(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 18, – தமிழின் இனிமை – தொடர்ச்சி). என் தமிழ்ப்பணி சொல்லின் எவனோ? 16 கணவன் பரத்தையர் தொடர்பு கொண்டு, அவர் சேரி வாழ்க்கையிலேயே ஆழ்ந்துவிட்டமை அறிந்து வருந்தினாள் ஒரு பெண், அவள் கணவன் அவளை மணப்பதற்குமுன் அறியாதவனோ, அவள்மீது விருப்பம் இல்லாமலே மணம் செய்து கொண்டவனோ அல்லன்; பலர் அறிய மணந்து கொள்வதற்கு முன்பே அவன் அவளை அறிவான்; அவளைக் கண்டு அவள் அழகிற்கு மயங்கி அவள்மீது காதல் கொண்டு. அக்காதல் நிறைவேற நெடுநாள் அரும்பாடு…