மூடுவிழாவை நோக்கிக் கயிறு திரிக்கும் தொழில்

  தேனிப் பகுதியில் கயிறு திரிக்கும் தொழில் மூடப்படும் பேரிடர்(அபாயம்) உள்ளது.   தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பகுதிகளில் தென்னை மரத்தின் மட்டைகளில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழில் குடிசைத்தொழிலாக நடைபெற்று வருகிறது. இத்தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தென்னை மட்டைகளின் நார்கள் வெளிநாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் செங்கல் போன்று கடினமாக்கப்பட்டு அதனையும் வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள். இதனால் அதிக விலை கொடுத்தும்முன் தொகை கொடுத்தும் தென்னை மட்டைகளை வாங்கிச்செல்கின்றனர். தற்பொழுது குடிசைத்தொழிலாக உள்ள இத்தொழில்போதிய மூலதனத்துடன் நடைபெறுவதில்லை. இவை…

தண்ணீர்ப் பற்றாக்குறையினால் சொட்டுநீர்ப் பாசனத்திற்கு மாறிவரும் உழவர்கள்

  தேனிப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் வேளாண் பெருமக்கள் சொட்டு நீர்ப் பாசனத்திற்கு மாறிவருகிறார்கள்.   தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி, செயமங்கலம் முதலான பகுதிகளில் சோத்துப்பாறைஅணை, வைகை அணை,மஞ்சளாறு அணை ஆகிய அணைகளின் பாசனத்தை நம்பி உழுதொழில் புரிந்து வந்தனர். இதனால் நெல், கரும்பு, வாழை எனப்பயிரிட்டு தமிழகத்திற்குள்ளும் பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாகப் போதிய மழை இல்லாததால் வறட்சி காணப்பட்டது. இதனால் உழவர்கள் பயிரிட்ட தென்னை, வாழை, கொய்யா,   எலுமிச்சை மரங்கள் அனைத்தும் கருகத்துவங்கியன….

தொடரும் சாலை நேர்ச்சி(விபத்து)கள் – அதிகாரிகள் பொருட்படுத்தாமை

    தேனிப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் சாலை நேர்ச்சிகள் தொடர்கதையாகி வருகின்றன.   திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை இருவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் திண்டுக்கல்லில் இருந்து தேவதானப்பட்டி வரை இருவழி சாலை அமைக்கும் பணி முடியும் தறுவாயில் உள்ளது. அதனை ஒட்டியுள்ள சிற்றூர்களை இணைக்கும் சாலைகளைச் செப்பனிடாமல் அப்படியே விட்டுவிட்டனர்.   இருவழிச்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் சாலை இப்படியே நீளும் என்ற எண்ணத்தில் அதிவேகத்துடன் வருகின்றனர். அப்போது புல்லக்காபட்டி பகுதியில் சாலை அமைக்கப்படாததால் ஒட்டுநர்கள் வேகத்தை…

பருவமழை பொய்த்துப் போனதால் பட்டுப்போன வாழை மரங்கள்

  தேனிப் பகுதியில் பருவமழை பொய்த்துப் போனதால் வாழை மரங்கள் கருகத்துவங்கியுள்ளன.   தேனி அருகே உள்ள குள்ளப்புரம், மருகால்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, செயமங்கலம் முதலான பகுதிகளில் நுhற்றுக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை, சாகுபடி செய்யப்படுகிறது. பச்சை வாழை, மொந்தை, செவ்வாழை, கற்பூரவல்லி எனப் பலவகையான வாழைகள் பயிரிடப்பட்டு, தமிழகத்திற்குள்ளும் அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதனால் இப்பகுதி உழவர்கள் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருந்தனர்.   கடந்த இரண்டு வருடகாலமாகப் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர், வாய்க்கால் தண்ணீர்…

ஒரே இடத்தில் பல்வேறு பயிர்த்தொழில் செய்து வரும் உழவர்கள்

  தேனிப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் ஒரே நிலத்தில் பல்வேறு பயிரிடுதலில் கவனம் செலுத்தி வருகின்றனர்.   தேனிப் பகுதியில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பொழியவில்லை. இதனால் உழவிற்குரிய வேளாண்பகுதி நாளுக்குநாள் சுருங்கி வருகிறது. இந்நிலையில் கிடைக்கின்ற நீரை வைத்துக் கரும்பு, தக்காளி, முட்டைக்கோசு எனப் பல்வேறு பயிரிடுகையை ஒரே இடத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.   இதன் தொடர்பாக உழவர்களிடம் கேட்டபோது, “மழை கடந்த இரண்டு வருடகாலமாக சரிவரப் பெய்யவில்லை. இதனால் நெல் முடிந்த பின்பு வாழை அதன் பின்னர் கரும்பு…

இலக்கியவளர்ச்சிக்கழகம் – இலக்கிய இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 54

திருவாரூர் புரட்டாசி 8, 2045 / 24.09.2014 உரையரங்கம்: அ.சாகுல்அமீது முனைவர் மு.அப்துல்காதர் அன்புடன் அழைக்கும் புலவர் எண்கண் சா.மணி

