்சி) 2 அரணறை – safety room   ‘அரண்’ எனத் திருக்குறளில் தனி அதிகாரமே(எண் 75) உள்ளது. இவ்வதிகாரத்திலுள்ள ஒவ்வொரு குறளிலும் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளதுபோல், பிற அதிகாரங்களிலும் 4 இடங்களில் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் ‘அரண்’ 31 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது; ‘அரணம்’ என்பது 13 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. படைத்துறையில் இடம் பெற்றுள்ள முதன்மையான கலைச்சொற்களில் ஒன்று அரண். அரண்சூழ்ந்த மனையையே அரண்மனை என்றனர். கரூவலங்களில் உள்ள காப்பு அறையை அரணறை –…