ஊன்விற்று வாழ்வதும்தான் வாழ்வோ? – கு. நா. கவின்முருகு

ஊன்விற்று வாழ்வதும்தான் வாழ்வோ? பிணந்தின்னிக் கூட்டமடா இந்தக் கூட்டம் பிழைப்பிற்கு மானமின்றி விழுவர் காலில்! பணத்தையெண்ணிச் சுரண்டித்தான் மானம் கெட்டார் பாமரரின் உயிர்குடித்தும் லாபம் காண்டார்! குணமிழந்தே நாய்களைப்போல் அலைந்து சுற்றி குலம்செழிக்க குடிகெடுக்க தலைவர் ஆனார் மணந்துகொண்ட இல்லாளோ இணங்கா விட்டால் மக்களுக்கு நல்லவை செய்து வாழ்வார்! பிச்சைக்கே வாக்குவாங்கி கோட்டை போக பாட்டாளி வயிற்றுக்கோ செய்த தென்ன? இச்சைக்காம் நாற்காலி சண்டை, போட்டி இடுப்பிலுள்ள வேட்டிக்கோ கறைகள் உண்டு! எச்சையிலை நாய்களிடம் பட்ட பாடாய் எங்களுக்குத் திண்டாட்டம் விடிய லில்லை! சச்சுவுக்கு…

ஐ.நா அவையின் பட்டயம் சமற்கிருத மொழியிலேன்? – மு.பி்.பா.

ஐ.நா அவையின்  பட்டயம் சமற்கிருத மொழியிலேன்?    அமெரிக்காவின் சான்பிரான்சிசுகோ நகரில் பன்னாட்டு அமைப்பை உருவாக்குவதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு 1945ஆம் ஆண்டு அட்டோபர் 24ஆம் நாள் நடைபெற்றது. அதில் ஐ.நா அமைப்பை உருவாக்குவதற்காக உலக நாடுகளிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் உரிமை ஆவணமாக இயற்றப்பட்டது.   இந்த அறிக்கை/பட்டயம்(charter) ஐ.நா-வின் ஆறு அலுவல் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. ஐ.நா மன்றத்தின் அலுவல் மொழிகளாக அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, இரசியம், எசுப்பானியம் (Spanish) ஆகிய ஆறு மொழிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அந்த ஆறு மொழிகளோடு ஏழாவது…

எண்ணிறந்த குணத்தோய் நீ!

எண்ணிறந்த குணத்தோய் நீ! எண்ணிறந்த குணத்தோய் நீ; யாவர்க்கு மரியோய் நீ; உண்ணிறைந்த வருளோய் நீ; உயர்பார நிறைத்தோய் நீ; மெய்ப்பொருளை யறிந்தோய் நீ; மெய்யறமிங் களித்தோய் நீ; செப்பரிய தவத்தோய் நீ; சேர்வார்க்குச் சார்வு நீ;   வீரசோழியம், யாப்பருங்கலம் 11, உரை

தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்

(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 3 தொடர்ச்சி) தமிழின் தனிப்பெருந் தன்மைகள் தூய்மை     தமிழ் குமரிநாட்டில் தானே தோன்றி வளர்ந்த தனிமொழியாதலாலும், அதை நுண்ணறிவு மிக்க பொதுமக்களும் புலமக்களும் பண்படுத்தி வளர்த்தமையாலும், நீராவியையும் மின்னியத்தையும் துணைக் கொள்ளாத எல்லாக் கலைகளையும் அறிவியல்களையும் பண்டைத் தமிழரே கண்டறிந்துவிட்டமையாலும், ஆயிரக்கணக்கான உலக வழக்குச் சொற்களும் நூல் வழக்குச் சொற்களும் இறந்துபட்ட இக்காலத்தும், எப்பொருள்பற்றியும், பழஞ்சொற் கொண்டும் புதுச்சொற் புனைந்தும், முழுத் தூய்மையாகப் பேசத் தமிழ் ஒன்றில்தான் இயலும். இவ் வுண்மையை அறிந்தே, தமிழ் வடமொழித் துணையின்றித் தனித்து…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 48(2.18). அச்ச மொழித்தல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 47(2.17) – தொடர்ச்சி]   மெய்யறம் இல்வாழ்வியல் 48. அச்ச மொழித்தல் அச்ச மனமுட லழிவுற நடுங்கல். அச்சம் என்பது உடலும் மனமும் பதறுதல் ஆகும். அஃதறி யாமையி னந்தமென் றுணர்க. அச்சம் அறியாமையின் உச்சம் ஆகும். அறம்புகழ் செய்தலா லழியினும் வாழ்வாம். அறமும் புகழும் ஏற்படுத்தக்கூடிய நல்ல செயல்களைச் செய்வதால் துன்பம் ஏற்பட்டாலும் அது பின்னர் நல்வாழ்வைத் தரும். மறம்பழி செய்தலால் வாழினு மழிவாம். பழி ஏற்படுத்தக்கூடிய தீய செயல்களைச் செய்வதால் நன்மை ஏற்பட்டாலும் அது பின்னர் அழிவைத் தரும்….

கடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்

கடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு?    சாதி என்பது பழந்தமிழரிடம் இல்லாத ஒன்று. இன்றோ, ஆரியரால் புகுத்தப்பட்ட  சாதி, மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கி, உயிர் பறிக்கும் அளவிற்கு வேரூன்றிய பெருங்கேடாய் மாறிவிட்டது.  சாதிகள் சிலவற்றின் அடையாளமாக இருப்பது பூணூல். வீரம் மிகு தமிழர்கள் அம்புறாத்தூணியை அணிந்திருந்தனர். தோளில் அணியும் அம்புகள் நிறைந்த கூடுதான் இது. இது மூவகைப்படும். இதனைப் பார்த்த ஆரியர்கள் இதுபோல் முப்புரி நூலை அணிந்தனர். பிராமணர்களின் அடையாளமாக விளங்குவது பூணூலே. ஆனால், பொற்கொல்லர், தச்சர் முதலான கை வினைஞர்கள் தாங்கள்தான் பிறக்கும்…

தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 3 – ஞா.தேவநேயர்

(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 2 தொடர்ச்சி)   3 தமிழின் தனிப்பெருந் தன்மைகள் தாய்மை     பெற்றோரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் குமரிநாட்டுத் தமிழ்ச்சொற்கள், ஆரியம் உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றில் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.     நூன், நூம் என்னும் பண்டைத் தமிழ் முன்னிலைப் பெயர்கள், வடநாட்டு இந்தியில் து, தும் என்றும், இலத்தீனில் து, வேஃச்(ஸ்)  என்றும், கிரேக்கத்தில் தூ (சூ), ஃக(ஹ்)மேயிஃச்(ஸ்) என்றும் பழைய ஆங்கிலத்தில்  தூ, யி(யூ) என்றும், சமற்கிருதத்தில் த்வம், யூயம் என்றும் முறையே…

காலந்தோறும் தமிழ் வரிவடிவம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

காலந்தோறும் தமிழ்  வரிவடிவம்!     எந்த மொழியாக இருந்தாலும் காலந்தோறும் வளர்ச்சிநிலையை அடைவதே இயற்கை. தமிழ்மொழியும் அத்தகைய வளர்ச்சி நிலையை அடைந்ததே. இருப்பினும் தொல்காப்பியத்திற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவ்வளர்ச்சி நிலையைத் தமிழ் எட்டிவிட்டது. மக்களினம் தோன்றிய இடம், கடல்கொண்ட பகுதியும் சேர்ந்த தமிழ்நிலம். மக்கள் தோன்றிய பொழுது கருத்துப் பரிமாற்றத்திற்காகச் செய்கையைப் பயன்படுத்தி, அதன் பின்னர், ஓவிய உருக்களைப் பயன்படுத்தியுள்ளனர். பல்வேறு வளர்ச்சிகளுக்குப் பின்னர், நெடுங்கணக்கு என்பதை முறைப்படுத்திய காலத்தில் தமிழ்வரிவடிவம் அறிவியல் முறையில் அமைந்து விட்டது. எனவே, தமிழின்…

