சிங்கப்பூர் வாசகர் வட்டம் – “தமிழ்ப்பிள்ளை” இசைத்தொகுப்பு அறிமுகம்

ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 மாலை 5.00 சையத் பாபு வணக்கம். வருகின்ற ஞாயிறு மாலை 5 மணி அளவில் சிங்கப்பூர் அங் மோ கியோ நூலக அரங்கில் நடை பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா – புதுக்கோட்டை

வணக்கம் புரட்டாசி 24, 2045 / அக்.11, 2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் “வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா”விற்குத் தங்களை அன்புடன் அழைக்கிறோம். புத்தக வெளியீடு குறும்பட வெளியீடு வருகை தரும் வலைப்பதிவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் – எனத் திட்டமிடப்பட்டுள்ளது. தங்கள் வருகையைக் கீழ்வரும் இணைப்பின் வழி பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html – வைகறை வைகறை

செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 24, 2046 / ஆக 09, 2015 தொடர்ச்சி) 3    பதவிப்பெயர்கள் அல்லாமல் வேலைத் தேர்ச்சி அடிப்படையிலும் வகைப்பாடு கொண்டு நாம் தொழிலாளிகளைப் பிரிக்கிறோம். வேலையில் முழுமையான தேர்ச்சி அல்லது அரைகுறை தேர்ச்சி அல்லது தேர்ச்சியின்மை என்ற மூன்றின் அடிப்படையில் தேர்ச்சிநிலையையும் தேர்ச்சி நிலைக்குரிய தொழிலாளர்களையும் குறிப்பிடுவர்.   skilled labour     அல்லது skilled worker –  செயல்திற வேலையாள்,  தேர்ச்சியுடைத் தொழிலாள்,  திறமிகு தொழிலாளர்,  தேர்ச்சியுற்ற தொழிலாள், திறமையான தொழிலாளர்,  திறமிகு பணியாளர் எனப்பலவகையாக இப்பொழுது குறிப்பிடுகின்றனர்.  (skilled person …

ஆரியர் மணமுறைகளுள் பெரும்பான்மையான, மணமெனும் பெயர்க்கே பொருந்தாதன – நாவலர் பாரதியார்

தமிழர் திருமண முறை சென்ற 1500 ஆண்டுகளாக ஊறியேற்றிய புதிய ஆரியக்களியால் தமிழர், தமிழையும் மறந்து, முன்னோர் பெருமையும் உரனும் துறந்து, பிறர் நகைப்புக்கு ஆளாயினர். தமிழர் திருமணத்துக்கு எவ்வகைச் சடங்கும் இன்றியமையாததெனப் பண்டைத் தமிழ்மக்கள் கருதவில்லை என்பதற்குப் பற்பல சான்றுகள் பண்டைத் தமிழ் இலக்கியங்களுள் உண்டு. முதற்கண்ணும் எஞ்ஞான்றும் உழுவலன்பே மணத்திற்கும், இல்வாழ்க்கை இன்பத்திற்கும் உரியதொன்றாக இருந்தது. பொருந்தாதனவும் செயற்கையும் ஆகிய ஆரியர் வழக்குகளையும், முறைமைகளையும் தமிழரின் காதல்பற்றிய வழக்குகள், குறிக்கோள்களோடும் இணக்கி வேறுபாடு அழித்து ஒன்றாக்கச் சில பிராமண பிராமணீய இலக்கண…

காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் – சி.இலக்குவனார்

காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் தமிழ் இலக்கியப் படைப்புகள் அகம், புறம் என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ள மரபைக் கொண்டுள்ளன. அகம்பற்றிய படைப்புகள் தலைவன் தலைவியின் உளவியல் செயல்பாடுகள் குறித்து அதிகம் வலியுறுத்துகின்றன. அவை பெரும்பான்மையும் உளவியல் ஆர்வம் கொண்டுள்ளன. உணர்வுகள் மேலோங்கி இருக்கக்கூடிய ஒடிசி போன்று அவை ஆழமாகத் தனிநிலையாக விளங்குவன. பொதுவாக அகம் காதல் குறித்தும், புறம் இவற்றின் புறநிலைச் செயல்பாடுகள் குறித்தும் கையாளுவதாகச் சொல்லப்படுகிறது . . . . . . . . ….

