(அதிகாரம் 071. குறிப்பு அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால்    06. அமைச்சு இயல் அதிகாரம் 072. அவை அறிதல் அறிஞர் கூட்டத்தின்  இயல்புகள்  ஆராய்ந்து ஒப்ப நடத்தல்.   அவைஅறிந்(து), ஆராய்ந்து சொல்லுக, சொல்லின்      தொகைஅறிந்த தூய்மை யவர்.         சொல்வள நல்அறிஞர், அவையின்         இயல்பை ஆராய்ந்துதான் பேசுவர்.     இடைதெரிந்து, நன்(கு)உணர்ந்து, சொல்லுக, சொல்லின்      நடைதெரிந்த நன்மை யவர்.         தமக்கும், அவைக்கும், இடைநிற்கும்         இடைவெளியை நன்குணர்ந்து சொல்க.   அவைஅறியார், சொல்லல்மேற் கொள்பவர், சொல்லின்    …