(உ.வே.சா.வின் என் சரித்திரம் 105 – சந்திரசேகர கவிராச பண்டிதர்- தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்பூ68 திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் சில தம்பிரான்களும் கம்பராமாயணத்தை ஆராய்ந்து படித்து வந்தபோது இடையிடையே சந்தேகங்கள் எழுந்தன. அவற்றைத் தெளிந்துகொள்ள வழியில்லாமல் மயங்கினோம். அக்காலத்தில் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை என்னும் வித்துவான் கம்பராமாயண பாடம் சொல்வதில் சிறந்தவரென்று நாங்கள் கேள்வியுற்றோம். வித்துவத்துசன சேகரர்(’‘வித்வத்சன சேகரர்“) அவர் கம்பராமாயணம் முழுவதையும் அச்சிட்டவர்; சுந்தர காண்டத்தைத் தாம் எழுதிய உரையுடன் வெளிப்படுத்தியவர்; ‘வித்வத்ஜன சேகரர்’ என்னும்…