குறள் கடலில் சில துளிகள் . 25. உன்னையே வியந்து கொள்ளாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
( குறள் கடலில் சில துளிகள் 24. கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 25. உன்னையே வியந்து கொள்ளாதே! வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. ( திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், எண்: ௪௱௩௰௯ – 439) பொழிப்பு: எப்பொழுதும் தன்னை வியந்து கொண்டாடாதே; நன்மை தராத செயல்களை மனத்தாலும் விரும்பாது ஒழிக! (சி.இலக்குவனார்) பதவுரை: வியவற்க-வியந்து கொள்ளற்க, பெருமிதம் கொள்ளற்க, புகழ்ந்து கொள்ளற்க; எஞ்ஞான்றும்-எப்பொழுதும்; தன்னை-தன்னை; நயவற்க-விரும்பாதீர்; நன்றி-நன்மை; பயவா-விளைக்காத; வினை-செயல்….