பாசகவின் நாடகத்திற்கு எடுத்துக்காட்டு, கச்சத்தீவு நிலைப்பாடு

  – தில்லிச் செய்தியாளர், தினமலர் செப்.3,2013   கச்சத்தீவு : அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாரதிய சனதா:     “கச்சத்தீவு, இலங்கைக்குச் சொந்தமானது எனக், கூறுவதை, ஏற்க முடியாது. இதுபற்றி விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என, பா.ச., கோரியுள்ளது.   “இராமேசுவரம் அருகேயுள்ள கச்சத்தீவு, இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதை, திரும்பப் பெறும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி, முதல்வர் செயலலிதா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளார். கேள்விக்கே இடமில்லை:  இந்த மனு, அண்மையில் உசாவலுக்கு…

குறுங்கதைப் போட்டி

  காட்சி ஊடக நுட்பகத்தின் (Visual Media Technologies) 5ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, துணுக்கு எழுத்தாளர்’சேலம் எசுகா’ உடன் இணைந்து நடத்தும் குறுங்கதைப் போட்டி இந்தப் போட்டியில் தேர்வாகும் சிறந்த தேர்வாகும் சிறந்த 50 கதைகள் கைப்பேசி இயங்கு தளங்களில் உலகத்தமிழர்கள் காணும் வகையில் கணியனாக (software) உருவாக்கப்படும். கதைகளை அனுப்பவும், தொடர்பிற்கும் மின்வரிகள் murali@visualmediatech.com yeskha@gmail.com கதைகள் அனுப்ப கடைசி நாள் : 20.07.2014 முதல் பரிசு : 20 ‘கிராம்’ வெள்ளி நாணயம் இரண்டாம் பரிசு : 10…

கரை சேருமா கச்சத்தீவு? – க. இராமையா

  தமிழக அரசியலில், இன்று கொதித்துக் கொண்டிருக்கும் பெரிய சிக்கல், கச்சத்தீவு பற்றியது. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர்களைக் காவு வாங்கியும், பசியடங்காக் காலனின் கொடுமைக்குக் காரணமான கச்சத்தீவின் சிக்கலுக்கு, அடிப்படை என்ன? தங்கத் தட்டில் வைத்து, கச்சத்தீவைத் தாரை வார்த்தது எப்படி சாத்தியமாயிற்று?   தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நடுவே, தமிழகத்தின் தென்பகுதியில், இராமேசுவரத்திற்கு அருகில், ஒரு பொட்டு போல, கச்சத்தீவு உள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள தொலைவு, 16 கி.மீ., தீவின் பரப்பளவு, 285 ஏக்கர். 20 ஆம் நூற்றாண்டில்,இராமநாதபுரம் சமத்தானத்தைச் சேர்ந்த…

நெல்லை குமாரகபிலன் இலக்கிய அறக்கட்டளை நடத்தும் இலக்கியப் போட்டி

(2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கவிதைப்போட்டி – பரிசளிப்பு விழா) ‘ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்’ என்னும் தலைப்பில் 24 வரிகளுக்கு மிகாமல் மரபுக் கவிதை ஒன்று எழுதி அனுப்ப வேண்டுகிறோம். படைப்பாளர் முகவரியும் கடவுச்சீட்டு அளவுள்ள ஒளிப்படமும் தனித்தாளில் படைப்பு தம்முடையதே என்ற உறுதிமொழியும் இணைத்திட வேண்டும். கவிதை உள்ள தாளில் பெயர், முகவரி குறிப்புகள் எவையும் இருக்கக்கூடாது. கவிதை முழு வெள்ளைத் தாளில் எழுதியோ தட்டச்சு செய்தோ கணிணி அச்சு செய்தோ மூன்று படிகள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் கவிதைகளுக்கு முதல்பரிசாக…

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல் ஆடி 10, 2045 / 26-07-2014

