நம் எண்களை நாமறிவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  உலகளாவிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் 1, 2, 3… என்னும் முறையிலான எண்கள் தமிழில் இருந்து அரபிக்குச் சென்று பரவியதே இருப்பினும், நாம் மூலத்தமிழ் எண் வடிவங்களை அறிதல் வேண்டும். பிறமொழியினர் அவர்கள் மொழியின் எண்களைக் குறிப்பிடவும் பயன்படுத்தவும் அறிந்திருக்கையில் நாம் அறியாதிருப்பது அழகன்று. ஆதலின் தமிழ் எண்கள் தரப்படுகின்றன. பத்து முதலான தமிழ் எண்கள் எழுகையில் இரண்டு நூற்றாண்டுகளாக உலக நடைமுறை பின்பற்றப்படுகிறது.   ‘௰’ என்பதே ‘10’ ஆகும். ஆனால் பலர் ‘’10’ என்றே குறிக்கின்றன. ‘௰’ எனக் குறிப்போரும்…

கனவு நனவாகுமா ? – பாவலர் கருமலைத்தமிழாழன்

ஆற்றினிலே ஆலைகளின் கழிவு சேர்த்து ஆகாய வெளியினிலும் மாசு சேர்த்து ஊற்றினிலும் தூய்மையிலா நீராய் மாற்றும் உன்மத்தர் செயல்களெல்லாம் முடிந்து போகக் காற்றுவெளி தூய்மையாகிக் குடிக்கும் நீரும் கலப்படமே இல்லாமல் கிடைக்கும் இங்கே நேற்றுவரை இருந்தநிலை மாறி வாழ்வில் நோய்நொடிகள் இல்லாமல் இருப்பார் இங்கே ! பட்டங்கள் பலபெற்றும் பணியே இன்றிப் பரிதவித்தே ஏங்குகின்ற இளைஞர் கூட்டம் வெட்டியாகச் சுற்றுகின்ற நிலைமை மாறி வெறுங்கையின் சக்திதனைத் திறன்கள் தம்மைத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேலை யின்றித் திண்டாடல் பழங்கதையாய் மாறிப் போகும் கட்டாயம் பணிகிடைக்கும் வகையில்…

உன்றனுக்காய் ஒருநாடு தோன்ற வேண்டும்! – சி.கருணானந்த இராசா

  சந்த வசந்தத்தில் தமிழழகைக் காட்டுதற்காய் வந்த புலவீர்! வழி நடத்திடும் தலைவ! குந்தியிருந்து குறிப்போடெமை நோக்கும் சொந்தங்காள் உங்களைக் கை தூக்கி வணங்குகிறேன். கானமயிலாடியதைக் கண்டபொல்லாக் கடைகெட்ட வான்கோழி சிறகு தூக்கி மோனநடம் ஆடியதைப்போல நானும் முனைகின்றேன் பாவலர் முன் கவிதைபாட ஆனதனால் கற்றோரே கேலிவிட்டு அறிவற்றோன் கவிகேட்பீர் என்று வேண்டி தேனினியாள் தமிழ்த்தாயின் பாதம் வீழ்ந்தேன் செய்த கவிக்(கு) இன்தமிழே என்றும் காப்பு காரிகையைக் கண்ணெடுத்தும் பார்த்திராத கட்டையிவன் கவிதழுவா மணங்காணான்(பிரமச்சாரி) தூரிகையாம் யாப்பையவள் அருங்கலத்தில் தோய்த்தெழுதி யறியாத சுத்த மூடன்…

குமுக வளர்ச்சி 3 – முனைவர் இராம.கி.

