திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 002 வான்சிறப்பு

(001. இறைமை வழிபாடு தொடர்ச்சி) 001 அறத்துப் பால்        01 பாயிர இயல் 002. வான்சிறப்பு உலகையே வாழ்விக்கும் அமிழ்தமாம்      மழையின், பயன்களும் சிறப்புக்களும். வான்நின்(று), உலகம் வழங்கி வருதலான், தான்அமிழ்தம் என்(று),உணரல் பாற்று.      உலகையே நிலைக்கச் செய்வதால்,        மழைநீர்தான், அமிழ்தம்; உணர்க. துப்பார்க்குத், துப்(பு)ஆய, துப்(பு)ஆக்கித், துப்பார்க்குத், துப்(பு)ஆய தூஉம், மழை.   உண்பார்க்கு உணவை ஆக்குவதும்,          உணவாக ஆவதும் மழைதான். விண்நின்று பொய்ப்பின், விரிநீர் வியன்உலகத்(து), உள்நின்(று) உடற்றும் பசி.    மழைப்பொய்ப்பு நிலைத்தால், உலகத்து…

பல்பொருள் ஆய்வரங்கம்

ஆடி 9, 2046 / சூலை 25, 2015  மாலை 3.00 எழும்பூர், சென்னை தோழர் தியாகு   + அ. அருள்மொழி   + கு.பா. பிரின்சு  கசேந்திரபாபு + பேராசிரியர் தா. அபுல் பாசல்  + மு. வீரபாண்டியன் +  வே.பாரதி – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் 9865107107

புல்மேல் விழுந்த பனித் துளியே! – பவளசங்கரி

புல்மேல் விழுந்த பனித் துளியே எங்கே போனாய் இத்தனை நாளாய் இன்று குளிர்ந்த என் மனமே ஏன் மறந்தாய் இத்தனை நாளாய் புல்மேல் விழுந்த பனித் துளியே எங்கே போனாய் இத்தனை நாளாய் இன்று குளிர்ந்த என் மனமே ஏன் மறந்தாய் இத்தனை நாளாய் என்னை எழுப்பிய வெண்பனியே ஏன் மறைந்தாய் இத்தனை நாளாய் கல்லை உருக்கிய கவிமழையே கனவில் நிறைந்த கற்கண்டே உயிரில் கலந்த இன்னிசை போல் உனக்குள் தானே உறைந்திருந்தேன் புல்மேல் விழுந்த பனித் துளியே எங்கே போனாய் இத்தனை நாளாய்…

எழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா? – இளையவன் செயா

கல்விபடைத்த காமராசரை வாழ்த்துவோம்! பழுத்த  பலாவும்முற்றப்  பழுத்த பனம்பழமும் பழம்தானே அழுத்தமாய்க்  கேட்கிறேன்  பழச்சுவை  ஒன்றாமோ ?  இல்லை கொழுத்தும்  கதிரவனும்  குளுமைதரும்  நிலவும் கோள்கள்தானே இழுத்து  மூடுவதும் இதமாயின்பம் பெறுவதும்  ஒன்றாமோ ? அழுத்தும் வறுமையும் கொழுத்த செல்வமும் பொருளால்தானே கழுத்தில் வெறும்கயிறும் கழுத்துவலிக்கும் அணிகளும் ஒன்றாமோ ? புழுத்துப்போன குமுகாயத்தில் புல்லர்கள்  வாழ்வைப் போற்றி வழுத்துவதும் அவரையே வாழ்த்துவதும் நன்றாமோ ? இல்லை பழுதின்றிப் பூத்த பனிமலரும் கோயில்  கருவறையில் தொழுது  வணங்கத் தொகுத்த மொழியும்  நல்ல முழுத்தத்தில்  முடித்த மணமும்…

