சென்னையில் ‘குடியம்’ ஆவணப்படம் திரையிடல்

புரட்டாசி 02, 2046 /19-09-2015  மாலை 05.00 தாகூர் திரைப்பட மையம் இராசா அண்ணாமலைபுரம்   திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரிலிருந்து 20  புதுக்கல் தொலைவில் உள்ள குடியம் எனுமிடத்தில் பழையகற்காலத்திலுள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அந்தப் குதிகளிலுள்ள குகைகள், பாறையமைவுகள்   2 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை விளக்கும் ஆவணப்படமே இந்தக் ‘குடியம்’. இதன் மூலம் தமிழர்களின் தொன்மம் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறியலாம். இங்குள்ள ஒவ்வொரு பாறையும் 140  பேரடி(மீட்டர்) உயரமுள்ளவை. இதுகுறித்து ஆவணப்படத்தில் அறிஞர்கள் கருத்துரைகள் இடம் பெறுகின்றன. …

இலக்கு & பாரதிய வித்யாபவன் : சிகரம் நம் சிம்மாசனம்

புரட்டாசி 01, 2046 / செப். 18, 2015 மாலை 06.30 வணக்கம். இளைஞர் நலனில் அக்கறைக் கொண்ட  ‘இலக்கு‘,   ‘தமிழ் வழி ஊடகக் கல்வியில் இருக்கிற வேலை வாய்ப்புகளை‘ப் பற்றி அறிந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறது. அழைப்பை உங்கள் உறவு நட்புடன் பகிர்ந்துதவ வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன், ப. சிபி நாராயண். ப. யாழினி.   

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 6 – இலக்குவனார் திருவள்ளுவன்

6 3.பணித்தரவுக் குழு:   த.இ.க.கழகத்தின் பணிகள் சரியான முறையில் மக்களுக்குத் தரப்படுவதில்லை. வெளிப்படுத்தும்பாங்கில் உள்ள தவறு சில இடங்களில் காரணமாக அமைகின்றது. தொடக்கப் பணிகளைத் தளத்தில் கொடுத்துவிட்டு அப்பணிகள் வளர்கையில் அல்லது பெருகுகையில் அவற்றைச் சேர்க்காமை பல இடங்களில் காரணமாக அமைகின்றது. சான்றாக இதன் தளத்தில் முனைவர்பட்ட ஆய்விற்குரிய தரவு நூல்கள் உள்ளன என்பதுபோல் குறிப்பும் தொடர்பில்லாமல் வழிகாட்டியும் தமிழ்ப்பல்கலைக்கழக முனைவர் பட்டமும் தரப்படும் என்பன போன்ற குறிப்புகளும்தான் உள்ளன. மாறாக முனைவர் பட்டம் ஆய்விற்குப் பதிவும் வழிகாட்டியும் தரவு நூல்களும் வழங்கப்பெற்று,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 050. இடன் அறிதல்

(அதிகாரம் 049. காலம் அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 050. இடன் அறிதல் வலிமையை, காலத்தை, ஆய்ந்தபின்,  உரிய இடத்தைத் தேர்ந்துஎடுத்தல்.   தொடங்கற்க எவ்வினையும், எள்ளற்க முற்றும்,       இடம்கண்ட பின்அல் லது.         எந்தச் செயலையும் இகழற்க;         இடத்தைக் கண்டபின், தொடங்குக.   முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும், அரண்சேர்ந்(து)ஆம்       ஆக்கம், பலவும் தரும்.    வலியார்க்கும், கோட்டையின் பாதுகாப்பும்         நன்மையும் நல்இடம்தான் தரும்.   ஆற்றாரும், ஆற்றி அடுப; இடன்அறிந்து,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 049. காலம் அறிதல்

(அதிகாரம் 048. வலி அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 049. காலம் அறிதல்   செய்யத் துணிந்த செயலுக்குப் பொருந்தும் காலத்தை ஆராய்தல்   பகல்வெல்லும், கூகையைக் காக்கை; இகல்வெல்லும்      வேந்தர்க்கு, வேண்டும் பொழுது.     காக்கை, கோட்டானைப் பகல்வெல்லும்;        ஆட்சியார்க்கும் காலம் மிகத்தேவை.   பருவத்தோ(டு) ஒட்ட ஒழுகல், திருவினைத்,       தீராமை ஆர்க்கும் கயிறு.         காலத்தோடு பொருந்திய  செயற்பாடு,         செல்வத்தைப் கட்டிக்காக்கும் கயிறு..   அருவினை என்ப உளவோ….? கருவியான்,…

85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்

பெரும்பாலும் பெரும்பான்மைப் பதிவுகள் சரியில்லை.  இத்தகவலைப் பகிர்ந்த கரிசிற்காக(-பாவத்திற்காக)ப் பலரும் தளத்தினருடன் தொடர்பு  கொள்ளாமல் நம்மையே துன்புறுத்துகின்றனர். எனவே இணைப்பு முகவரிகளை எடுத்து விட்டோம். பட்டியல் தகவலுக்காகத் தரப்பட்டுள்ளது. எங்கும் கிடைத்தால் காணலாம். சித்தர் நூல்கள் தொடர்பாக் சில தளங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் தேடிக்காண்க! –  அகரமுதல 85 சித்தர் நூல்கள்: இப்போது பதிவிறக்கம் செய்யலாம். உறவுகளே கீழே உள்ள நிறைய சித்தர் நூல்கள் மிகவும் அரிதான நூல்கள். …………….             …………..      ………….. …

