(உ.வே.சா.வின் என் சரித்திரம் 92 : அத்தியாயம்-57 : திருப்பெருந்துறை – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-58 எனக்கு வந்த சுரம் திருப்பெருந்துறையில் புராண அரங்கேற்றம் ஒரு நல்ல நாளில்ஆரம்பிக்கப்பெற்றது. சுப்பிரமணியத் தம்பிரான் அதன் பொருட்டு மிகவிரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அயலூர்களிலிருந்து கனவான்களும்வித்துவான்களும் சிவநேசச் செல்வர்களும் திரள் திரளாக வந்திருந்தனர். குதிரை சுவாமி மண்டபத்தில் அரங்கேற்றம் நடைபெறலாயிற்று.அப்போது நானே பாடல்களை இசையுடன் படித்து வந்தேன். பாடம்சொல்லும்போதும் மற்றச் சமயங்களிலும் தமிழ்ப்பாடல்களைப் படிக்கும்வழக்கம் எனக்கு இருப்பினும் அவ்வளவு பெருங்கூட்டத்தில் முதன்முறையாகஅன்றுதான் படிக்கத் தொடங்கினேன். கூட்டத்தைக் கண்டு…