நிகழ்ச்சி நிரல் செம்மொழித் தமிழ்: வரலாறு, இயல்புகள், பயன்பாடு உரை: பேராசிரியர் அ.சண்முகதாசு சிறப்பு விருந்தினர்கள் உரை: பேராசிரியர் அ.யோ.வ.சந்திரகாந்தன் முனைவர் பார்வதி கந்தசாமி திரு.குணரட்ணம் இராசுகுமார் ஆனி மாத இலக்கிய நிகழ்வுகள் தொகுப்புரை: திருமதி செயகௌரி சுந்தரம் ஐயந்தெளிதல் அரங்கு நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: மெய்யகம் [3A, 5637, Finch avenue East, Scarborough, M1B 5k9] தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

தமிழ்ச்சோலை மெய்வல்லுநர் போட்டி 2014

பிரான்சு – வில்நியூவு தூயசியார்சு தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை மாணவர்களிடையேயான இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014   ஆனி 8, 2045 / 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை வில்நியூவு தூயசியார்சு நகரத் திடலில் தமிழ்ச்சங்க உறுப்பினர், பொதுச்சுடரினை, காலை 10.00 மணிக்கு ஏற்றி வைத்தார்; சங்கத் தலைவர் பிரெஞ்சு தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்; தமிழீழத் தேசியக்கொடியினை மக்கள் பேரவைச் செயலாளரும் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினரும் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது;   தமிழ்ச்சோலை விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்; எல்லாளன் சங்கிலியன் இல்லங்களின் வீரர்கள் அணிவகுப்பு செய்தனர்…

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 83-100: இலக்குவனார் திருவள்ளுவன்

  (வைகாசி 25, 2045 / சூன் 08, 2014 இதழின் தொடர்ச்சி)   83. தமிழியல் வழக்கினன் றணப்புமிகப் பெருக்கி – பெருங்கதை: 4. வத்தவ காண்டம்: 17. விரிசிகை வதுவை : 67   84. எடுக்கும் மாக் கதை இன் தமிழ்ச் செய்யுள் ஆய் நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திட(த்) – பெரியபுராணம்: பாயிரம் 3     85. பாட்டு இயல் தமிழ் உரை பயின்ற எல்லையுள், கோட்டு உயர் பனிவரைக் குன்றின் உச்சியில் – பெரியபுராணம்: 1….

9- ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, கோலாலம்பூர்

9- ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தை 2046 -/ 29 சனவரி – 1 பிப்ரவரி 2015 மலாயாப் பல்கலைக்கழகம் கோலாலம்பூர் 9-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2046, தைத்திங்கள் (சனவரி 29 முதல் பிப்ரவரி 1, 2015 வரையிலும்) கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இம்மாநாடு ஆசிய நாடுகளிலும் அமெரிக்க –…

ஊடகர் மீது கை வைக்காதீர்! ஊடகங்கள் மீது கண் வையுங்கள்!

  தினமலர் நாளிதழ்ச் செய்தியாளர் அருள்செல்வனைத் தாக்கியது அருளற்ற செயல்!   கிளர்ச்சிகள் என்பன மக்கள் குறைகளைத் தெரிவிக்கும் வாயில்கள் எனவும் அரசு அவற்றை அடக்கித் துன்புறுத்தாமல் மென்மையாகக் கையாண்டு குறைகளைப் போக்க வேண்டும் என்றும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பிடுவார். ஆனால், கிளர்ச்சிகள் என்றாலே அரசை அழிக்கும் ஆயுதமாகவும் கிளர்ச்சியாளர்கள் என்றாலே நாட்டின் பகைவர்கள் என்றும் கருதும் போக்கு எல்லா நாட்டிலும் உள்ளது வருந்தத்தக்கதே! இதனால், மக்களின் உற்ற தோழனாக இருக்க வேண்டிய காவல்துறை ஆளும்கட்சியின் அடிவருடிபோல் நடந்துகொண்டு மக்களுக்குத் தீங்கிழைத்து, அரசிற்கும்…