அன்னை சேது அறக்கட்டளை நடத்திய பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ இணையர் அன்னை சேதுமதியின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தலின் (ஐப்பசி 23, 2055  /  09.11.2024 சனி மாலை 5.30) பொழுது தமிழ்த் தொண்டறத்தார்களுக்கு விருதுகள் வழங்கப்பெற்றன. தொடக்கத்தில் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற இயக்குநர் கவிஞர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையில் விருதாளர்களைச் சிறப்பாக அறிமுகப்படுத்தினார். புலவர் மா.கணபதி தமிழ்ப்போராளி புலவர் த.சுந்தரராசன் படத்தினைத் திறந்து வைத்தார். கந்தசாமி (நாயுடு) கல்லூரி முதல்வர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் விருது வழங்குநரை அறிமுகப்படுத்தினார். அறிஞர்கள் சிலரின் உரைக்குப் பின்னர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஏற்புரை வழங்கினார் தமிழ்வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஒளவை ந.அருள் அன்னை சேது மக்கள் சார்பில் தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயமும் பொற்கிழியும்…