அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 3. கருமித்தனமும் சிக்கனமும்
(அறிவுக் கதைகள் 1. கல்வியும் கல்லாமையும் & 2. கருமியும் தருமியும் – கி.ஆ.பெ. – தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 3. கருமித்தனமும் சிக்கனமும் பள்ளி வாசல் கட்டவேண்டுமென்று எண்ணிய மவுல்வி நபி நாயகமவர்களிடம் சென்று பொருள் வேண்டு மென்று கேட்டார். அவர் ஒரு செல்வனைக் குறிப்பிட்டு அவனிடம் கேட்டுப் பெறும்படி அனுப்பினார். அப்படியே மவுல்வியும் செல்வனைக் காணச் சென்ற போது, அங்கே – வேலைக்காரனைக் கையை மடக்கி மரத்தில் வைத்துக் கட்டி – குத்து 10 குத்திக் கொண்டிருந்தான் செல்வன். ‘ஏன்…