புதிய புறநானூறு அறிஞர் அண்ணா – பாவலர் கருமலைத்தமிழாழன்

அண்ணாவே வாழ்க! வாழ்க ! போர்முரசே தமிழர்தம் மானம் காத்த போர்வாளே ! சூழ்ச்சிகளைச் செய்து வந்த பார்ப்பனிய பகைமுடித்த படையின் ஏறே ! பகுத்தறிவு பெரியாரின் கொள்கை தாங்கி ஊர்முழுதும் குவிந்திருந்த மூடக் குப்பை உதவாத சாத்திரத்தை அறிவுத் தீயால் சேர்த்தெரித்த எழுகதிரே ! சரித்தி ரத்தைச் செதுக்கிவைத்த புதுவரியின் புறநா னூறே ! பேச்சாலும் எழுத்தாலும் திராவி டத்துப் பெருமையினை உணரவைத்து வளர்த்து விட்டாய் கூச்சலிட்டே வந்தஇந்திப் பெண்ணின் நாவைக் கூர்தமிழ்வா ளால்வெட்டி விரட்டி விட்டாய் ஓச்சிநின்ற வடமொழியின் கலப்பை நீக்கி…

முன்னணியில் மூவர் – கவிஞர் சகன்

முன்னணியில் மூவர் பாரதி இனிமையும் வளமும் கொண்ட எழில் மொழி தமிழே! அன்புக் கனிவுடன் உலகமெல்லாம் கலந்துற வேற்கத் தக்க தனிமொழி! சுவைமிக் கோங்கித் தனினிறை வெய்தி நிற்கும் பனிமொழி! வாழ்த்த வந்த பாரதிப் புகழும் வாழி! பெரியார் பொன்னான தமிழர், நாட்டுப் புகழினைக் காற்றில் விட்டுத் தன்மானம் சாய விட்டுத் தமிழ்மொழிப் பற்றும் விட்டுப் புன்மானப் புழுக்க ளென்னப் புதைந் தொழிந் திருந்த போழ்து தன்மான இயக்கந் தன்னைத் தழைத்திடத் தந்தான் தந்தை! அண்ணா ‘‘அன்னவன் பாதை காட்ட அவன் வழி முரசு…

கொள்கைச் சிற்பி அண்ணா – கதி.சுந்தரம்

தமிழ்ப் பகையை மாய்க்கும் வேங்கை அறநெறியைப் பரப்புகின்ற தலைவர் அண்ணா; அருந்தமிழர் பெருமையதை முழக்கும் வீரர்; திறமை மிகு பேச்சுக்கோர் வடிவம் ஆவர்; சிந்தனை சேர் எழுத்துக்கோ ஒருவர் ஆவார்; குறள் நெறியைப் பரப்புகின்ற கொள்கைச் சிற்பி; கூறுபுகழ்த் தமிழ்ப் பகையை மாய்க்கும் வேங்கை; உரனுடைய மனிதரெலாம் போற்றி நிற்கும்; உயர் தலைவர் தமிழ் அண்ணா வாழ்க! வாழ்க!! – கவிஞர் கதி.சுந்தரம்

பாராளுமன்றில் அறிஞர் அண்ணா – இந்து ஆங்கில நாளிதழ்

  பாராளுமன்றில் அறிஞர் அண்ணா   திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரும்பெருந் தலைவரான அறிஞர் அண்ணா அவர்கள் தமது பாராளுமன்ற முதற் சொற்பொழிவை வெறுப்பிற்கும், பகைமைக்கும், சினத்திற்கும் நடுவண் நிகழ்த்தினார்கள். அன்னார் முதற்பேச்சு இந்திய மேலவையின் வரலாற்றிலேயே ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். தமிழ்ப் பெருங்குடி மக்களால் ‘அண்ணா’ என்று அழைக்கப்படுகின்ற அரிய தலைவர் இவர். பிரிவினையாளர், இந்தித் திணிப்பின் இணையற்ற எதிர்ப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர் என்னும் புகழோடு இந்திய மேலவைக்கு வந்தார்.   அறிஞர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய முதற் பேச்சு ‘சொற்பெருமழை’ என்று பாராளுமன்ற…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 048. வலி அறிதல்

(அதிகாரம் 047. தெரிந்து செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 048. வலி அறிதல் செயற்படும் முன்னம், எல்லாவகை வலிமைகளின், திறன்களின் ஆய்வு.   வினைவலியும், தன்வலியும், மற்றான் வலியும்,       துணைவலியும், தூக்கிச் செயல்        செயல்வலி, தன்வலி, பகைவலி,         துணைவலி ஆராய்ந்து செய்க.   ஒல்வ(து), அறிவ(து), அறிந்(து),அதன் கண்,தங்கிச்       செல்வார்க்குச், செல்லாத(து) இல்.        முடிவதை, செயல்அறிவை ஆய்ந்து         செய்தால், முடியாததும் இல்லை.   உடைத்தம் வலிஅறியார், ஊக்கத்தின்…

இனிதே இலக்கியம் 2 போற்றி! போற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

பண்ணினை இயற்கை  வைத்த பண்பனே போற்றி போற்றி பெண்மையில் தாய்மை வைத்த பெரியனே போற்றி போற்றி வண்மையை உயிரில் வைத்த வள்ளலே போற்றி போற்றி உண்மையில் இருக்கை வைத்த உறவனே போற்றி போற்றி இறைவனைப் பொதுவான பண்புகள் அடிப்படையில் போற்றும் தமிழ்ப்பாடல்கள் எச்சமயத்தவரும் எக்கடவுளை வணங்குவோரும் ஏற்கும் சிறப்பினைப் பெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. எனப்படும் திரு.வி.கல்ணயாண சுந்தரனாரால்  எழுதப்பெற்ற ‘பொதுமை வேட்டல்’ என்னும் நூலில்  இருந்து எடுக்கப்பட்ட பாடல் இது.   இயற்கையோடு இயைந்ததாக இசையை அமைத்த பண்பாளரே போற்றி! பெண்மையின்…