திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 025. அருள் உடைமை

(அதிகாரம் 024. புகழ் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல்  அதிகாரம் 025. அருள் உடைமை   தொடர்பே இல்லா உயிர்களிடத்தும், தொடர்ந்து படர்ந்திடும் முதிர்அன்பு.   அருள்செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருள்செல்வம்,      பூரியார் கண்ணும் உள.   அருள்செல்வமே உயர்பெரும் செல்வம்;        பொருள்செல்வம், கீழோரிடமும் உண்டு.   நல்ஆற்றான் நாடி, அருள்ஆள்க; பல்ஆற்றான்      தேரினும், அஃதே துணை.      எவ்வழியில் ஆய்ந்தாலும் துணைஆகும்        அருளை, நல்வழியில் ஆளுக..   அருள்சேர்ந்த நெஞ்சினார்க்(கு) இல்லை, இருள்சேர்ந்த…

தழல் ஈகையாளி தோழர் செங்கொடியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள்!

பேரறிவாளன், முருகன், சாந்தன்  தண்டனையை நீக்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆவணி 11, 2042 / 28.08.2011 அன்று தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கியக்கின  செங்கொடி  அவர்களின்  4 ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை தியாகராயர் நகரில் ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 அன்று மாலை 4 மணிக்கு

கனடியத் தமிழ் இளையோர் நடத்தும் கிளித்தட்டு 2015 நிகழ்வு

கனடியத் தமிழ் இளையோர் நடத்தும் கிளித்தட்டு 2015 நிகழ்வு   கனடியத் தமிழ் இளையோர் நடத்தும் கிளித்தட்டு 2015 நிகழ்வு வெற்றிகரமாக 5 ஆம் ஆண்டாக இவ்வாண்டும் ஆவணி 13 / ஆகத்து மாதம் 30 ஆம் நாள் மாநாயகர்(மேசர்) அப்பாசு அலி பூங்காவில் காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது.  அழிந்து போகும் தமிழர் தாயாக மண்ணின் நினைவுகளை மீட்கும் தமிழீழத்தின் தேசிய விளையாட்டான கிளித்தட்டு விளையாட்டு கனடிய மண்ணில் இளையவர்களால் அணிகளாக அணி வகுத்து மாபெரும் விளையாட்டுப் போட்டி நிகழ்வாக…

26 அன்று உண்ணா நோன்பு: திரண்டு வாருங்கள்! – வைகோ

26 அன்று  உண்ணா நோன்பு: சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கத் திரண்டு வாருங்கள்!  வைகோ வேண்டுகோள்! ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–   ஆந்திர மாநிலம் சேசாசலம் வனப்பகுதியில் ஆந்திர மாநில வனத்துறை சிறப்புக் காவல்படையினரால் 20 தமிழர்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுச், சுட்டுக்கொல்லப்பட்டு, அந்தச் சடலங்களைக் காட்டுக்குள் கொண்டுபோய் வீசி எறிந்து  கிடங்கில்  வைக்கப்பட்டிருந்த பழைய செம்மரக்கட்டைகளை எடுத்துப் பக்கத்தில் போட்டுவிட்டு, தமிழர்கள் கள்ளத்துப்பாக்கி  முதலான ஆயுதங்களோடு காவல் துறையினரைத் தாக்கியதாகவும், அந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அப்பட்டமான பொய்யான கட்டுக்கதையைச்…

சங்கம் 4 தென்மதுரைத் திருவிழா, மதுரை

ஆவணி 20-27, 2046 / செப். 06-13, 2015 அன்புடையீர், வணக்கம் மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தொடங்கிய நற்றமிழ் முயற்சியே சங்கம்4. குறுகிய காலத்தில் நன்கே ஆழப்பட்டு அழகுடன் மதுரையில் இப்போது விரிகிறது. தமிழ் கூறும் நல்லுலகெங்கும் அறிவு-கலை-பண்பாடு மறுமலர்ச்சி இயக்கமாய் இது வளரவேண்டுமென்பது எம் அவா. வெற்று முழக்கங்களும் வீண் பெருமிதங்களும் தவிர்த்து உண்மையான நமது பண்பாட்டு வேர்களைத் தேடுவதில் சங்கம்4 அக்கறை செலுத்தும். இதனூடே மேடைத்தமிழின் அழகியலையும் செதுக்கும். தமிழ் மொழி மீதும், தமிழ்ச் சமூகம் மட்டிலும் கொண்ட அளவிலா…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 024. புகழ்

