(குறள் கடலில் சில துளிகள் 21. வருமுன் காத்திடு! – தொடர்ச்சி)   குறட் கடலிற் சில துளிகள் 22. உன்னைத் திருத்திய பின் ஊரைத் திருத்து! தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்: 436) தன் குற்றம் கண்டறிந்து நீக்கிப் பிறர் குற்றம் காண்பவனுக்கு எக்குற்றமும் வராது என்கிறார் திருவள்ளுவர். ஆளுமையியலாளர்கள், பிறர் குற்றங்களைப் பார்க்கும் முன்னர் முதலில் உன்னைப் பார் (Look at yourself first, before looking on to others) என்கின்றனர்….