கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 73 : ஏமகானன் தூண்டு மொழி
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 72 : தங்கத் தேவன் கொதிப்புரை-தொடர்ச்சி) பூங்கொடி ஏமகானன் தூண்டு மொழி தங்கத் தேவன் தகவல் அறிந்ததும் `எங்குஅத் தீயவன் ஏகினும் ஓயேன்; யாங்குறின் என்ன? வேங்கையின் பகையைக் 180 கிளறி விட்டவன் கேடுறல் திண்ணம்; ————————————————————— கட்படு – கண்ணில்படும், செகுத்து – அழித்து, முனம் – முன்பு. ++ உளறித் திரியுமவ் வுலுத்தன் தலைதனைக் கொய்தமை வேன்’எனக் கூறி முடிக்கக் கைதவன் ஏம கானன் கயவனும் `நிற்பகை கொண்டோர்…