தமிழ்ப்படநிலையத்தின் செயல்பாடுகள்
தமிழ்ப்படநிலைய 6 ஆம் ஆண்டுத் தொடக்க விழா!!! தமிழ்ப்படநிலையத்தின் (Tamil Studio) ஆறாம் ஆண்டுத் தொடக்க விழா, நவம்பர் 23, சனிக்கிழமை மாலை, சென்னையில் க.க.நகரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் இராம் பங்கேற்றார். தமிழ்ப்படநிலையத்தின் செயல்பாடுகள் வருமாறு:- 2008, நவம்பர் 23 ஆம் நாள் குறும்பட / ஆவணப்படங்களுக்கான இணையத்தளமாகத் தொடங்கப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டே மாற்றுத் திரைப்படத்திற்கான இயக்கமாக மாறியது.நவம்பர், 2013 இல் தமிழ்ப்படநிலையம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தது. இன்றுவரை: * 750 நிகழ்ச்சிகள், * 2100 குறும்படங்கள்…
இணைய இதழ்!
இளையவன் செயா (கந்தையா) பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை ; பறிக்கக் காத்திருக்கும் ரோசாமலர் கவின்தென்ற லிலாடும் பார்த்திருக்கும் பாவையவள் பக்குவமாய்ப் பூக்கொய்ய சேர்த்திருந்தாள் மகிழ்வைத்தன் செம்முகத்தில் ! பறிப்பவர் இலக்கணம் பாவைக்குத் தெரியும் ஓரிதழ் உதிர்ந்தாலும் ஓர்குறையே ; அவளுக்கு இதழ்உதிராப் பூவேபூவைக்கு இதயம்நிறை மகிழ்ச்சி இதழ் நடத்துவதும் இதற்கொப்பானதே ! இணையஇதழ் கண்டேன் இணையில்லாத் தமிழ்காக்கும் கணையாக விளங்கிய கால்வழி நடத்தும் இணையஇதழ் என்றும் அணையாமல் துலங்க திணையளவாய் வாழ்த்துகிறோம் தீந்தமிழில் !
மாவீரர் வாழும் பூமி! மறுபடியும் துளிர்க்கும்!!
– புலவர் சா இராமாநுசம் மாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பக்சே பாவீநீர் மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம் மீள ஆட்சி புரிவாரே
ஏனில்லை பெரியார் படம்!- தமிழேந்தி
வரலாற்றைத் திருத்தும் வேலை வழக்கமாய்ப் பார்ப்பான் வேலை பெரியாரைத் தலைகீ ழாகப் பிழைபடக்காட்டும் வேலை சரியாய்அவ் வேலை தன்னைத் தமிழ்த்தேசம் பேசு வோர்கள் விரிவாகச் செய்கின் றார்கள் விதைநெல்லை அவிக்கின் றார்கள் புராணங்கள் பொய்கள் தம்மைப் பூணூலார் சதிகள் தம்மை இராப்பகல் எடுத்துச் சொல்லி இனமானம் காத்து நின்றார் திராவிடர் தமிழர் என்றார் திருக்குறள் மேன்மை சொன்னார் பொறாமையால் இவரை மாற்றான் போலன்றோ பழிக்கின் றார்கள்! ஒருபக்கம் சாதிக் கேடோ உழைப்பாளர் தமைப்பி ளக்கும் மறுபக்கம் மதத்தின் ஆட்டம் மாத்தமிழ் நாட்டு மாண்பின் திறத்தையே…
எது சொந்தம்?
– இனஎழுச்சிக் கவிஞர் நெல்லை. இராமச்சந்திரன் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 13 அறிக்கைவிட்டு அறிக்கைவிட்டே நமை ஏமாற்றி ஆண்டுவந்தார் இந்தியாவை! தில்லி ஆட்சி விரித்தவலை வீழ்ந்திருக்கும் இறக்கும் புறாக்களாகி விசையற்றுப் பதவிசுகம் தமிழர் கண்டார்! அவித்தமுட்டை போலாகிக் கருவும் செத்து அருந்தமிழன் தில்லிக்குத் தீனி ஆனான்! புவியாண்ட தமிழினத்தான் புள்கூட் டம்போல் பூமியெலாம் பறந்தோடி அகதி ஆனான் 14 ஊரிழந்தான் உணர்வழிந்தான் தேடித் தேடி ஒவ்வொன்றாய்த் தமிழுயிரை அவன்அ ழித்தான் தேரழித்தான் தெய்வீகப் பண்ப ழித்தான்…
முறையற்ற நடவடிக்கைகள்: மூவரையும் விடுதலை செய்க!
