கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 71 : ஏமகானன் பாராட்டுரை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 70 : மீனவன் சங்கம் புகுதல்-தொடர்ச்சி) பூங்கொடி ஏமகானன் பாராட்டுரை திசைதொறும் சென்று தன்புகழ் நிறீஇ விருதுபல கொண்டு வெற்றிக் களிப்பொடு வருவோன் ஒருவன் வடபுலத் திசைவலான் ஏம கானன் எனும்பெயர் பூண்டோன் 105 தோமறு மீனவன் தொண்டும், தமிழிசைப் புலமையும், அவன்பெரும் புகழும் செவிமடுத்துக் கலைமலி காளையின் கண்முன் தோன்றி `உரவோய்! இளமையில் ஒருதனி நின்றே இரவாப் பகலாத் திறமுடன் ஆற்றும் 110 நின்னிசைப் பணிக்கு நெடிதுவந் தனனே, என்னிசைப்…
