இரண்டகர்களை அடையாளம் காட்டுங்கள்! – வெளிப்படையான மடல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத் தமிழ் இனத்தின் சார்பில் திறந்த மடலாக வேண்டுகோள்களை முன்வைக்கின்றோம்:   தோல்வி என்பது வெற்றிக்கான முதற்படியே. அதுவே முடிவல்ல. தமிழீழ மக்கள் சந்திக்காதவையல்ல, நீங்கள் சந்தித்திருப்பது. ஆகவே தொடர்ந்தும் தமிழீழ மக்களுடன் தமிழீழத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மிகத் தெளிவான சிந்தனையுடன் உறுதியாக செயல்படுங்கள். இவ்வளவுகாலமும் சம்பந்தனும், சுமத்திரனும் மாவை சேனாதிராசா உட்பட கூட்டமைப்பில் உள்ளவர்கள் செய்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இனி வரும்காலங்களிலும் தமிழ்த் தேசியத்தை உதட்டளவில் பேசிக்கொண்டு கூட்டமைப்பு தமிழீழ மக்களிற்கு வஞ்சகங்கள் செய்யும்போது கூட்டமைப்பின் உண்மை முகத்தை…

”காங்கிரசா தமிழைக் காத்தது?” – பாரதிதாசன்

”காங்கிரசா தமிழைக் காத்தது?” செத்தவட மொழியினில் செந்தமிழ் பிறந்ததென்று பொய்த்திடும் வையாபுரிகள் போக்கினையும் ஆதரித்த கத்துநிறை காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக் காத்ததென்று புகன்றனை நாணமில்லையா? செம்பொனிகர் பைந்தமிழைத் தேர்ந்துணரா டீ.கே.சி.யைக் கம்பனென வேஅணைத்த கல்கியினை ஆதரித்த வம்புமிகும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக் காத்ததென வரைந்தனை வெட்கமில்லையா? தாய்மொழி இலக்கணத்தைத் தாக்கிஒரு கம்பனுயர் தூய்கவி அலைக்கழித்துச் சொற்பிழைக்கும் டிகேசியைப் போய்உயர்த்தும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக் காத்ததென்று புகன்றனை அறிவில்லையா? காளையர்கள் ஓதுதமிழ்க் கல்வியையும் பெற்றறியா மூளிகளைக், காப்பிக்கடை முண்டங்களை நல்லஎழுத் தாளரெனும்…

மகிந்தவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – இலீ இரியன்னன்

மகிந்தவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – இலீ இரியன்னன் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த இராசபக்சேவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்” என்று ஆத்திரேலிய பேரவை(செனட் சபை) உறுப்பினர் இலீ இரியன்னன் (Lee Rhiannon) தெரிவித்துள்ளார்.  நடைபெற்றுமுடிந்த எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்னர் அவர் தனது சுட்டுரையில்(டுவிட்டரில்) இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார். தேர்தலில் அடைந்த தோல்வியானது, மகிந்த மற்றும் அவரது உடன்பிறப்புகளை     ஃகேக்கில் அமைந்துள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் போர்க்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முற்படுத்தக்கூடிய வாய்ப்பை அதிகரித்துள்ளது என்றும் அவர் அதில்…

செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 4 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 31, 2046 /ஆக.16, 2015 தொடர்ச்சி) 4 expertise : தனித்துறைச் சிறப்பறிவுத்திறம், சிறப்புத்திறமை, சிறப்பறிவாளர் ஆய்வுரை, சிறப்பறிவுத் திறம் , சிறப்பறிவாளர் கருத்துரை, தொழில் நுட்ப அறிவு, வல்லமை, நிபுணத்துவம், சிறப்புத் திறன் எனப் பலவாகக் குறிப்பிடுகின்றனர். வல்லமை என்பதையே கையாளலாம். மருத்துவ வல்லமை – medical expertise வல்லமை அறிவாற்றல்     – expertised knowledge வல்லமை மேலாண்மை – expertise management இவ்விடங்களில் வல்லுநர் அறிவாற்றல், வல்லுநர் மேலாண்மை எனக் குறி்க்கின்றனர். அது தவறு. வல்லமையுடையவர் வல்லுநர் ஆவார். இங்கே…

செந்தமிழ் நாட்டிலே இந்தியா நன்று? – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழை ஒழிப்பவன் உலகினில் இல்லை தமிழை எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை (தமிழை) தமிழை ஒழிக்க இந்தியை நுழைப்பவர் தம்வர லாற்றுக்கு மாசி ழைப்பவர் (தமிழை) இன்பத் தமிழ்மொழி உலக முதன்மொழி! இந்தி மொழியோ ஒழுங்கிலா இழிமொழி! என்ன போயினும் தமிழர்க்குத் தமிழ்மொழி இன்னுயிர் ஆகும் வாழ்க தமிழ்மொழி (தமிழை) ஒருமொழி ஓரினம் கொண்டதோர் நாடு பிறன் அதில் அடிவைக்க நினைப்பதும் கேடு பெருமொழி அழித்தும் பேரினம் அழித்தும் பெறுவது நாடன்று தன்பிண மேடு (தமிழை) தீதுற ஆள்வதோர் ஆட்சியே அன்று செந்தமிழ் நாட்டிலே இந்தியா…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 4 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 31, 2046 /ஆக.16, 2015 தொடர்ச்சி) 3.] சங்க இலக்கியச் சொல்லடைவு இதில் தேடுபொறி இல்லை. அகரவரிசைப்படி நாம் சொல்லைத் தேடுவதற்கு மாற்றாகச் சொல் தேடுதல் அமைந்தால் எளிதில் பொருள்காண இயலும். நேரம் வீணாவது தடுக்கப்படும். நூற்பக்கங்களில் பக்க எண் தேடல் உள்ளது. 4.] திருக்குறட் சொல்லடைவு ‘திருக்குறட் சொல்லடைவு சொல் தேடல்’ என்னும் தலைப்பு உள்ளது. இதன் மூலம் அகரவரிசையிலான முழுப் பக்கங்களைத்தான் காண இயலும்(பட உரு 20). வேண்டும் சொல்லுக்கான பொருளை எளிதில் காண இயலாது. ஆனால், இதில் பக்க…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 030. வாய்மை

