அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 21-23

(அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 18-20- தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 21. நரியும் பூனையும் காட்டில் அலைந்து திரிகிறது நரி, ஒரு சமயம் நகரத்துக்கு வந்து, ஒரு பூனையைக் கண்டு அதனுடன் நட்புக் கொண்டது. நட்பு முற்றவே ஒருநாள் நரி பூனையைக் காட்டுக்கு அழைத்து, முயல்கறி படைத்து விருந்து வைத்தது. சுவையாக விருந்துண்ட மகிழ்ச்சியில் பூனை நரியைப் புகழ்ந்து ஆடிக் களிப்புற்றது. மற்றொருநாள் பூனை நரியை நகரத்திற்குள் விருந்துக்கு அழைத்தது. நகரத்திற்குள் வர நரி முதலில் தயங்கினாலும், பூனை கூறிய…

அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 18-20

(அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 16. தியாகக்கதை & 17. இன்சொலின் சிறப்பு – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 18. பொதுத் தொண்டு நான் ஒருமுறை பெங்களுர் சென்றிருந்தபோது, 95 வயதைத் தாண்டிய ‘சர். விசுவேசுவர ஐயா’ அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஒரு கன்னட நண்பரின் துணையோடு பார்க்கச் சென்றிருந்தேன். அவரிடம், என்னைப் “பொதுத் தொண்டு செய்பவர்” என்று நண்பர் அறிமுகப்படுத்தி வைத்தார். பழுத்த பழமாகச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்த சர். விசுவேசுவர ஐயா அவர்கள்,…

அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 16. தியாகக்கதை & 17. இன்சொலின் சிறப்பு

(அறிவுக்கதைகள்நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 13-15-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 16. தியாகக் கதை ‘தன்னல மறுப்பு’வட மொழியிலே ‘தியாகம்’ என்பது – தமிழிலே ‘தன்னல மறுப்பு’ என்றாகும். மக்களாகப் பிறந்தவர்கள் தன்னலமற்ற வாழ்க்கை வாழவேண்டுமென்பது தமிழ்ப் பண்பாடும், தமிழர் பண்பாடும், தமிழகத்துப் பண்பாடும் ஆகும். இதனை, ‘பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளார்; புகழெனின் உயிரும் கொடுக்குவர். தனக்கென முயலா நோன்றாள். பிறர்க்கென முயலுநர்’ என்று, புறநாறூறு இன்றும் கூறிக்கொண்டிருக்கிறது. ‘கோழி’கோழி தன்னை விலை கொடுத்து வாங்கியவனுக்கு முட்டைகள் இட்டு உதவி,…