பிணம் மிதக்கும் கங்கையிடம் இரக்கமா? – ஆரூர் தமிழ்நாடன்

பிணம் மிதக்கும் கங்கையிடம் இரக்கமா?   உழவர்களின் கண்ணீரில் கரைந்துகொண்டிருக்கிறது தேசத்தின் மீதான நம்பிக்கை. இங்கே அதிகாரத்தில் பாலை. அதனிடம் நீதிகேட்டுப் போராடுகிறது எங்கள் வண்டல். கழனிகளுக்குப் பாலூட்டும் கருணைக் காவிரி பிணம் மிதக்கும் கங்கையிடம் இரக்கத்தை  எதிர்பார்க்கலாமா?  வடக்கத்தி கோதுமை தெற்கத்தி அரிசியை எள்ளி நகையாடுவது உயிரியல் அவமானம். வேளாண் தோழனே! பசிக்குச் சோறிடும் உன்னைப் பசியோடு அலையவைக்கிறது தேசம். கதிர் அறுக்கும் உன் அரிவாளைப் பிடுங்கி உன் கழுத்தை அறுக்கிறது தேசம் நாட்டின் மானம் காக்கப் பருத்தி கொடுக்கும் உன்னை அம்மணமாக்கி…

பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 – முனைவர் நா.இளங்கோ

(பாவேந்தரும் பொதுவுடைமையும் 1/4  தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4     மானிடத்தின் மகத்துவம் பேசும் கவிஞன், சமத்துவத்தின் தேவையை, உயர்வைப் பேசும் கவிஞன், உழைக்கும் மக்களின் உன்னதத்தைப் பேசும் கவிஞன் என்பதோடு நில்லாமல், புதியதோர் உலகம் செய்வோம்- கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம் என்று புதிய உலகம் அதுவும் பொதுவுடைமை உலகம் அமைக்க விரும்புகிறார் பாவேந்தர். மேலும் உலகப்பன் பாடலில் ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால் ஓர் நொடிக்குள்…

சிட்டுக்குருவி – சந்தர் சுப்பிரமணியன்

சிட்டுக்குருவி பட்டுச் சிறகைப் பலமாய் ஆட்டிப் பறந்து வருகின்ற சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு?  சீக்கிரம் நீசொல்லு!   குட்டி அலகும் குறுகுறு கண்ணும் கொண்டோர் கிளையமரும் சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு!   கொட்டை பிரித்துக் குட்டிப் பழத்தைக் கொத்தித் தின்கின்ற சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு!   நெட்டை மரத்தின் நிழலில் ஒருநாள் நின்றேன் இளைப்பாற! சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு!  – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்  புன்னகைப் பூக்கள்  பக்கம் 36

அரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி இந்தி ஒழியாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

அரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி  இந்தி ஒழியாது!    இந்தித்திணிப்பு என்பது புதிய செயல்போல் தலைவர்கள் அவ்வப்பொழுது அறிக்கை விடுவதும் கண்டனம் தெரிவிப்பதும் வழக்கமாக உள்ளது. இந்தியை  எதிர்த்து அறிக்கை விடுவதால் எப்பயனும் இல்லை.   “இந்தியைத்திணித்தால் எரிமலையாவோம்”, “இந்தியைத்திணித்தால் புரட்சி வெடிக்கும்! தூங்கும்புலியை இடறாதீர்!”, “நாங்கள் இருக்கும் வரை இந்தியைத்திணிக்க விடமாட்டோம்” என்பனபோன்ற வெற்றுக்கூச்சல்களை அரசியல் தலைவர்கள் நிறுத்த வேண்டும்.    நம்மைப்போல், “என்றும் இந்தி! இன்றும் இந்தி!” என்று சொல்லிக்கொண்டிராமல் எங்கும் எதிலும் இந்தியை மத்திய அரசு திணித்துக்கொண்டுதான் உள்ளது. ஆனால், எப்பொழுதாவது…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு)   தமிழ்நாட்டில் தமிழே எல்லா நிலைகளிலும் நிலைத்து நிற்க   வேண்டுமெனில் தமிழ்வழிக்கல்வியே தேவை; அதைப் பாமரர்களும் உணர்ந்து கொள்ளவும் அதன் மூலம் அரசு தமிழ் வழிக் கல்வியையே நடைமுறைப்படுத்தவும் தமிழ்உரிமைப் பெருநடைப் பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டார். அதன் குறிக்கோள்களாகப் பின்வருவனவற்றை அறிவித்தார். தமிழ் உரிமைப்பெருநடை அணி  குறிக்கோள்கள் கல்லூரிகளில் தமிழைப் பாடமொழியாக ஆக்குகின்ற அரசின் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று தமிழக அரசை வேண்டுதல். மாணவர்கட்கும் பெற்றோர்க்கும் தமிழ் வழியாகப்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (1.) – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 1   தமிழ்மொழிக்குப் புதுமலர்ச்சியும் புதிய வேகமும் புதிய சிந்தனைகளும் சேர்த்த மாக்கவி பாரதியார், ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோரா திருந்தல்’ என்று அறிவித்தார். நாட்டு மக்கள் நலமுற்று வாழவும், நானிலத்தோர் மேனிலை எய்தவும், தமது பாட்டுத் திறத்தைப் பயன்படுத்தினார் பாரதியார்.  மாக்கவி பாரதியார் வழியில் அடி எடுத்து வைத்து முன்னேறி மேலே மேலே சென்று கொண்டிருப்பவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். “தமிழருக்குப் புதிய வாழ்வும், புதிய எழுச்சியும்’ புதிய சிந்தனையும், உள்ளத்தெளிவும் ஏற்பட…

இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே! – இரா.திருமுருகன்

இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே!   பாட்டியல்கள் சிற்றிலக்கியங்களின் தொகை தொண்ணூற்றாறு என்று கூறினாலும் தமிழில் 360 வகைச் சிற்றிலக்கியங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஆற்றுப்படை, பிள்ளைத்தமிழ், கோவை, உலா, தூது, பரணி, கலம்பகம், பள்ளு, குறவஞ்சி, அந்தாதி, புராணம் ஆகியவை பெருவழக்கில் உள்ளன. … …. ….   இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே. தமிழ்ச் சிற்றிலக்கியங்களுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு சிற்றிலக்கியங்கள் தரும் இசைச் செய்திகள், சிற்றிலக்கியங்களில் காணப்படும் இசைப்பாடல்கள், இசைப்பாடல்களாகவே அமைந்த சிற்றிலக்கியங்கள் என்ற மூன்று வகையில் அடங்கும். -முனைவர் இரா.திருமுருகன்:…

பாவேந்தரும் பொதுவுடைமையும் 1/4 – முனைவர் நா.இளங்கோ

பாவேந்தரும் பொதுவுடைமையும் 1/4   உலகம் உண்ண உண், உடுக்க உடுப்பாய் என்று உலகு தழுவிய பார்வையால் மானிட சமுத்திரம் நானென்று கூவிய புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டு தந்த பாவலர்களில் தலைசிறந்தவர். பாவேந்தரின் கவிதை வீச்சு தனித்தன்மை வாய்ந்தது. செம்மாந்த மொழிநடையும் செழுமையுடைய சொல்லழகும் பொருளழகும் ஒரு சேர இணைந்து அவரின் பாடல்களுக்குத் தனியழகையும் மெருகையும் ஊட்டவல்லன. தமிழ்க் கவிஞர்களில் மட்டுமில்லாது இந்தியக் கவிஞர்களிலும் கூட வேறு எவரோடும் இணைவைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவருடைய கவிதைகள் தமிழ், தமிழர்…