(அதிகாரம் 029. கள்ளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 030. வாய்மை       தீமை இல்லாதவற்றைச் சொல்லலும், பொய்த்தல் இல்லாது வாழ்தலும்.   வாய்மை எனப்படுவ(து) யா(து)?எனின், யா(து)ஒன்றும்,      தீமை இலாத சொலல்.            எச்சிறு அளவிலேனும், தீமை          இல்லாதன சொல்லலே வாய்மை.   பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த      நன்மை பயக்கும் எனின்.        யார்க்கும் குற்றம்இலா நன்மையான          பொய்யும், வாய்மையின் இடத்தது.   தன்நெஞ்(சு) அறிவது, பொய்யற்க; பொய்த்தபின்,…

இரு நூல்களின் அறிமுக விழா , கோவை

கோவையில் நடந்த குண்டு வெடிப்பின் பின்புலத்தைக் கொண்டு தோழர் சம்சுதீன் ஈரா எழுதிய கதை “மௌனத்தின் சாட்சியங்கள்” நூல். கோவிந்த் பன்சாரே மராத்தியில் எழுதிய “சிவாசி கோன் ஃகோட்டா?”-வைத் தோழர் செ.நடேசன் தமிழில் மொழிபெயர்த்த “மாவீரன் சிவாசி – காவித் தலைவனல்ல காவியத் தலைவன்“ நூல்களின் அறிமுக விழா !   ஆவணி 20, 2046 / செப். 06, 2015, ஞாயிறு மாலை 5 மணி திவ்யோதயா அரங்கம், கோவை-25. அறிமுக உரை: ம.கு.உ.க.(பி.யூ.சி.எல்.) மாநிலச் செயலர் வழக்கறிஞர் ச.பாலமுருகன்   மார்க்சியக்…

மூளைச் சலவைக்கு உள்ளாகும் இந்தியர்கள்- மின்னஞ்சல் சிவா ஐயாத்துரை

  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கத்தில்’சுவாசம் சாப்ட்’ விருதுகள் தொழிற்துறை சார்ந்த வல்லுநர்கள் 75 பேர்களுக்கு   வழங்கப்பட்டன. வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ‘சுவாசம் சாப்ட்டு’ தலைவர் கிருட்டிணன், செயல் அதிகாரி கார்த்திகேயன், நிதி அதிகாரி கணேசு, கோவிலுார் ஆதினம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமி, மரு. சுரேந்திரன், வித்யாகிரி பள்ளி முதல்வர் சுவாமிநாதன் பங்கேற்றனர்.    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராகப் பங்கேற்ற மின்னஞ்சலை(‘இ மெயிலை’)க் கண்டுபித்த சிவா ஐயாத்துரை, “வெளிநாட்டவரால் நாம் மூளைச் சலவை செய்யப்படுகிறோம்” என்றார். அவர் உரை வருமாறு:-  …

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! வடக்கு மண்டில மாநாடு

தமிழர் தேசிய முன்னணி நடத்தும் : எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! வடக்கு மண்டில மாநாடு தமிழராய் இணைவோம்! நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2046 கன்னி 9 (26-09-2015) காரி (சனி)க்கிழமை) இடம் : திருவாவடுதுறை டி.என். இராசரத்தினம் கலையரங்கம், இராசா அண்ணாமலைபுரம், சென்னை-600 028. நீதிநாயகம் கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் தமிழர்களே திரண்டு வருக!

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 029. கள்ளாமை

(அதிகாரம் 028. கூடா ஒழுக்கம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 029. கள்ளாமை உள்ளத்தாலும், பிறரது பொருள்களை எள்அளவும் திருட எண்ணாமை.   எள்ளாமை வேண்டுவான் என்பான், எனைத்(து)ஒன்றும்,      கள்ளாமை காக்க,தன் நெஞ்சு.     இகழ்ச்சியை விரும்பாதான், எந்த        ஒன்றையும் திருட எண்ணான்.   உள்ளத்தால் உள்ளலும் தீதே, “பிறன்பொருளைக்,    கள்ளத்தால் கள்வேம்” எனல்.          “பிறரது பொருளைத் திருடுவோம்”        என்று, நினைப்பதும் திருட்டே..   களவினால் ஆகிய…

அந்தமான் தமிழர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்களும் -தீர்வுகளும் : கரிகால்வளவன்

  அந்தமான் தமிழர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்களும் தீர்வுகளும்    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இரண்டாவது பெரிய இனம் நம் தமிழினமாகும். 4 நூறாயிரம் மக்கள் தொகையில் 80,000 பேர் தமிழர்களாவர். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஒரு காலத்தில் வளர்பிறையாகக் கொடிகட்டிப் பறந்த நம் தமிழருக்கு இன்று தேய்பிறையாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தமிழகத்தில்உள்ளது போல இங்குத் தமிழுணர்வு மங்கிப் போய்ச் சாதிய உணர்வு மேலோங்கியது. வரலாறு படைத்தவன் தமிழன்   தீவில் 1940-50களில் உண்மையான உள்ளூர்வாசிகள், சிறைக்கைதிகள், ஆங்கிலேயரால் குடியமர்த்தப்பட்டவர்கள் தீவைவிட்டுப் பூர்வீக மாநிலங்களுக்கும்,…