அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 3. ஆ. செல்வம்
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.4. வந்தபின் தீர்த்தல்-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் ஆ. செல்வம் ‘பிணியின்மை’யை அடுத்துத் திருவள்ளுவரால் குறிக்கப்பட்டது “செல்வம்”. ‘செல்வம்’ என்றால் என்ன? ‘செல்வம்’ என்று எதனைச் சொல்கின்றோம்? பல பொருள்களையும் ‘செல்வம்’ என்று கொள்கின்றோம். நிலத்திலும் கடலிலும், மலையிலும் முறையே: இயற்கையாகக் கிடைக்கும் பொன், கரி, தனிமம் முதலியவற்றையும், முத்து, பவளம், உப்பு முதலியவற்றையும், மணி, கல், மரம் முதலியவற்றையும் செல்வமாகக் கொள்கின்றோம். மாந்தரால் செயற்கையில் உருவாக்கப்படும் வயல் வீடு, பொறிகள், பண்டங்கள் முதலியனவும் செல்வம். உழைப்பில் விளையும்…