ஊர்க்காதலுக்கு உறுமுகின்றார் – பாரதியார்

ஊர்க்காதலுக்கு உறுமுகின்றார் நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால், நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்; ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்; பாடைகட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்; பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடர் எய்திக் கெடுக்கின்றாரே! – பாரதியார்

கவிஞர் வலிமை – விவேக்பாரதி

கவிஞர் வலிமை (அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்) ஊரினிலே உள்ளோ ரெல்லாம் ஊதாரித் தனமாய்த் தம்மில் பாரினையே தூக்க வல்ல பலமதுவு முள்ள தென்பார் பேரினிலே பலத்தை வைத்துப் பிதற்றிடுவோ ரல்லோம் நாங்கள் நேரினிலே நேராய் நிற்கும் நேர்மையே பலமாய்க் கொண்டோம் ! தூணையும் பிளக்க வல்லோம் துயர்தமைத் துடைக்க வல்லோம் ஆணையும் பெண்ணென் றாக்கி அழகுகள் சமைக்க வல்லோம் ! நாணையே ஏற்றி டாமல் நற்கணை பாய்ச்ச வல்லோம் ! ஏனைய செய்தி யெல்லாம் எடுத்துநான் எழுது கின்றேன் ! நரியினை வாச கன்தன்…

திருக்குறள் அறுசொல் உரை – 096. குடிமை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 095. மருந்து தொடர்ச்சி) 02. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 096.  குடிமை உயர்குடியில், குடும்பத்தில் பிறந்தாரின் இயல்பும், பெருமையும், சிறப்பும்.   இல்பிறந்தார் கண்அல்லது இல்லை, இயல்பாகச்      செப்பமும், நாணும் ஒருங்கு.   நேர்மையும், பழிக்கு நாணலும்,         நல்குடிப் பிறந்தார்தம் இயல்புகள்.   ஒழுக்கமும், வாய்மையும், நாணும்இம் மூன்றும்      இழுக்கார் குடிப்பிறந் தார்.     ஒழுக்கத்தில், உண்மையில், நாணத்தில்,         உயர்குடிப் பிறந்தார் தவறார்.   நகை,ஈகை, இன்சொல், இகழாமை நான்கும்      வகைஎன்ப, வாய்மைக் குடிக்கு.  …

ச.ம.உ.தியாகராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மதுரைத்தமிழ்ச்சங்கம்குறித்துத் தவறான தகவலைச் சட்டமன்றத்தில் தெரிவித்த ச.ம.உ.தியாகராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!   தமிழகச் சட்டமன்றத்தில்(ஆடி12, 2047/சூலை27, 2016) மதுரை மத்தியத்தொகுதி தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராசன் ஆங்கிலத்தில் பேசினார். அதற்குத் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்குலத்தோர் புலிப் படை அமைப்பின் நிறுவனத் தலைவர், கருணாசு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கான விளக்கம் தருவதாகச் சட்டமன்றத்திலும் ஊடகங்களிலும் பழனிவேல் தியாகராசன் தமிழால் முடியாது என்பதுபோல் தெரிவித்துள்ளது தமிழன்பர்களிடையே கோபக்கனலை எழுப்பியுள்ளது. தனக்கு எதிர்ப்பு மிகுந்ததும் தான் தெரிவித்ததைத் தானே மறுத்து மழுப்பியுள்ளார். ஊடகங்களில்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.20 அழுக்கா றொழித்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.19. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 20. அழுக்கா றொழித்தல் (அழுக்காறு- பொறாமை) அழுக்கா றயலா ராக்கத்திற் புழுங்கல். அழுக்காறு என்பது அடுத்தவர் பெற்றுள்ள செல்வத்தை நினைத்து உள்ளூர வருந்துதல் ஆகும். அழுக்கா றுறலினோ ரிழுக்கா றிலதே. அழுக்காறு கொள்வதைவிடப் பெரிய குற்றம் இல்லை. அழுக்கா றதுபோ லழிப்பதொன் றின்றே. பொறாமையைப் போல் அழிவை ஏற்படுத்தக் கூடியது வேறு ஏதும் இல்லை. அழுக்கா றுளவரை யொழுக்கா றிலையே. பொறாமை உள்ளவனிடத்தில் நல்லொழுக்கம் இருக்க இயலாது. அழுக்கா றுடையார்க் காக்கமின் றாகும். அழுக்காறு…

தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 4/4 – சி.சேதுராமன்

(தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 3/4 தொடர்ச்சி) தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 4/4   மே  நாளைப் போற்றி அதில் தொழிலாளர்களின் நிலையைத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார் கவிஞர். அத்துடன் சீனப் புரட்சியையும்-ஆசிய நாடுகளின் விடுதலைச் சூழலையும் பாடினார். பொதுவுடைமை என்றால் பாமர மக்கள் அறியாத காலத்தில் இலெனினைப் போல, ஏங்கல்சு போலத் தாமாகவே சிந்தித்து முடிவுகள் மேற்கொண்டு எதிர்நீச்சல் போட்டுப்  பொதுவுடைமை இயக்கத்தின் பாவலனாகத் தமிழ்ஒளி விளங்கினார்.  தமிழ்ஒளியின் கவிதைகளில் நேரடியாகவே ஒடுக்கப்பட்ட மக்களைப்பற்றி பேசப்பட்டிருக்கும். மேலும், சமூக-பொருளாதாரத்திற்குத் தனியிடம் கொடுத்து…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37   மேலும் தமிழக மக்கள் எழுத்தறிவற்ற மூடர்களாக இருக்கின்றார்களே! புதிய சிந்தனை பெற்று வாழ்வது எங்ஙனம்? என இன்றைய குடியரசு நாடு பெற்றிருக்கும் அவலத்தை கண்டித்தும் நையாண்டி செய்தும் கூறுகிறார் கவிஞர். ‘கட்டையை நிறுத்தினும் கழுதையைக் காட்டினும்  அதற்கே வாக்கை அளித்தல் வேண்டும்  என்றே கூறி நன்றுதம் கட்சிப்  பேரெண் பெற்றிடப் பெரிதும் முயன்றனர்’  (துரத்தப்பட்டேன்: அ-ள் 42-45) தொண்டுள்ளம் கொண்டவருக்கு வாக்குப் போட வேண்டும்…

அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 3/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு

(அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 தொடர்ச்சி) அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 3/3 வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு   இதன் ஊடாக, மூன்று வகையான நன்மைகளை அடைந்து கொள்ளும் நோக்கங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உண்டு.   ஒன்று: மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல்கள், கைதுகள், தடுத்து வைத்தல்கள்’ ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குள்ளிருந்தே, உயர்தரம் வரையான கல்வியைக் கற்றுள்ள தகுதியான பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களது உணர்வுடன் இரண்டறக் கலந்துள்ள ஆட்களோடு தொடர்புபட்டுள்ள இந்தச் சிக்கலில் வேலைவாய்ப்பை…

மாநில, மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றுங்கள்!

மாநில, மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றுங்கள்!   உலக அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப்படும் நூல் திருக்குறள். சமயச்சார்பற்ற நூல்களில் உலக மொழிகளில் மிகுதியாக  மொழிபெயர்க்கப்பட்டதும், மொழிபெயர்க்கப்பட்டு வருவதும் திருக்குறள் நூல் ஒன்றே. எனவேதான் இதனை இயற்றிய திருவள்ளுவர் ஞாலப்பெரும்புலவர் எனப் போற்றப்படுகிறார்.  இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே! (பாரதிதாசன்) என்பது  முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல! முக்காலத்திற்கும் பொருந்தும் திருக்குறள்பற்றிய எக்காலக் கருத்துமாகும்.  அண்ணல் காந்தியடிகள், இந்தியத் துணைக்கண்டம் ஒற்றுமையாகத் திகழக் குமரி முதல் இமயமலைவரை வாழும் அனைவரும்  …

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36: ம. இராமச்சந்திரன்

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36 அங்கதம்   தொல்காப்பியர் காலத்திலேயே அங்கதச் செய்யுள் பாடப்பட்டுள்ளன என்பதை அவர் எழுதிய நூற்பாவினால் அறியலாம். செம்பொருள், அங்கதம் என இருவகையாகக் கொள்வர் தொல்காப்பியர்.105 தொல்காப்பியத்தில் சொல்லப்படும் அங்கத வகை வளர்ச்சி பெறவில்லை என்றே தோன்றுகிறது. எனினும் சில தனிப்பாடல்களிலும் காவியங்களில் மட்டுமே ஆங்காங்கே அங்கதக் கூறுகள் இடம் பெற்றுள்ளன. அங்கத வடிவில் அமைந்த திறனாய்வாளர் கூறும் அங்கத இலக்கணங்கள் பொருந்தி நகையும் வினையமும் (irony) இகழ்ச்சிக் குறிப்பும் கொண்டு எழுந்த நூல்கள் மிக அரியனவே….

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.19. பயனில் சொல் விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.18 தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல்   19. பயனில் சொல் விலக்கல் பயனில்சொல் யார்க்கும் பயன்றராச் சொல்லே. பயனில் சொல் என்பது யாருக்கும் பயன் தராத பேச்சு ஆகும். அறியா மையினின் றச்சொல் பிறக்கும். பயனற்ற பேச்சு அறியாமையினாலேயே ஏற்படுகிறது. அறியா மையினை யச்சொல் வளர்க்கும். பயனற்ற பேச்சு அறியாமையை வளர்க்கும் இயல்பு உடையது. அறிவினர் நட்பெலா மச்சொல் குறைக்கும். அறிவுடையவர்களின் நட்பை பயனற்ற பேச்சு குறைக்கும் இயல்பு உடையது. அறிவிலார் நட்பினை யச்சொல் பெருக்கும். பயனற்ற பேச்சு அறிவற்றவர்களின்…

சிறைக்குள் வைத்தே பல நாட்கள் ‘விசாரணை’! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி!- பாகம் – 06

(பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 05 தொடர்ச்சி) சிறைக்குள் வைத்தே பல நாட்கள் உசாவல்! பேரறிவாளன்  குறிப்பேடு – தொடரும் வலி!- பாகம் – 06 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!)   1980-களின் இறுதியில் தமிழகத்தை உலுக்கிய பெயர், ‘பாண்டியம்மாள்’. காணாமல்போன தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல்துறையிடம் கணவர் முறையிட, அடையாளம் தெரியாத ஒரு பிணத்தை வைத்துக்கொண்டு கணவனையே கொலைகாரனாக்கி…