தந்தை பெரியார் 136-ஆவது பிறந்தநாள் விழா

குருதிக்கொடை – மருத்துவ முகாம் ஆவணி 29, 2045 / 14.09.2014, கா.க.புதூர், பொள்ளாச்சி பெரியார் படத்திறப்பு – கொடியேற்று விழா புரட்டாசி 1, 2045 / 17.09.2014 பொள்ளாச்சி முதல் ஆனைமலை வரை

‘இந்தி எதிர்ப்புப் போராளி’ சி.இலக்குவனார் – கதிர் நிலவன்

‘இந்தி எதிர்ப்புப் போராளி’ சி.இலக்குவனார் நினைவு நாள் ஆவணி 18, 2004/ செப். 3, 1973   1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தில் தமிழாசிரியர்களின்பங்கு முதன்மையானது. மாணவர்களுக்கு தமிழ்மொழி காக்கும் உணர்வையும் இந்தித்திணிப்பை எதிர்த்திடும் போர்க்குணத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள்தமிழாசிரியர்களே! மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் நடத்திய முதல் போராட்டம்தான் தமிழகமெங்கும்மாணவர்களைப் போர்க்களத்தில் இறக்கி விட்டது. அந்தக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் வைத்த முதல் ‘தீ’ தான் காங்கிரசு ஆட்சிக்குக் கொள்ளி வைப்பதில் முடிந்தது. இலக்குவனார்இந்தி எதிர்ப்புப் போருக்கு…

தேனி மாவட்டத்தில் காட்சிப்பொருளான பத்தாயங்கள்

  தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு நீர் வளமும் நிலவளமும் மிகுந்த பகுதி.   அண்டை மாநிலமான கேராளவில் மழை பொழிந்து இருப்பதால் எப்பொழுதும் சாரல் மழை பொழிந்து கொண்டே இருக்கும். இதன் அண்மையில் வருடம் முழுவதும் மழை பொழிவதால் வருசநாடு என்ற பெயரும் உண்டு. இவை தவிர முல்லைப்பெரியாறு அணை, மஞ்சளாறு – வைகை அணை பாய்கின்ற பகுதியாகும். இதனால் இப்பகுதியில் கடந்த காலங்களில் மும்மாரி மழை பொழிந்தும் ஆற்றுப்பாசனங்களில் நெல் விளைச்சல் எப்போதும் இருக்கும். எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று நெல்…

பரிதியன்பனுக்குத் தமிழ்நிதி விருது

  புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர்   பரிதியன்பன் என்னும் பாலசுப்பிரமணியனுக்குத் ‘தமிழ்நிதி’ விருது விருதாளர் பரிதியன்பன் மேலும் பல விருதுகளும் சிறப்புகளும் பெற ‘அகரமுதல’ வாழ்த்துகிறது.

“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙி

(ஆவணி 15, 2045 / ஆக.31,2014 தொடர்ச்சி) தீர்மானம் – 3:காவிரி மேலாண்மை வாரியம்உடனடியாக அமைக்க வேண்டும்! தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் பாசன நீராகவும், 19 மாவட்டங்களில்குடிநீராகவும் பயன்பட்டுத் தமிழ்த் தேசிய ஆறாக விளங்குகிறது காவிரி. காவிரித்தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி, 192 ஆ.மி.க. (டி.எம்.சி.) நீரைகருநாடகம் தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டும். ஆனால், கருநாடகம்தமிழகத்திற்குரியத் தண்ணீரைத் திறந்துவிடாமல், திருட்டுத் தனமாக கருநாடகஅணைகளில் தேக்கி வைத்துக் கொள்கிறது.   கருநாடகத்தின் இந்தத் திருட்டுத்தனத்தைத் தடுத்து, இறுதித் தீர்ப்பைத்தவறாமல் செயல்படுத்துவதற்காகத் தீர்ப்பாயம் கூறிய தீர்வு தான் ‘காவிரிமேலாண்மை…

தமிழர்கள் தாழ்வும் வாழ்வும் – ஙி : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆவணி 15, 2045 / ஆக.31,2014 தொடர்ச்சி)   4. தலைமை வழிபாட்டுணர்வைப் போக்குக!   தமிழக மக்களிடம் உள்ள தலைமை வழிபாட்டுணர்வே பல அழிவுகளுக்கும் சிதைவுகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. அதனால்தான் திரைப்படப் பாத்திரங்களை ஏற்று நடிப்போரை வாழும் ஆன்றோர்களாகக் கருதிக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் போக்கும் பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. இந்த எண்ணப் போக்குக் கட்சித் தலைமையிடமும் ஏற்படுவதால். பொது மக்கள் நலனுக்காகக் கட்சி என்பதை மறந்து விட்டுத் தம் சொந்த மக்கள் நலனுக்காகக் கட்சி என்று தலைவர்கள் திகழ்ந்தாலும் அவர்களைக் கண்டிக்கும் போக்கு…