(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 08. பெருமை என்பது கெடுமோ? – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 6. இறையனார் அகப்பொருள் உரை இறையனார் அகப்பொருள் முதல் சூத்திர உரையில் உரை கண்ட வரலாறு பற்றிய விளக்கம் அளிக்கும் பகுதியில் “நக்கீரனால் உரைகண்டு, குமாரசுவாமியால் கேட்கப்பட்டது” எனவரும் தொடர்கொண்டு, இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவர் எனக் கொள்வர் சிலர். நக்கீரனார் கடைச் சங்கப்புலவர்: கடைச்சங்க இலக்கியங்களில் கட்டளைக் கலித்துறை இடம்பெறவில்லை: கட்டளைக் கலித்துறைக்குத் தொல்காப்பியரும் இலக்கணம் வகுக்கலில்லை;…