(சூலை 05, 2015 தொடர்ச்சி) குமுக வளர்ச்சி 3    இந்த வேலிக்கருவையாற்றான் நம்மூர்க் கண்மாய்களுக்கு நீர்வரத்துள்ள கால்கள் அடைபட்டுப் போயின. கண்டதேவிக் கோயிற்குளம் தவிர வேறெந்தக் குளமாவது நம் பக்கத்தில் நிறைந்து பார்த்திருக்கிறீர்களா? சற்று எண்ணிப்பாருங்கள். எப்பொழுது நம் ஊர்க்கண்மாய்கள் நிறையவில்லையோ, அப்புறம் நம்வீட்டுக் கிணறுகளிலும், கேணிகளிலும் நீருற்றுகள் தூர்ந்துதான் போகும். 30-80 அடிவரை இருக்கும் நிலத்தடி நீர்ப்படுகை வற்றிப்போனால் பின் புரைக்கிணறுகளில்(bore-wells) தான் நாம் உயிர்பிழைக்கவேண்டும். அதன் ஆழம் 120 அடிகளிலிருந்து 250 அடிவரை போகும். இப்பொழுதெல்லாம் புரைக்கிணறுகளை 500 அடிகள்வரையும்…

வடசொல் என்பது ஆரியம் மட்டுமல்ல! – ப.பத்மநாபன்

  தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், தொல்காப்பியத்தின் இரண்டாவது அதிகாரமாகிய சொல்லதிகாரத்தில் சொல்லினது இலக்கணத்தைக் கிளவியாக்கம் தொடங்கி எச்சவியல் ஈறாக ஒன்பது இயல்களில் விரித்துக் கூறுகிறார். இறுதி இயலாகிய எச்சவியலின் முதல் நூற்பாவில் தமிழ்மொழியில் செய்யுள் இயற்றப் பயன்படும் சொல்லைப் பற்றிக் கூறுகிறார்.. சொற்களின் தன்மைக்கேற்ப அவற்றைப் பெயர், வினை, இடை, உரி என நான்காக வகுத்த தொல்காப்பியர் சொற்கள் வழங்கும் இடத்தின் அடிப்படையில் நான்கு வகையாக அவற்றைப் பாகுபடுத்துகிறார். அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனக் கூறுகிறார். இயற்சொல் திரிசொல் திசைச்சொல்…

மீண்டும் 1965 மொழிப்புரட்சி வெடிக்கும் – வைகோ

இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் “தமிழ்நாட்டில் 47 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருக்கும் இருமொழி திட்டத்தை மாற்றி மும்மொழி திட்டத்தை செயற்படுத்த செயலலிதா அரசு முயல்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பள்ளிகளில் மீண்டும் இந்தியைக் கட்டாய பாடமாக்கும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டால் மீண்டும் 1965 மொழிப்புரட்சி வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்கிறேன்” என வைகோ கூறியுள்ளார்.  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-   தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி- பயிற்சி…

வைணவரின் சமக்கிருத மோகம் – மு.அருணாச்சலம்

வைணவரின் சமக்கிருத மோகம்   வைணவர்கள் இக்காலத்தில் செய்த நூல்கள் எல்லாம் வடமொழியில் இருந்தனவேயன்றித் தமிழில் எதுவுமில்லை. இதற்கு ஒரு காரணம், வடமொழி ஒன்றுதான் தங்களுக்கு உய்வு தந்து பரமபதத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்று அக்காலத்துப் பிராமண சமயத் தலைவர்கள் கொண்டிருந்த எண்ணம். வைணவர்கள், அடியாருக்குள் சாதி வேற்றுமையை இல்லை என்று சொல்லிய போதிலுங்கூட, தங்கள் ஆசாரிய பரம்பரையில் சாதி வேற்றுமையையே கடைப்பிடித்து வந்தார்கள். அவர்கள் திருக்கச்சி நம்பி, பிள்ளை உறங்கா வில்லிதாசர், விளாஞ்சோலைப் பிள்ளை முதலிய வைணவப் பெரியார்கள் பிராமணர் அல்லாதவர், பிந்திய…

தமிழரின் கடவுட் கொள்கை தமிழரிடம் தானாகப் பூத்தது – மொ.அ.துரை அரங்கசாமி

  தமிழ்நாட்டின் கடவுட் கொள்கை, தொன்மையானது. இக்கடவுட் கொள்கை, தமிழரிடம்தானாகப் பூத்ததேயன்றிப் பிறரிடமிருந்து வந்ததன்று. இயற்கைப் பொருள்களைப் பிறழ்ச்சியின்றி இயங்கச் செய்யம் பேராற்றலுடைய ஒரு பொருள் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாததாய், இத்தகையது என்று சொல்ல மாட்டாததாய் நிற்பதென்ற உண்மையைத் தமிழர் தாமாகப் பண்டே உணர்ந்தனர்; மனமொழி மெய்களைக் கடந்து நிற்கும் அதனைக் கடவுள் என்ற சொல்லால் குறித்தனர்; அஃது யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்பதென்பதை இறை என்ற சொல்லால் குறித்தனர்; அதுவே, ஒவ்வோர் உயிரிலும் உள் நின்று இயக்குவது என்பதை இயவுள் என்ற சொல்லால்…

