கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 75 : அடிகளார் வருகை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 74 – தொடர்ச்சி) பூங்கொடி 15. இசைத்திறம் உணர எழுந்த காதை- தொடர்ச்சி எழுவாய்! எழுவாய்! இன்றே எழுவாய்! தொழுவாய் அவளைத் துணையென நினைவாய்! 50 வழுவா மகளே! வாழிய பெரிதே’ என்றவள் வாழ்த்தி இருந்தனள் ஆங்கண்; அடிகளார் வருகை நன்று நன்றென நங்கையும் இயைந்தனள்; அவ்வுழி அடிகள் வருகை தந்தனர் செவ்விய மங்கையர் செங்கை கூப்பி 55 நிற்றலும் அவர்தமை நேரியர் வாழ்த்திப் `பொற்றொடி யீர்!நாம் புறக்கணிப் பாக விடுதல்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 74 : 15. இசைத்திறம் உணர எழுந்த காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 73 : ஏமகானன் தூண்டு மொழி-தொடர்ச்சி) பூங்கொடி இசைத்திறம் உணர எழுந்த காதை அடிகளார் ஆணை பூங்கொடி யாகிய பொற்புடைச் செல்வி ஆங்கண் மீண்டதும் அருண்மொழிக் குரைப்போள் `மீனவன் திறமெலாம் விளம்பித் தமிழால் ஆன நல்லிசை யாண்டும் பரவிடச் சுவடியின் துணையால் தொண்டியற் றென்று 5 தவறிலா அடிகள் சாற்றினர்’ என்றனள்; அருண்மொழியும் இசைதல் `ஆம்என் மகளே! அதூஉஞ் சாலும் தோமறு தமிழிசை துலங்குதல் வேண்டி மீண்டும் அப்பணி மேவுதல் வேண்டும்; பூண்டநல்…