ஆய்வாளர் மு.செந்தில்குமார் வாய்மொழித்தேர்வு

  மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியற்புலம் முனைவர் பட்டப் பொதுவாய்மொழித்தேர்வு   புரட்டாசி 7, 2045 / 23.09.2014 ஆய்வாளர் மு.செந்தில்குமார்

மூவாப்புகழ் மூவர் சிறப்பிதழ்

    அகரமுதல 44 ஆம் இதழ் மூவாப்புகழுக்குரிய ஆன்றோர் மூவர் சிறப்பிதழாக வருகிறது. எனவே, வழக்கமான செய்திகளுடன் இம் மூவர் குறித்த படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.(இவ்விதழில் விடுபட்ட தொடர்கள் அடுத்த இதழில் வெளிவரும்.)   செட்டம்பர்த் திங்களின் இவ்வாரத்தில் இதனைக் குறிப்பதால் யார் அந்த மூவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆம்! பாட்டுக்கொரு புலவனாய் நமக்கு எழுச்சி யூட்டும் மாக்கவி பாரதியார் (பிறப்பு: ஆவணி 28, 1913 / திசம்பர் 11, 1882 – மறைவு: கார்த்திகை 26,1954 / செட்டம்பர் 11,…

சிவகங்கை இராமச்சந்திரனாரின் சீர்மிகு பணிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழே நம் மொழியும் இனமுமாகும். ‘திராவிடம்’ என்பது மொழியுமல்ல; இனமுமல்ல. ஆனால், ‘தமிழ்’ என்னும் சொல் ‘திராவிடம்’ என்று மாறியுள்ளது. ‘திராவிடம்’ என்பது மொழியைக் குறிப்பிடுகையில் தமிழ்க்குடும்ப மொழிகளைக் குறிப்பிடுகிறது; இனத்தைக் குறிப்பிடுகையில் தமிழ்க்குடும்ப இனங்களைக் குறிப்பிடுகிறது. அதே நேரம் இயக்கத்தைக் குறிப்பிடுகையில், ஆரிய மூட நம்பிக்கைகளை அகற்றும், தமிழின் அருமை பெருமைகளை உணரச் செய்யும், தன் மதிப்பில் வாழ அறிவுறுத்தும், பகுத்தறிவை நாடச் சொல்லும் குறியீடாகத் திராவிடம் வழங்குகிறது. எனவே, ‘திராவிடம்’ என்று குறிக்கும் பொழுது தமிழரல்லாத பிற தமிழ்க்குடும்ப இனத்தவரை…

இந்த வார வல்லமையாளர் – திரு. பாலமுருகன்

 வல்லமை வளர்தமிழ் மையம் சார்பிலான வல்லமை மின்னிதழ் சித்திரை 2043 / ஏப்பிரல் 2012 இலிருந்து கிழமைதோறும்-அக்கிழமையில் சிறந்த ஆற்றலாளரைத் தேர்ந்தெடுத்து – வல்லமையாளர் விருது வழங்கி வருகின்றது. ஏதேனும் ஒரு புள்ளியில் தம் ஆற்றலைச் சிறந்த முறையில் வெளிப்படுத்தும் யாராயினும் அடையாளங் காணப்பட்டு வல்லமையாளர் விருதால் சிறப்பிக்கப்படுகின்றனர். அந்த வகையில், இந்த வார (ஆவணி 23, 2045 / செப்.8,2014) வல்லமையாளர் விருது அகரமுதல படைப்பாளர்களில் ஒருவரும் திருவண்ணாமலைத் துணை வட்டாட்சியருமான திரு ச.பாலமுருகனுக்கு வழங்கப்பெற்றுள்ளது. விருதாளர் பாலமுருகனுக்கு வாழ்த்துகளையும் விருது வழங்கும்…

வழிகாட்டும் ஒளி வேந்தன் – புலவர் இரா.வடிவேலன்

செந்தமிழர் வாழ்வென்னும் மலர்பூக்கும் கதிராய்ச் சீரேற்றும் சொற் கூட்ட வெள்ளத்தில் மழையாய் வந்தவரின் வாழ்விற்கு வன்கொடிய நெருப்பாய் வடமொழியின் வால்பற்று குழுவிற்குப் படையாய்ச் சொந்தமெனும் நம்மவரின் தோளுக்குத் துணையாய்த் தொல்லைக்கு நகை கூட்டி வாவென்னும் மலையாய்த் தந்தையாய்த் தமிழர்க்கு வெண்தாடி அலையாய்ச் சாய்ந்தாடத் தென்றலிலே சிங்கமென வந்தோன்! எண்ணத்தின் சொற்பேழை! எழுச்சிக்கு முரசம் ஏமாந்த நாட்டிற்குச் சீர்மேவ வந்தோன்! கண்ணான மண்ணிற்குக் கதியின்மை கண்டு காலத்தில் தன்மான இயக்கத்தைக் கண்டேன்! ‘விண்ணாட்டுத் தேவரிவர், வணங்குங்கள்’’ என்ற வேதத்தின் தரகற்கு விலங்கேற்ற வந்தோன் பண்ணூடு தமிழுக்குத்…