கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 63 : உடன் போக்கு
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 62 : பொன்னியின் செயலறு நிலை- தொடர்ச்சி) பூங்கொடி உடன் போக்கு என்னலும், மின்னலின் இடையினள் துவண்டு கன்னலின் மொழியாற் `கருத்துரை வெளிப்பட உரை’எனத், தலைவன் `உடன்போக்’ கென்றனன்; `விரைவாய்! விரைவாய்! விடுதலை பெறுவோம்; 80 மீன்,புனல் வாழ வெறுப்பதும் உண்டோ? ஏன்உனக் கையம்? எழுவாய் தலைவா! நின்தாள் நிழலே என்பே ரின்பம்’ என்றவள் செப்ப, இருவரும் அவ்வயின் ஒன்றிய உணர்வால் உடன்போக் கெழுந்தனர்; 85 தந்தையின் மானவுணர்வு துன்றிருட் கணமெலாம்…