தொல்காப்பியர் சிலை உருவாக்க ஆய்வு

(சொடுக்கிப் பார்த்தால் பெரிதாகத் தெரியும்.) முதல் நான்கு  படங்கள் முனைவர் முகிலை இராசபாண்டியன், இலக்குவனார் திருவள்ளுவன், செந்தமிழ்ச்சித்தன், அரிமா கந்தசாமி, ஆதித்தன் ஆகியோர்   ஆவணி 5, 2046 / ஆக.22, 2015  அன்று பார்வையிட்ட பொழுது எடுக்கப்பெற்றவை. அதற்கு முந்தைய பார்வையில் தெரிவித்தவற்றுள் ஆறு நிறைவேற்றப்படாமல் இருந்தன. அவற்றைச் சரி செய்யுமாறு அப்பொழுது தெரிவிக்கப்பட்டது. மேலும்  தலைமுடி வழித்துச்   சீவப்பட்டதுபோல் அல்லாமல் சற்று எழுந்து வளைந்து செல்வதுபோல் இருக்க வேண்டும் என்று  பேரா.முகிலை இராசபாண்டியன் தெரிவித்தார். அவ்வாறே  இப்பொழுது  அமைந்துள்ளது. முடிவுறும் நிலையில் தொல்காப்பியர்…

செப்டெம்பர் 1 இல் சென்னை அமெரிக்கத் தூதரகம் முற்றுகை! – வைகோ

அமெரிக்க அரசின் வஞ்சகத்தைக் கண்டித்து, செப்டெம்பர் 1 இல் சென்னை அமெரிக்கத் தூதரகம் முற்றுகை!- வைகோ ஈழத்தமிழ் இனம் இன்றைய உலகால் சபிக்கப்பட்ட இனம் போலும்; சில நாடுகளின் தொடர்  இரண்டகங்களால் ஈழத்தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுத் துன்ப நரகத்தில் தள்ளப்படும் கொடுமை புதியபுதிய  படிநிலைகளை அரங்கேற்றுகிறது. ஈழத்தமிழர்கள் தங்களுக்கெனத் தனி அரசு அமைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழந்தமிழர் பண்பாட்டைப் பாதுகாத்து மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியரும், ஒல்லாந்தரும், பின்னர் ஆங்கிலேயரும் அடுத்தடுத்துப் படை எடுத்துத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி, இலங்கைத்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 031. வெகுளாமை

(அதிகாரம் 030. வாய்மை தொடர்ச்சி) 01. அறத்துப் பால்  03. துறவற இயல்   அதிகாரம் 031. வெகுளாமை எப்போதும், எவரிடத்தும், எதற்காகவும், சினமோ, சீற்றமோ கொள்ளாமை.     செல்இடத்துக் காப்பான், சினம்காப்பான்; அல்இடத்துக்      காக்கின்என்? காவாக்கால் என்?       செல்இடத்தில் சினம்அடக்கு; செல்லா        இடத்தில் அடக்கு; அடக்காமல்போ.   செல்லா இடத்தும் சினம்தீ(து); செல்இடத்தும்      இல்,அதனின் தீய பிற.     செல்இடத்தும், செல்லா இடத்தும்,        சினத்தலைவிடத், தீயது வே[று]இல்லை.   மறத்தல் வெகுளியை, யார்மாட்டும்;…

சேகுவேரா புரட்சியின் நிறம் – ஓவியக்காட்சி

தொடக்கம் : ஆவணி 22, 2046 / செப்.08, 2015 மாலை 5.00 சென்னை ஓவியக்காட்சி  22.08.2046 முதல் 27.08.2046 / 8.9.2015 முதல் 13.9.2015 வரை காலை 10.00 –  இரவு 8.00 வரை நடைபெறும்.  

தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகைத் துறை – பொழிவு 1

ஆவணி 14, 2046 / ஆக. 31, 2015 பி.ப.2.30 வணக்கம். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 81 ஆவது  துறையாகவும் மூன்றாவது தமிழ்த்துறையாகவும்  உருவாக்கம் பெற்றுள்ள “தமிழ் மேம்பாட்டுச் சங்கப் பலகைத் துறையில்” நடைபெறவுள்ள முதல் நிகழ்விற்குத் தங்களை அன்புடன் அழைக்கின்றேன். சங்கர நாராயணன்.கி உதவிப் பேராசிாியா் சங்கப் பலகைத் துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை

இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 7 – மறைமலை இலக்குவனார்

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 7 எனினும் இத்தகைய உண்மைகளை உணரப்பெறா வையாபுரியார் தொல்காப்பியரை மேலும் கடன்பட்டவராகவே காட்ட விழைகிறார்.   தொல்காப்பியத்தில் ‘மொழிமரபு’ இயலில் அமைந்துள்ள இரண்டு நூற்பாக்கள் வரருசி இயற்றிய ‘பிராகிருதப் பிரகாசா’ எனும் இலக்கணநூலில் காணப்படும் இரு நூற்பாக்களின் மொழியாக்கமே என வாதிடுகிறார், வையாபுரியார்.  ‘அகர இகரம் ஐகாரமாகும்’ ‘அகர உகரம் ஔகாரமாகும்’ என்பவை அவ்விரு நூற்பாக்களுமாகும்.  ‘இவற்றுள் காணப்படும் புதுமை என்ன? பிராகிருத நூல்களிலிருந்து கடன்பெற்றுச் சொல்லவேண்டிய இன்றியமையாமை யாது உளது? மொழிவரலாற்றில் ஐயும்…

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 92 ஆடி 31, 2046 / ஆக.16, 2015 தொடர்ச்சி) 2   தமிழ்ப்புலமையுள்ளவர்களே இயக்குநர்களாக அமர்த்தப்பட வேண்டும் என்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் அரசிற்கு முறையீடு அளிக்கப்பட்டது. இதில், பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது :  “இத்தகைய நோக்கங்களையும் குறிக்கோளையும் நிறைவேற்ற தமிழ்ப்புலமை உள்ளவர் அதனை வழி நடத்தலே ஏற்றது என அனைவரும் அறிவர். ஆனால் இயக்குநராக நியமிக்கப்பட விரும்பியவரின் தகுதி அடிப்படையில் இந்நிறுவனம் தொடங்கப்பட்ட பொழுது அப்போதைய அரசால் இயற்பியல் / பொறியியல் / தகவலியலில் முனைவர் பட்டம் பெற்றிருத்தலே அடிப்படைத் தகுதியாக…

‘சென்னை நாள்’ குறித்து வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் பங்கேற்கிறேன்.

ஆவணி 08, 2046 / ஆகத்து 25, 2015 காலை 11.00 – 12.00 மணி நேரத்தில் வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில் ‘சென்னை நாள்’ குறித்து நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். http://wintvindia.com  மின்வரியில் இணையத்திலும் காணலாம். வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

தமிழ்த்தேசச் சூழலியல் மாநாடு, திருவெறும்பூர்

ஆவணி 12, 2046 / ஆக. 29, 2015 மாலை 5.30 கி.வெங்கட்ராமன் பெ.மணியரசன் தமிழ்த்தேசியப் பேரியக்கம்  திருச்சிராப்பள்ளி