சங்கக் காலத்தில் ஆரிய நம்பிக்கை அன்றாட வாழ்வில் இடம்பெறவில்லை – சு.வித்தியானந்தன்

சங்கக் காலத்தில் ஆரிய நம்பிக்கை அன்றாட வாழ்வில் இடம்பெறவில்லை. சங்க காலத்திலே தமிழகத்தில் அந்தணரும், முனிவரும் வாழ்ந்தனரெனினும் அவர்கள் செல்வாக்குப் பிற்காலத்தில் இருந்த அளவுக்கு மேம்பட்டிருக்கவில்லையெனக் கூறலாம். சங்க நூல்களில் ஆரிய நம்பிக்கைகளும், சமயக் கோட்பாடுகளும் கூறப்பட்டிருப்பது உண்மையே. ஆனால் பொதுவாக நோக்குமிடத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை இடம் பெறவில்லை எனலாம். நகர வாழ்க்கையில் இவற்றின் செல்வாக்கு சிறிது சிறிதாகப் பெருகிக்கொண்டே வந்தது. பொதுமக்கள் தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளையே பின்பற்றினர். -பேராசிரியர் முனைவர் சு.வித்தியானந்தன்

கண்ணன் வழிபாட்டைத் தமிழரிடம் இருந்து ஆரியர் கற்றனர் – சு.வித்தியானந்தன்

விட்டுணுவும் கண்ணனும் இதிகாசங்களிற் கண்ணன் விட்டுணுவின் ஓர் அவதாரமாகவும் ஒரு போர்வீரனாகவும் காட்சியளிக்கின்றான். அவனை ஒரு பெருந்தெய்வமாக அக்காலத்தில் மக்கள் கருதவில்லை. ஆரியர் தமிழரிடமிருந்தே கண்ணன் வழிபாட்டைப் பெற்றிருத்தல் வேண்டும். கண்ணன் உண்மையில் ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ்ந்த இடையர் குலத் தெய்வமே. ஆரியர் பொருளாதாரத்தில் இடையராக இருந்தபோதும் அவர்கள் நாடோடிகளே. மேலும் கண்ணன் கருமை நிறம் வாய்ந்த தெய்வமாக இருப்பதும் அவன் தமிழ்த் தெய்வம் என்று கொள்வதற்கு அறிகுறியா அமையும் எனலாம். கருமை நிற மனிதர் என்று பழைய காலத்தில் ஆரியர் திராவிடரைக்…

தமிழ் முருகனுக்கும் ஆரிய யாகத்திற்கும் தொடர்பு இல்லை – சு.வித்தியானந்தன்

தமிழ் முருகனுக்கும் ஆரிய யாகத்திற்கும் தொடர்பு இல்லை திருமுருகாற்றுப்படையில் ‘திருச்சீரலைவாய்’ என்ற பகுதியில் ஆறு முகங்களும் பன்னிரண்டு கைகளும் உடைய முருகனின் திருவுருவம் கூறுப்படுகின்றது. இவனே சிவனின் மகனும் போர்க்கடவுளுமான ஆரியக் கற்பனையிலெழுந்த கார்த்திகேயன். மேற்கண்ட உருவ அமைதி ஆரியக் கடவுளான கார்த்திகேயனுடையது. தமிழரின் கடவுளான முருகனுக்கும் பார்ப்பனருக்கும் யாகங்களுக்கும் ஒரு வகையான தொடர்பும் இல்லை. ஆனால் மேற்கூறப்பட்ட திருமுருகாற்றுப்படையில் அவன் பார்ப்பனர் பாதுகாவலனாகக் கூறப்படுகின்றான். வள்ளியும் அவன் மனைவியாகக் கூறப்படுகின்றான். -பேராசிரியர் முனைவர் சு.வித்தியானந்தன்