இலக்குவனார் நினைவு நாள் கட்டுரை: ஆங்கிலத் திணிப்பால் ஆட்சியை இழக்க விரும்புகிறார்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தித்திணிப்பால் பேராயக்(காங்கிரசு) கட்சி ஆட்சி அகன்றது. ஆங்கிலத்திணிப்பால் தி.மு.க. ஆட்சி அகல ஆட்சியாளர்களே விரும்புகிறார்களா? தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் நினைவு நாள் ஆவணி 18 / செட்டம்பர் 3. இலக்குவனார், தம் வாணாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காகவும் தமிழ்க்காப்பிற்காகவும் பல போராட்டக் களங்களைச் சந்தித்தவர். தமிழ்க்காப்பு என்பது பிற மொழிகளின் ஆதிக்ககத்திலிருந்தும் திணிப்புகளிலிருந்தும் தமிழைக் காக்கப் போராடியதுமாகும். “தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா? வீட்டளவிலும்…