பகுத்தறிவு முத்து மீனாட்சிசுந்தரம் – இலக்குவனார் திருவள்ளுவன்

பகுத்தறிவு முத்து மீனாட்சிசுந்தரம்    விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்-நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள் 548)    தொகுத்து இனிமையாகச் சொல்பவர்  கூறுவதை உலகம் விரைந்துகேட்கும் என்கிறார் தெய்வப்புலவர்.   இவ்வாறு இனிமையாகவும் தணிமையாகவும் சொல்லும் வல்லமை மிக்கவர் முத்துச்செல்வன் என்னும் திரு மீனாட்சி சுந்தரம். எனவேதான் அவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்த பொழுது எண்ணியவற்றை எளிதில் நிறைவேற்றினார்.   சொந்தஊரான திருச்சிராப்பள்ளியில் இருந்து பெங்களூர் வந்த ஆண்டு 1966. வந்தவுடன் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். உறுப்பினராகவும் தலைவர் முதலான பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். இப்பொழுதும் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து  தொண்டாற்றிவருகிறார்.   பெங்களூரில்,…

மே நாள் – கோவைக்கோதை

மே நாள் – கோவைக்கோதை உழைப்பின் ஊதியம் இளைத்தது. உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர். களைப்பில் மனிதர் வளைந்தனர். சளைக்கவில்லை பலர் விழித்தனர். நுழைந்தது கேள்விகள் – கொதித்தனர். விளைந்தது போராட்டம் – குதித்தனர். சிக்காகோ நியூயோர்க்கு  பாசுடனீறாக அக்கிரமம் அழிக்கத் திரண்டனர். நோக்கம் நிறைவேறப் போராட்டம், சிறை. உக்கிரமானது பன்னாட்டுப் புரட்சி. உழைக்கும் நேரம் எட்டுமணியாக உரிமையைப் போராடி வென்றனர். தொகுதியாய்க் கூட்டங்கள் உரிமைபேச தொழிலாளர் நாளானது மே ஒன்று. எப்போதும் பணத்தில் குறியானவர்கள், தப்பாக மக்களை ஏமாற்றுபவர்கள், எப்போது தானாகத் திருந்துவார்கள், அப்போதன்றோ…

குடிப்பீரா உழவனின் கண்ணீர்? – ஆரூர் தமிழ்நாடன்

குடிப்பீரா உழவனின் கண்ணீர்?    அதிகார மேடையில் சதிராடும் பேய்களே அநியாயம் செய்யலாமா? – உங்கள் அலட்சிய வேள்விக்கு வேளாண் தோழர்கள் விறகாக எரியலாமா?   விதியற்றுக் கதியற்று உழவனும் துயரிலே வெந்துபோய்க்  கதறலாமா? -எங்கள் வேளாண் தோழர்கள் படும்பாட்டை இன்னமும் வேடிக்கை பார்க்கலாமா?   நதிநீரைக் கேட்பதும் கடன்நீக்கச் சொல்வதும் நாட்டோரின்   உரிமைதானே! -தீய நரிகளே உழவனின் கண்ணீரைக் குடிக்கவா நாற்காலி ஏறினீர்கள்?   சதிகாரக் கும்பலே கதியற்ற உங்களைச் சடுதியில் விரட்டுவோமே! -சற்றும் வெட்கமே இல்லாத வேதாந்தக் கூட்டமே விரட்டியே துரத்துவோமே!…

சுந்தரச் சிலேடைகள் 11 : கண்ணும் கத்தியும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 11 கண்ணும் கத்தியும் ஒளிர்ந்திடும், காப்படையும் , நீர்காணும், ஒப்பில் பளிங்கொக்கும் ,போர்செய்யும் , பாயும்- தெளிந்தோரே நல்லுலகம் கண்ட  நடைமாதர் கண்களுக்கு வல்லோரின் கூர்வாளே ஒப்பு . கண் பெண்களின் கண்கள் ஒளி வீசும் இமை என்னும் உறைக்குள் பாதுகாப்பாய் இருக்கும் . சோகத்திலோ , மகிழ்ச்சியான நேரத்திலோ கண்களிலிருந்து நீர் வரும் . பளிங்கை ஒத்து வெண்ணிறம் கொண்டிருக்கும் . கண்கள் காதலனுடன் அடிக்கடி போர் புரியும் . ஆடவர் ஆழ்மனம் வரை ஊடுருவிப் பாய்ந்து…