மெல்லிசை மன்னர் விசுவநாதன் மறைவும் கலைஞர்கள் எண்ண வேண்டியனவும்

தமிழரால் வாழும்   கலைஞர்களே! பிற துறையினரே! தமிழர்க்காகவும் வாழுங்கள்!      மெல்லிசை மன்னர் (ஆங்கில முதல் எழுத்துகளில்) எம்.எசு.வி. (என அழைக்கப்பெறும் மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன்) அல்லது ம.சு.விசுவநாதன் ஆனி, 2046, சூலை 14, 2015 அன்று இசைப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தன் இசையால் பன்னூறாயிர மக்களைக் கட்டிப்போட்டவரைக் காலன் கட்டிப்போட்டுவிட்டான்.   ஆனி 11, 1959 / சூன் 24, 1928 அன்று கேரளாவில் பாலக்காட்டு அருகில் உள்ள எலப்புள்ளி என்னும் ஊரில் சுப்பிரமணியன் – நாராயணக்குட்டியம்மாள் (நானிக்குட்டி) ஆகியோரின் மகனாகப்…

இறையாண்மை என்றால் இதுதான் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

  இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை. இறையாண்மை என்பது அண்மையில் பெரிதும் பேசப்பட்டு வருவதால் நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தமிழர்க்கு இறையாண்மை மிக்க அமைப்பு தேவையா? அவ்வாறு பேசுவது சரியா? தவறா? தமிழக இறையாண்மை என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? என்பனவெல்லாம் நாம் அறிய வேண்டுவன ஆகும்.புவிப்பரப்பில் சட்டங்களையும் விதிகளையும்  ஆக்கவும்…

வள்ளுவர் மாலை – இலக்குவனார் திருவள்ளுவன்

வள்ளுவர் மாலை – நாட்டியப் பாடல் தித், தித், தை; தாம் தித், தித், தை; தித்தக்கு தத்தக்கு தத்த தாம்; குத்தகிட்டகிண்ண தொங்க தக்குதாம் தொங்க தங்குகு தங்குகு தங்குகு தித்தாம் குத்தகிட்டகிண்ண தொங்க தக்குதாம் தொங்க தாதங்கி தங்கி கிடதக தித்தித் தை தத் தத் தாம தத்தாம் திருகிட கிடதக திக்கும்தாரி அருமறை தந்தவர், உலகப்புலவர் குறள்நெறி நல்கிய வள்ளுவர் வெல்க! தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க! தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க! தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க! ஞாலப்…

அண்ணாமலை தெரு, குடியிருப்போர் நலச்சங்கம், புழுதிவாக்கம் : தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

  அண்ணாமலை  தெரு குடியிருப்போர் நலச்சங்கம் புழுதிவாக்கம், சென்னை 600 091 தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் இணைந்து நடத்தும் தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆடி 5, 2046 / சூலை 21, 2015 மாலை 6.00 தொழில் தொடங்கவும் கடன்உதவி பெறவும் வழிகாட்டப்படும் சிறப்புரை: முனைவர் ந.மணிமேகலை இயக்குநர் – தலைவர், மகளிரியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுவனர், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் திரு நெ.சீனிவாசலு, துணைஇயக்குநர், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனம், மத்திய அரசு, சென்னை…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 001. இறைமை வழிபாடு

  01. அறத்துப் பால் 001. அதிகாரம்            01.  பாயிர இயல்           001. இறைமை வழிபாடு  மக்கள் கடைப்பிடிக்கத் தக்க இறைமை ஆகிய நிறைபண்புகள்.   அகர முதல, எழுத்(து)எல்லாம்; ஆதி பகவன், முற்றே உலகு.        எழுத்துக்களுக்கு, அகரம் முதல்;        உலகினுக்கு, இறைவன் முதல்.     கற்றதனால் ஆய பயன்என்கொல்…? வால்அறிவன் நல்தாள், தொழாஅர் எனின்.   தூய அறிவன்வழியைப் பின்பற்றாத  சீரிய கல்வியால், பயன்என்….?   மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார், நிலமிசை நீடுவாழ் வார்.   மலரைவிட,…