(அதிகாரம் 023. ஈகை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 024. புகழ்   அழியும் உலகில், அறம்செய்து, அழியாப் புகழைப் பெறுதல்.   ஈதல், இசைபட வாழ்தல், அதுஅல்லது,      ஊதியம் இல்லை உயிர்க்கு.     கொடுத்தலும், கொடுத்தலால் வரும்        புகழுமே, உயிர்வாழ்வின் பயன்கள்.   உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்(கு)ஒன்(று),      ஈவார்மேல் நிற்கும் புகழ்.     புகழ்வார் புகழ்ச்சொற்கள் எல்லாம்,        கொடுப்பார்மேல், வந்து நிற்கும்.   ஒன்றா உலகத்(து), உயர்ந்த புகழ்அல்லால்,…

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் – மறுமலர்ச்சி மாநாடு

ஆவணி 29, 2046 / செப்.15, 2015  திராவிட இயக்க நூற்றாண்டு விழா திருப்பூர் – பல்லடம் மறுமலர்ச்சி தி.மு.க. வைகோ  

தமிழ்த்தேசமே என்கின்ற இலட்சியப் பாதை – கசேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த்தேசம் என்கின்ற இலட்சியப் பாதையில் இருந்து நாம் விலகப்போவதில்லை – கசேந்திரகுமார் பொன்னம்பலம்!   எமது கட்சியின் கொள்கையை ஏற்று வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றியினைக் கூறிக்கொள்ளுகின்றோம். எமது கொள்கையினை முன்னெடுத்துச் செல்லும் எமது செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும். கடந்த காலங்களில் குறிப்பாகத் தேர்தல் காலங்களில் எமது பல செயற்பாடுகளுக்குப் பல்வேறு கோணங்களில் இருந்து அறைகூவல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. எங்களுடைய கருத்துகள் மக்கள் மட்டத்தில் செல்வதற்கும் பெரும் அறைகூவல்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது.  எங்களுடைய மக்களுக்கான அடையாளத்தினைக் கொடுக்கக்கூடியத் “தமிழ்தேசியம்” தமிழ் அரசியலில் இருந்து இல்லாது…

தமிழரும் தமிழர் என்ற தம்பெயர் இழந்திடாரோ! – பாவேந்தர் பாரதிதாசன்

பெயர் மாற்றம் சென்னையில் கீழ்ப்பாக்கத்தைத் தேடினேன். ஓர் இளைஞன் அன்னதோர் ஊரே இல்லை என்றனன்! அப்பக்கத்தில் இன்னொரு முதியோர் தம்மை வினவினேன்; இருப்ப தாகச் சொன்னார் அவ்வூர்க்குப் போகத் தோதென்றும் சொல்ல லானார். மக்களின் இயங்கி வண்டி இங்குத்தான் வந்து நிற்கும் இக்காலம் வருங்காலந்தான் ஏறிச்செல் வீர்கள் என்றார். மக்களின் இயங்கி வண்டி வந்தது குந்திக் கொண்டேன் சிக்கென ஓர் ஆள் “எங்கே செல்லுதல் வேண்டும்” என்றான். “கீழ்ப்பாக்கம்” என்று சொன்னேன் கேலியை என்மேல் வீசிக் ”கீழ்ப்பாக்கம் என்ப தில்லை மேல்பாக்கம் தானும் இல்லை…

சிகரம் நம் சிம்மாசனம் – இலக்கு தொடர் நிகழ்வு

ஆவணி 10, 2046 / ஆக.27, 2015 வியாழன் மாலை 6.30 வணக்கம். நலம், வளம் சூழ வேண்டுகிறோம். முன்னேற வழி காட்டும் முத்திரை நிகழ்வுகளைத் தொடர்ந்து வழங்கி வரும்  ‘இலக்கு’   தங்கள் உடல் நலம் சிறக்கவும், வாழ்வில் வளம் சேர்க்கவும், அக்கறை கொண்டு இந்த மாத நிகழ்வுக்கு அனைவரையும் (குறிப்பாக இளைஞர்களை) அன்புடன் அழைக்கிறது. என்றென்றும் அன்புடன். சிபி நாராயண். யாழினி.