மாபெரும் தமிழறிவுப் போட்டி, தொரண்டோ
தொரண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை நிதிசேர் தொடர்பாக மாபெரும் தமிழறிவுப் போட்டி, தொரண்டோ Fundraising for University of Toronto Tamil Chair Grand Tamil Knowledge Competition தொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக நிதி சேகரிக்கும் நோக்கிலும் மாணவர்களுக்குத் தமிழ், தமிழர் தொடர்பான அறிவை ஊட்டும் நோக்கோடும் மாணவர்களுக்கான மாபெரும் தமிழறிவுப் போட்டி நடைபெறவுள்ளது. நிலைகள் கீழ்ப்பிரிவு 12 வயது வரை 80 வினாக்கள் மேற்பிரிவு 18 வயது வரை 120 வினாக்கள் இப்போட்டிகளுக்கான வினாக்களும் விடைகளும் இணையத் தளத்தில் வழங்கப்பட்டுள்ளன….
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் வகுப்புகள் தொடக்கம்!
மிச்சிகன் பல்கலைக்கழகம் தெற்காசியப் படிப்பு மையம் தமிழ் வகுப்புகள் தொடக்கம் பயில வாரீர்! அன்புள்ள மிச்சிகன் தமிழ் மக்களே! மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் படிப்பு மையம் ஓர் அரிய வாய்ப்பினை உங்களுக்கு வழங்குகிறது. கடந்த 12 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு தமிழ் பேராசிரியர் மூலம் தமிழ் முறையாகப் பயில ஒரு வாய்ப்பு. தமிழ்ப் பேராசிரியர் திருமதி வித்தியா மோகன் அவர்களின் வகுப்புகள் மாணவர்களின் சேர்க்கைக்காக தொடங்கப்பட்டுள்ளது. ஆசிய மொழி / ASIANLAN 255 இரண்டாம் ஆண்டு தமிழ் I ஆசிய மொழி / ASIANLAN…
உலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019
புரட்டாசி 20, 2050 – 07.10.2013 திங்கள் காலை 10.00 ஒளவைக்கோட்டம், திருவையாறு உலக உத்தமர் காந்தியடிகள் தமிழ்க் கவிஞரகளின் கவிதாஞ்சலி கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் முனைவர் மு.கலைவேந்தன் தலைவர், அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் மன்றம் கல்லாடனார் கல்விக் கழகம், புதுச்சேரி ஒளவைக்கோட்ட அறிஞர் பேரவை, திருவையாறு
சிலப்பதிகார மாநாடு 2019, சிட்டினி, ஆத்திரேலியா
இளங்கோவடிகள் சிலை திறப்பு விழா முதலாவது அனைத்துலகச் சிலப்பதிகார மாநாடு, 2019 புரட்டாசி 10-12, 2050 – செட்டம்பர் 27, 28, 29, 2019 தமிழ் இலக்கியக் கலை மன்றம் ஆத்திரேலியா
அனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு
அனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு சிறப்புப் பயிலரங்குகள் ஆடி 11, 2050 – 27.07.2019 சனி காலை 9.30 முதல் மாலை 5.00 வரை புத்தகக் கண்காட்சி
முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
முனைவர் வா.செ. குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முனைவர் வா.செ.குழந்தை சாமி அறக்கட்டளையின் தலைவர் ப. தங்கராசு வெளியிட்டுள்ள அறிக்கை: முனைவர் வா.செ.குழந்தை சாமி அறக்கட்டளை சார்பில் கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான விருதுக்குத் தொல்லியல், கல் வெட்டியல், நாணயவியல், அகழாய்வு, பலதொழில் துறைகளில் பயன்படுத்தியுள்ள, ஆனால் அகராதிகளில் இது வரை இடம்பெறாத புதிய சொற்களின் தொகுப்பு, மொழிச் சீர்திருத்தம், சமுதாயச் சீர்திருத்தம்,…
பூம்புகார் அவலநிலை – க.தமிழமல்லன்
பூம்புகார் அவலநிலை 1975இல் தமிழக முதல்வராக இருந்த இலக்கியப்பேராசான் கலைஞர் தம் கற்பனை வளத்தால் சிலப்பதிகாரம் என்னும் ஒப்பற்ற இலக்கியத்திற்கு உயர்வாழ்வு அளித்தார். சிலப்பதிகாரக் கதைக்காட்சிகளை நுட்பம் மிக்க சிற்பப் பலகைகளாக உருவாக்கினார். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட எழுநிலைமாடத்தைப் பூம்புகாரில் கட்டி அதில் மக்கள் பார்த்து மகிழுமாறு பதிக்கச்செய்தார். அவற்றை ஒருமுறை பார்த்தாலே சிலப்பதிகாரத்தைப் படித்த எண்ணம் நமக்குத் தோன்றும்.மிக அழகான கண்ணகி, மாதவி சிலைகளையும் அங்கு நிறுவச் செய்தார். மக்கள் அவர்களை நேரில் பார்க்கும் தோற்றத்தையே அச்சிலைகள் உண்டாக்கும். ஏறத்தாழ 34 குறுக்கம் (ஏக்கர்)…
வெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்
வெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக! உலகெங்கும் உள்ள சட்டத்தின் ஆட்சியில் தண்டனை பெற்றவர்களைத் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்வதும் ஒரு பகுதியாகும். அண்மையில் இலங்கையில் ‘புத்தபூர்ணிமா’ எனப்படும் வைகாசி விசாகச் சிறப்பு நாளில் 762 தண்டனைவாசிகளை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது ஓர் எடுத்துக்காட்டாகும். இதை எல்லாம் அறியாமல் அடிக்கடிச் சிலர் “கொலையாளிகளை விடுதலை செய்யலாமா” என்கின்றனர். எழுவர் விடுதலைக்கு நீதிமன்றம் குறுக்கே நிற்கவில்லை. ஏனெனில் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்வதில் அது தலையிடாது. அவ்வாறிருக்க ஆளுநர் தமிழக அரசின் முடிவுகளுக்கு எதிராகவும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு…
பிள்ளைச் செல்வங்கள் நன்னெறியில் நடை பெற வாய்ப்பு! திருக்குறளைக் கற்பித்துப் பணப் பரிசும் தருகிறார்கள்!