பிய்த்து எறிய சாதி என்ன புல்லா பூண்டா? – கோ.திருநாவுக்கரசு

  ஆயிரம் ஆண்டுகளாக ஆரியன் செதுக்கிய சிறைக்கூடம் தமிழினத்தைக் கூறுபோட்டு ஒரு பகுதியின் சிண்டை மற்றொருவன் கையில் தந்த சூது. சாதி ஆள்கிறது சாதி தீர்ப்பு சொல்கிறது சாதி தண்டனை கொடுக்கிறது இந்திய அரசியல் சட்டம் துப்பாக்கியோடு ஓடிவந்து காவல் காக்கிறது.ஆளும் சாதியின் காலை நக்குகிறது. பிய்த்து எறிய சாதி என்ன புல்லா பூண்டா? – கோவிந்தசாமி திருநாவுக்கரசு காண்க: தொட்டால் உயிர் சுடுமெனில் தொடாதே சாதியை! – வித்யாசாகர் பிய்த்தே எறிந்திடு நீ சாதியை – நடராசன் கல்பட்டு நரசிம்மன்

இல்லறத்தில் இனிது வாழ்க ! – பரிதிமாற்கலைஞர்

இல்லறத்தில் இனிது வாழ்க ஆடலு மழகும் பாடலுஞ் சான்றீர் இன்னிசைக் குயில்கள்! பன்னருங் கலைவலீர் நும்வகைப் பட்டோர் நுமைத்தெய்வ மென்பர் நுந்தமக் கோர்சொல் சிந்தை செய்ம்மினோ வாய்ப்பாரு நலனெலாம் வாய்க்கப் பெற்றீர் என்கொ லவற்றைப் புல்லிடை யுகுக்கின்றீர் தூய இல்லறக் கோயி லில்லை கொல்? இன்னற மணியெனு மியற்கை நலத்தீர் வீழ்ந்த மகளிர்காள் விரைவினி லெழுமின் ஆழ்ந்திடா தின்னே யறிவுகைப் பற்றுமின் இழிந்தார் புகழுரை யேற்றுக் கொள்ளலிர் இன்புடன் மேவி யில்லறத் தினிது வாழிய எங்கை மீரே – பரிதிமாற்கலைஞர்: தனிப்பாசுரத் தொகை

தமிழன்னை கண்ணீரை வடிக்கின்றாள்! – குருநாதன்

அன்னைமொழி மறந்தார்! அன்னைமொழி அமுதமென அற்றைநாள் சொன்னார்கள் இற்றை நாளில் முன்னைமொழி மூத்தமொழி முடங்கியதை மறந்துவிட்டு மூங்கை யானார்; பின்னைவந்த மொழிகளிலே பேசுகின்றார்; எழுதுகின்றார் பேதை யாகித் தன்மொழியைத் தாம்மறந்து தருக்குகிறார் தமிழ்நாட்டில் வெட்கக் கேடே! இருந்தமிழே உன்னால்தான் நானிருந்தேன்; அன்று சொன்னார்; இற்றை நாளில் இருந்தமிழே உனக்காய்நான் இருப்பதாகச் சொல்வதற்கே இதயம் இல்லை! அரியணையில் ஏற்றிவைத்த அருந்தமிழைப் போற்றுவதற்கு மறந்து போனோம் திருத்தமுற எடுத்துரைக்கத் திசையெங்கும் தமிழ்வளர்க்கும் கொள்கை ஏற்போம். புலம்பெயர்ந்து போனவர்கள் புதுமைகளைக் கண்டங்கே மொழிவ ளர்த்து நலமுடனே வாழ்கின்றார்; நாமோ…

மலர்களின் நிலைக்கேற்ற பெயர்கள் தமிழில்தான் உள்ளன!

மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள் அரும்பு – அரும்பும் தோன்றுநிலை நனை – அரும்பு வெளியில் நனையும் நிலை முகை – நனை முத்தாகும் நிலை மொக்குள் – “முகை மொக்குள் உள்ளது நாற்றம்” – திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை) முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல் மொட்டு – கண்ணுக்குத் தெரியும் மொட்டு போது – மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை மலர்- மலரும் பூ பூ – பூத்த மலர் வீ – உதிரும் பூ பொதும்பர் – பூக்கள் பலவாகக் குலுங்கும்…