(உ.வே.சா.வின் என் சரித்திரம் 94 : அத்தியாயம்-59 : திருவிளையாடற் பிரசங்கம்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-60 அம்பரில் தீர்ந்த பசி செங்கணத்திலிருந்து காரைக்குப் புறப்படுகையில் விருத்தாசலரெட்டியாரிடம் பாகவதம், கம்பராமாயணம், திருக்கோவையார். திருக்குறள்ஆகிய புத்தகங்களை இரவலாக வாங்கிப் போயிருந்தேன். பாகவதம் மாத்திரம்ஏட்டுப் பிரதியாக இருந்தது. காரையில் பகல் வேளைகளில் அவற்றையும்என்னிடமிருந்த வேறு நூல்களையும் படித்து இன்புற்றேன். பாகவதம்படித்தபோது முதல் கந்தமும் தசம கந்தமும் என் மனத்தைக் கவர்ந்தன. .கிருட்டிணசாமி ரெட்டியார் தெலுங்கு பாகவதத்தைப் படித்து அதிலுள்ளவிசயங்களைச் சொல்வார். தமிழ்ப் பாகவதத்திலுள்ள சில சந்தேகங்களைஅவர் கூறிய செய்திகளால் நீக்கிக்…