நடிப்புத்தலைவர்கள் – பேராசிரியர் அறிவரசன்

துள்ளி எழுக தோழர்களே! பாங்குடன் தமிழை வளர்ப்பதற்குப் பலவும் செய்வோம் என்பார்கள்; ஆங்கில மொழியை வளர்ப்பதற்கே அனைத்தும் செய்து முடிப்பார்கள்! வடமொழி யதனை வழிபாட்டில் வாழ்க்கைத் துணைநல மணவீட்டில் இடம்பெறச் செய்தபின் வடமொழியை எதிர்க்கிறோம் என்றும் சொல்வார்கள்! சாதியை மதத்தை மேடைகளில் சாடித் தமிழர்நாம் என்பார்கள்; வீதியில் வீட்டில் சாதிமத வேற்றுமை பேணி வளர்ப்பார்கள்! ஈழத் தமிழர் எமக்கென்றும் இசைந்த தொப்புள் உறவென்பார்; வாழத் துடிக்கும் உறவுகளை மறந்து மினுக்கித் திரிவார்கள்! ஈழமண் விடுதலை பெறவேண்டும் என்றே எகிறிக் குதிப்பார்கள்; பாழும் அடிமைத் தமிழ்நாட்டில்…

காதல் ஒரு விந்தை!

– கவிக்கோ ஞானச்செல்வன் திங்களை வென்ற ஒளிமுகத்தாள்-நறும் தேன்சுவை தோற்கும் மொழியுடையாள் கொங்கலர் மேவும் கூந்தலினாள்-எழில் கொட்டும் திருவென உருவுடையாள்! கங்கு கரையறு அன்பையெல்லாம்-விழி காட்டும் எனத்தகும் கண்ணுடையாள்! பொங்கி வரும்பெரு நிலவிடையே-உயிர் போன்றதன் காதலன் தனைக்காண்பாள்! ஆயிரம் கனவுகள் கண்டதுண்டு-புவி ஆளும் அடலுறு தலைவனுண்டு ஆயிழை குரிசில் கரம்கோத்து-தினம் ஆடிப் பாடிக் களித்ததுண்டு பாய்மரக் கப்பல் இல்லறமாம்-மிகப் பரந்த பெருங்கடல் வாழ்கையதாம் சேயிழை தென்னஞ் சோலையென-வளம் செழிக்கும் நல்லறம் எண்ணிடுவாள்! பாதச் சிலம்புகள் அமைதிபெற-இளம் பாவை ஓரிடம் தனிலமர்ந்து காதலன் வரவை மனத்தெண்ணி…

தமிழ்த்திரு வாழ்க – கவியோகி

தமிழ்த்திரு வாழ்க “திருகொலு விருக்கும் தமிழ்த் திருவாழ்க! அரனருட் புதல்வி, அருங்கலைச் செல்வி வரனருள் முதல்வி; வாழிய தமிழ்த்தாய் அறிவனல் விழியாள், அமுதக் கதிர்விரி முழுமதி முகத்தாள், மோகன காந்தம் வீசிடும் அரசி மின்னெனத் தெறிக்கும் பொலிநகை முத்தம் பொழிந்திடும் வாயாள்” – கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

மேலாண்மைச் சிந்தனைகள் -பன்னாட்டுப் பயிலரங்கம்

  அன்புடையீர், வணக்கம். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், சென்னை, செம்மொழித் தமிழாய்வு  மத்திய நிறுவனமும் இணைந்து எதிர்வரும் பங்குனி 8 – பங்குனி 17, 2046 / 22-03-2015 முதல் 31-03-2015 வரை பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்த உள்ளன.    பயிலரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.   அன்புடன் சி.சிதம்பரம் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர், மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302. திண்டுக்கல் மாவட்டம். அலைபேசி: +91 9843295951 மின்னஞ்சல்: mudalvaa@gmail.com.  …

ஊராட்சி ஊழல்கள்! தொடர் நடவடிக்கை தேவை!

குள்ளப்புரம் ஊராட்சியில் பலஇலட்சம் மோசடி! ஊராட்சிச் செயலாளர் பணியிடைவிலக்கம் ஊழலுக்குத் தண்டனை பணியிடைவிலக்கம் மட்டும்தானா?   தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சியில் பல இலட்சம் உரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. குள்ளப்புரம் ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவர் சோதியம்மாள். இவர் இரண்டாவது முறையாக ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெரியகுளம் ஒன்றியத்திலேயே அதிக வருமானம் உள்ள ஊராட்சி குள்ளப்புரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஊராட்சிசெயலாளராகப் பணிபுரிந்த முத்துவேலன் என்பவர் பதவி உயர்வு பெற்று மாவட்ட ஆட்சியரகத்திற்கு மாற்றப்பட்டார்.   அதன்பின்னர் ஊராட்சிச் செயலாளராக அ.வாடிப்பட்டி ஊராட்சிச் செயலாளர்…

செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்!

செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்!     செம்மொழித்தமிழுக்கான விருதுகள் 2011-2012, 2012-2013 ஆகிய ஈராண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.    2011-12-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் செ.வை. சண்முகத்துக்கும், குறள் பீட விருது செருமன் நாட்டைச் சேர்ந்த இவா மரியா வில்டெனுக்கும், இளம் தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள் கே. ஐயப்பன், எழில் வசந்தன், கே. சவகர் ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளனர். .   இதேபோல, 2012-13-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது “தினமலர்’ ஆசிரியர் முனைவர் இரா. கிருட்டிணமூர்த்திக்கும்,…

மத்திய அரசும் தமிழகக் கட்சிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தித்திணிப்பில் உறுதி கொண்ட மத்திய அரசும் ஆரவார முழக்கங்களால் தடுமாறும் தமிழகக் கட்சிகளும்     மத்திய அரசிற்கு மக்கள் நலம் சார்ந்த கொள்கைகளில் உறுதிப்பாடு இல்லை. ஆனால், இந்தித்திணிப்பில் விடாப்பிடியான உறுதிப்பாடு உள்ளது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் மத்திய அரசின் இந்தித் திணிப்பு என்பது திட்டமிட்டுச் சீராக நடைபெற்றுக் கொண்டு பிற தேசிய மொழிகளை அழித்து வருகின்றது. இத்தகைய பிற மொழித் தேசிய இன அழிப்பு வேலையின் அரங்கேற்றக் காட்சிதான் அண்மையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.   உலகின்…

யாருக்கும் வெட்கமில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

யாருக்கும் வெட்கமில்லை! (இளந்தமிழறிஞர்களுக்கான  குடியரசுத் தலைவரின் செம்மொழி விருது வழங்கப்படாமை குறித்த வினாக் கணைகள்)     தன்மானமும் தன்மதிப்பும் மிக்க  வீரப் பரம்பரை என நாம் நம்மைச்  சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும். மொழி காக்கவும் இனம் காக்கவும் உயிர் நீத்த வீர வணக்கத்திற்குரியோர் பிறந்த குலத்தில்தான் நாமும் பிறந்துள்ளோம் என்பதைத் தவிர நமக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை முதலான பண்புகள் இல்லை என்பதே உண்மை. ஈழத்தில் இனப்படுகொலை புரிந்தவர்களை அரியணையில் ஏற்றியதில் நமக்கும் பங்கு உள்ளது என்பதே நம் இழிந்த நிலையை…

புருவங்களை முறுக்கு! – மும்பையில் ஆதிரை முழக்கம்

தமிழ்வாழ்த்து எல்லையை இழந்தாய் வாழ்ந்த இருப்பிடம் நீ தொலைத்தாய் – இன்று முல்லையும் இழந்தாய் எங்கள் முத்தமிழ்த் தாயே என்றும் தொல்லையில் கிடந்தும் வீரத் தோள்தனைத் தூக்கி நின்றாய் இல்லையே சங்கக் காலம் ஏங்கினேன் தமிழே வணக்கம். அவை வணக்கம் கொங்கன் கடற்கரையின் செல்வமிகு நங்கை பாற்கடலில் கால்பிடிக்கும் இலக்குமியின் தங்கை பாலிவுட்டின் படச்சுருளில் பளபளக்கும் அம்பை இந்திய நகரங்களில் இவள் பூலோக ரம்பை தமிழை வளர்ப்பதில் இவள் இன்னொரு கங்கை பொன்னகராம் புதுநகராம் வருவாய் எல்லாம் குவிக்கின்ற வளநகராம் மின்னரகராம் தொழில்கள் கலைகள்…

சிலம்பாறு – வே.முத்துவிசயன்

  ஆறு, சிற்றாறு, காட்டாறு, கிளையாறு, துணையாறு என்பதெல்லாம் என்ன? மதுரையில் எத்தனை ஆறுகள் உள்ளன? காடு அழிப்பினாலும், மணல் கொள்ளையாலும், தண்ணீர் வணிகத்தாலும் நம் ஆறுகள் பாலைவனமாக்கபடுகின்றன. நாம் பல ஆறுகளை மக்களுக்கு இன்னும் வெளிச்சபடுத்தவே இல்லை. மதுரையில் 10க்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளமை நமக்கு தெரியுமா? வாருங்கள் அறிந்து கொள்வோம். நீராதாரங்கள் குறித்து மக்களோடு உரையாட உலகத் தண்ணீர் நாளன்று (22.03.15, ஞாயிறு) “ஆறுகளைத் தேடி” என்கிற பயணத்தைத் தொடங்க இருக்கிறோம். இந்தப் பயணத்தின் வழி மதுரையின் ஆறுகளை கண்டடைவோம் வாருங்கள்….