ஆங்கிலவழித் திணிப்புக்கு எதிராகத் தொடர் மறியல் போராட்டம்!

தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்புக்கு எதிராக ஆகத்து 3 முதல் 7 வரை தொடர் மறியல் போராட்டம்! சென்னை தலைமைச் செயலகம் – திருச்சி மாவட்ட ஆட்சியரகம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவிப்பு     தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், (ஆனி 17, 2046 / சூலை 02, 2015 அன்று) சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பெ.மணியரசன் தலைமையேற்றார்.   காந்தியப் பேரவைத் தலைவர் திரு. குமரி அனந்தன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர்…

இறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர் காக்க அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அறநிலையத்துறையில் தமிழறம் தழைக்கட்டும்!   எந்த நாட்டிலும் இல்லாக் கொடுமைகள் தமிழ்நாட்டில் நிலவுகின்றன. அவற்றில் ஒன்றுதான், தமிழ் மக்களால், தமிழ்மக்களின் செல்வத்தில், தமிழ் மக்கள் உழைப்பில், தமிழ் மக்களுக்காகக் கட்டப்பட்ட தமிழ்க்கோயில்களில் தமிழ் வழிபாடும் துரததப்பட்டு விட்டது; இறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர்களும் மறைக்கப்பட்டுவிட்டன. தமிழ்வழிபாடு குறித்துத் தனியே பின்னர் எழுதுவோம். இப்பொழுது தமிழ்ப்பெயர்கள் குறித்துக் கூற விரும்புகிறோம்.  மலைவளர் காதலி, மங்களேசுவரர் – மங்களேசுவரி, மங்களநாதர், காட்சி கொடுத்த நாயகர் -, மங்களாம்பிகை, திருமேனி நாதர் – துணைமாலை அம்மை, நெல்வேலிநாதர் – வடிவுடையம்மை, குற்றாலநாதர்,…

தொல்காப்பியர் சிலை – பார்வையும் பதிவும்

தொல்காப்பியர் சிலையில் மாற்றவேண்டுவன   குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் அமைக்க இருக்கும் தொல்காப்பியர் சிலை உருவாக்கப் பணி, படிமப் பார்வைக் குழுவினரால் (ஆனி13, 2046 / சூன் 28, 2015 அன்று) பார்வையிடப்பட்டது.   சிற்பி இரவி, தனக்கு அளிக்கப்பட்ட முன்முறை படத்தினைப்போல் மிகச் சிறப்பாகச் சிலையை வடிவமைத்துள்ளார். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட படத்தில் தவறுகள் இருந்தமையால், சில குறைபாடுகள் சிலையில் உள்ளன. சிலையைப் பார்வையிட்ட பெங்களுர் முத்துச்செல்வன், ஆறு.அழகப்பன், த.சுந்தரராசன், கவிக்கோ ஞானச்செல்வன், இலக்குவனார் திருவள்ளுவன், சிரீதரன், நாஞ்சில் நடராசன், கணபதி, அனகை நா.சிவன்…

எமது படையணி விரைகிறது… எம் தேசத்தை மீட்க! – மேதகு வே.பிரபாகரன்

ஈழம் மீட்க அணிவகுத்துள்ளோம்! நாம் அணிவகுத்துள்ளோம்… நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது எமக்குத் தெரியும் ஆனால்… அதைத் தாங்கக் கூடிய மக்கள் ஆதரவென்னும் கவசம் எம்மிடம் உண்டு! எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது! எமதுஆத்ம பலமோ அதைவிட வலிமை வாய்ந்தது!…

தமிழும் சிங்களமும் – இலக்குவனார் திருவள்ளுவன்

    தமிழும் சிங்களமும்   “உலக மொழிகளின் தாய், தமிழே” என்னும் செந்தமிழ் மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், “இந்திய மொழிகளின் வரி வடிவ எழுத்துக்களின் தாய் , தமிழ் நெடுங்கணக்கின் வரி வடிவமே” என்கிறார். “எழுத்துகள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்தைய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள், தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை” என்கிறார் முனைவர் சுப்பிரமணிய(ஐய)ர். “தமிழ் எழுத்து முறையே ஆரிய எழுத்தின் முன்னோடி” என்கிறார் அறிஞர் இரைசு டேவிட்சு. அனைத்து மொழிகளையும்…

பெருமை தமிழ் மொழி ஒன்றுக்கே உண்டு! – அ.க.நவநீதகிருட்டிணன்

மக்கள் வாழ்வுக்கு இலக்கணம் வகுத்த பெருமை தமிழ் மொழி ஒன்றுக்கே உண்டு!   இனிமை நலங் கொழிக்கும் இன்பத் தமிழ் மொழிக்கு இலக்கணம் அமைந்திருப்பது போன்று, எந்த மொழிக்கும் அமையவில்லை என்பது பன்மொழி அறிந்தார் திருந்திய கருத்தாகும். தமிழில் உள்ள எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, என்னும் ஐவகை இலக்கணங்களுள் நடுவணதாகிய பொருள் இலக்கணம் எந்தப் பிறமொழிக்கும் இல்லாத தனிச்சிறப்புடையது.   இது நாகரிகமிக்கத் தமிழர்தம் நல்வாழ்வு முறைகளை வகுத்துரைக்கின்றது. இங்ஙனம் மக்கள் வாழ்வுக்கு இலக்கணம் வகுத்த பெருமை தமிழ் மொழி ஒன்றுக்கே…