இயங்கு தமிழ் வழங்கும் திருக்குறள் கற்றால் …. மொத்தம் நூறாயிரம் உரூபாய் பரிசு திருக்குறள் வகுப்பில் சேர்ந்து திருக்குறள் பயின்று தேர்ச்சி பெற்றால் முதல் பரிசு உரூ.25,000 பயிற்சிக்காலம் சூன் 08 முதல் திசம்பர் 2019 முடிய வகுப்பு மையங்கள் மயிலாப்பூர், க.க.நகர், புது வண்ணை, மேடவாக்கம் (பள்ளியின் பெயர்கள் தொடர்பு கொள்வோருக்குத் தெரிவிக்கப்படும்) தொடர்பிற்கு: 98405 79871, 98400 03360, 99404 92064
பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது – இலக்குவனார் திருவள்ளுவன், மாலைமுரசு
பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது தமிழ் அறிஞர்கள் கண்டனம் சென்னை, மே 11 பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது என்று தமிழ் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாணாக்கர்களுக்குத் தரமான தமிழறிவை ஊட்டித் தமிழ்ப்பற்றை வளர்க்க வேண்டியது கல்வித்துறையின் கடமை. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள கல்வித்துறையோ தமிழைத் தவணை முறையில் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு மேனிலைப்பள்ளிகளில் – 11, 12 ஆம் வகுப்புகளில்…
மொழிப்போர் ஈகி திருப்பூர் பெரியசாமிக்கு உதவுங்கள்! – பெ. மணியரசன்
நோயில் துன்புறும் மொழிப்போர் ஈகி திருப்பூர் பெரியசாமி அவர்களுக்கு உதவுங்கள்!தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள் அன்பார்ந்த தமிழ்ப் பெருமக்களே ! மொழிப்போர் ஈகியர், திருப்பூர் ப. பெரியசாமி அவர்களைத் தமிழ் உணர்வாளர்கள் நன்கு அறிவர். 1965 இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் திருப்பூரில் கலந்து கொண்டு போராடியவர் திரு. பெரியசாமி அவர்கள். அப்போது அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கிளைச் செயலாளராக இருந்தார். இப்போது அவருக்கு அகவை 83. இந்தித் திணிப்பை எதிர்த்து அவர் ஏற்றிய கருப்புக் கொடியை இறக்கச் சொல்லி காவல் துறை பெரியசாமிக்குக் கட்டளையிட்டது. கருப்புக் கொடியை இறக்க மறுத்துவிட்டார் பெரியசாமி. 1965 – இந்தி எதிர்ப்புப் போர் என்பது, தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய உரிமைப் போராட்ட நிகழ்வாகும். திருப்பூரில் ஏராளமானவர்களைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அதேபோல், குமாரபாளையம் – பொள்ளாச்சி ஆகிய இடங்களிலும்இந்தியை எதிர்த்த தமிழர்களை சுட்டுக் கொன்று அவர்தம் பிணங்களைச் சரக்குந்தில் ஏற்றிச் சென்று காவல்துறையினர் எரித்தனர். தமிழ்நாடு முழுவதும் முந்நூறு பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், கொல்லப்பட்டவர்களின் உண்மையானஎண்ணிக்கையை அரசு வெளியிடவில்லை என்றும்…
நினைவேந்தல் நாளில் கறுப்புப்பட்டி அணிவோம்! மரம் நாட்டுவோம்! –வி.உருத்திரகுமாரன்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம்! ஆளுக்கொரு மரம் நாட்டுவோம்! – தலைமையர் வி.உருத்திரகுமாரன் பெரும் இனவழிப்பொன்றின் ஊடாகத் தமிழர் தேசத்தை வன் கவர்வு செய்த, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் கூட்டுப்பெருந்துயரின் நாளாகிய தமிழீத் தேசியத் துக்க நாளில், இரண்டு செயற்பாடுகளைத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்த்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பத்து ஆண்டுகளிலும் தமிழ்…