– நீதிநாயகம் கே.சந்துரு இராசீவு கொலைவழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தைத் திருத்தியதாக மத்தியப் புலனாய்வுப் பணியகத்தின்(சி.பி.ஐ.) அப்போதைய கண்காணிப்பாளர் தியாகராசன் தெரிவித்துள்ளார். இது குறித்து நீதிநாயகம் கே.சந்துரு அதிர்ச்சியைத் தெரிவித்து மூவரையும் விடுதலை செய்யுமாறு பின்வருமாறு கருத்து தெரிவித்து வேண்டி உள்ளார்:
தமிழ் வரிவடிவம் காப்போம்! – 3
– தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) ஆங்கில வரி வடிவத்தில், எழுத்துரு இல்லாத மலாய் மொழி போலத் தமிழை மாற்றி விடலாம் என்று குறுகிய சின்னப்புத்திக்குச் சொந்தக்காரராக ஏன் இப்படி எழுத்தாளர் மாறிப்போனார் என்று தெரியவில்லை. பொதுவாக, ஆங்கிலத்தில் ‘தமிழ்99’ வகைத் தட்டச்சு முறையில் அடிப்பதை அப்படியே தமிழ் எழுத்துருவை விட்டுவிட்டு எழுதப் படிக்கப் பழகிக்கொள்ளாலம் என்று சொன்னால், அதைவிடப் பைத்தியக்காரத்தனம் எதுவும் இருக்க முடியாது. – அழகு ஒரு மொழியின் மரபே தொன்மையான அதன் எழுத்து…
மதுமயக்கத்தில் மலைப்பாம்பிற்கு இரையானார்
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் குடிபோதையில் உறங்கி கொண்டிருந்த ஒருவரை மலைப்பாம்பு ஒன்று விழுங்கி விட்டது. வனப்பகுதி அருகே உள்ள இடத்தில் மது அருந்திவிட்டு மயக்கத்தில் அயர்ந்துவிட்டவரையே மலைப்பாம்பு விழுங்கியுள்ளதாக ஊரினர் தெரிவித்துள்ளனர். பாம்பின் வயிற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதாகவிம் தெரிவிக்கப்படுகிறது.
இலக்குவனார் புகழ் என்றும் வாழ்க!
– கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் வாய்மேடு தந்த வண்டமிழ்ப் புலவர் தாய்த்தமிழ் மொழிக்கே தம்மை ஈந்தவர்! தந்தை பெரியார் தன்மானக் கொள்கையைச் சிந்தையில் கொண்ட செந்தமிழ்ச் செம்மல்! மான மறவர்! மாத்தமிழ் அறிஞர்!
தொல்காப்பிய விளக்கம்
– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழின் தொடர்ச்சி) எழுத்துப் படலம் நூன்மரபு எழுத்துப்படலத்தில் உள்ள ஒன்பது இயல்களில் முதல் இயல் நூன்மரபாகும். நூல் எழுதுவதற்கு வேண்டப்படும் எழுத்துகளைப் பற்றிக் கூறுவதனால் இவ்வியல் நூன்மரபு எனும் பெயரைப் பெற்றுள்ளது. இதில் கூறப்படுகின்ற இலக்கணம் சொற்களிடையே நிற்கும் எழுத்திற்கு அன்றித் தனியாக நிற்கும் எழுத்திற்குஆகும் என அறிதல் வேண்டும். க. எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் என்ப சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே. இந்நூற்பா தமிழ் எழுத்துகள் …
“தமிழக அரசு மூவர் தூக்கை நீக்க வேண்டும்”
உயிர்வலி ஆவணப்படவிழாவில் தோழர் கி.வெங்கட்ராமன் உரை! இராசீவு கொலை வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் குறித்தும், மரண தண்டனை ஒழிப்பு குறித்தும் பேசுகின்ற ‘உயிர்வலி’ ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வும், நீதிபதி வீ.ஆர்.கிருட்டிணய்யர் அவர்களின் 99ஆவது பிறந்தநாள் விழாவும் விருதுகள் வழங்கும் விழாவும் 24.11.2013 சென்னையில் நடைபெற்றது. சென்னை பிட்டி.தியாகராயர் அரங்கில், மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்
சீனத் தமிழ் வானொலி பொன்விழா போட்டி – அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 பரிசுகள்!
சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் முதல் நாள் தொடங்கியது. 1963-2013 ஆகசுட்டுஉடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில் சீன வானொலித் தமிழ் பிரிவு பல்வேறு போட்டிகளை நடத்தியது. இந்தப் போட்டிகளில் உலக வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் ஆர்வமுடன் பங்கேற்றனர். பொன்விழா கட்டுரைப் போட்டி, ஊடக போட்டிகள், பொது அறிவுப் போட்டி என்று நடத்தியது. பொன்விழப் போட்டிக்கான முதல் பரிசை அமெரிக்கா வாழ் தமிழரான ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ பெற்றுள்ளார். பொன் விழா கட்டுரையின் ஊடகப் பரிசான சிறப்புப்…