குறள்மேற்கோள் நூல்கள்

  திருக்குறளைத் தம்மில் ஒரு பகுதியாக வைத்துப் போற்றும் விளக்க நூல்கள் இரங்கேச வெண்பா சிவசிவ வெண்பா சினேந்திர வெண்பா சோமேசர் முதுமொழி வெண்பா திருக்குறள் குமரேச வெண்பா திருக்குறள் விளக்க வெண்பா திருத்தொண்டர் வெண்பா திருப் புல்லாணி மாலை திருமலை வெண்பா தினகர வெண்பா பழைய விருத்த நூல் முதுமொழி மேல் வைப்பு முருகேசர் முதுநெறி வெண்பா வடமலை வெண்பா வள்ளுவர் நேரிசை   பாடல் எடுத்துக்காட்டு: இரங்கேச வெண்பா அல்லது நீதிசூடாமணி : சொன்னகம்பத் தேமடங்கல் தோன்றுதலால் அன்பரு இன்னமுத மாகும்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு] – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ]  தொடர்ச்சி)                        தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு] இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி   நெல்லையில் பணியாற்றிய பேராசிரியர் சி.இலக்குவனார் அடுத்து விருதுநகர் செந்திற்குமாரநாடார் இந்துக்கல்லூரியில் (10.08.47 அன்று) தமிழ்த்துறைத்தலைவராகப் பணியில் சேர்ந்தார்; இக்கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பின்மையால் இளங்கலையில் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார். கல்லூரியிலும் தமிழ் அமைப்புகள் மூலமாக நகரிலும் தம் தமிழ்த் தொண்டினைத் தொடர்ந்தார் பேராசிரியர்.   “பேராசிரியர் (சி.இலக்குவனார்) சென்ற இடங்களில் எல்லாம் தமிழ்த் தொண்டே நிகழ்ந்தது. தமிழுக்கு மறுமலர்ச்சி…

பொங்கி வாடா! – காசி ஆனந்தன்

பொங்கி வாடா! தீயெழுந்து அடுப்பினிலே பாலைச் சுட்டால் சினந்தெழுந்து பால்பொங்கித் தீயணைக்கும்! நீ உவந்து செய்கின்ற பொங்கல் வெற்று நிகழ்வன்று!  வீரத்தின் பாடம் கண்டாய்! தாயிழந்த சேயர்போல் தமிழர் ஈழம் தனையிழந்து சினங்கொண்டு பொங்குகின்றார்! பாய்! சிவந்து களமாடு! பொங்கி வாடா! பகைநொறுக்கித் தமிழீழ மண்ணை மீட்போம்! திரைப்படத்தின் மார்புகளைத் தின்னும் கண்ணால் தீந்தமிழ்த்தாய் ஈழத்தில் சாவின் வாயில் இரைப்படப்போய் விழும்புலிகள் களத்தின் புண்கள் இருந்த மலை மார்புகளைப் பார்ப்பாய்! ஆங்கே நிரைப்பட நாளும் களத்தை நிறைத்தார் வீரர்! நீ என்னடா இங்கே கிழித்தாய்?…

இதற்குத்தானா தாழ்ச்சி செய்தீர் ஆளுநரே! – இலக்குவனார் திருவள்ளுவன்

இதற்குத்தானா தாழ்ச்சி செய்தீர் ஆளுநரே!   தமிழ்நாட்டரசின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தை 23, 2048 / பிப்பிரவரி 5, 2017 அன்று தன் முதல்வர் பதவியைவிட்டு விலகி மடல் அளித்துள்ளார். அன்றே அ.தி.மு.க. சட்டமன்றக்கட்சியின் தலைவராக வி.கி.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அன்றைய நாளில் தமிழ்நாட்டில்தான் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் இருந்துள்ளார். ஆனால், உடனே தில்லி பறந்துவிட்டார். மத்திய அதிகாரமையத்தால் மிரட்டப்பட்ட பன்னீர்செல்வம் கட்சியில் தான் மிரட்டப்பட்டதால் பதவி விலகியதாக அறிவித்தார். இதனால் தமிழ்நாடு குழப்பத்தைச் சந்தித்துள்ளது.   பெரிய மாநிலமான தமிழ்நாட்டிற்கு முழுமையான ஆளுநரை…