உ.வே.சா.வின் என் சரித்திரம் 100- சங்கீத ஒளடதம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 99 – இரட்டைத் தீபாவளி- தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 62 தொடர்ச்சிசங்கீத ஒளடதம் நான் அவ்வாறு சென்ற காலங்களில் இரவு நேரங்களில், அவருக்குத் தூக்கம் வாராமையால் அவர் விருப்பத்தின்படி தமிழ்க் கீர்த்தனங்களைப் பாடுவேன். சங்கீதத்தில் சிறிதும் பயிற்சியில்லாத ஆசிரியர் எல்லாம் தளர்ந்திருந்த அந்த நிலையில் அக்கீர்த்தனங்களில் மனம் ஒன்றித் தம் நோயை மறந்தார். அவரை அறியாமலே சங்கீதமும் கீர்த்தனங்களின் எளியநடையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. முக்கியமாக நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளைக் கேட்கும்போது அவர் அடைந்த ஆறுதல் மிகுதியாக இருந்தது. மணிமந்திர…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 99 – இரட்டைத் தீபாவளி
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 98 : பிரிவில் வருத்தம்-தொடரும்) என் சரித்திரம் அத்தியாயம்—62 இரட்டைத் தீபாவளி எங்கே பார்த்தாலும் விசபேதியின் கொடுமை பரவியிருந்தது. திருவாவடுதுறையைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் அந்நோய்க்கு இரையானவர்கள் பலர். திருவாவடுதுறையிலும் சிலர் இறந்தனர். அதுகாறும் அத்தகைய நோயை அறியாத சனங்கள், “காலம் கெட்டுவிட்டது. கலி முற்றுகிறது. தருமம் அழிந்து வருகிறது. அதனால்தான் இக்கொள்ளை நோய் வந்திருக்கிறது” என்று சொன்னார்கள். “இரெயில் வந்தது. ஆசாரம் ஒழிந்தது, அதற்குக் தக்க பலன் இது” என்று சிலர் பேசினர். வேதநாயகம் பிள்ளை விண்ணப்பம் அரசாங்கத்தார் அந்நோய்…