(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 63 : உடன் போக்கு – தொடர்ச்சி) பூங்கொடி கலை பயில் தெளிவு           நன்மக விதனை நயந்து வாங்கியோன் தன்மனை யாளும் தாம்பெறு பேறெனக் கண்ணென மணியெனக் காத்து வளர்த்தனர்;                    எண்ணும் எழுத்தும் எழிலோ வியமும்    105           பண்ணும் பிறவும் பழுதிலா துணர்ந்தே செவ்விய நடையினன் செந்தமிழ் வல்லுநன் அவ்வூர் மக்கள் அறிஞன்என் றியம்ப,               கோவிலில் மீனவன்            வாழ்வோன் ஒருநாள் வானுயர் கோவில்                   சூழ்வோன் உட்புகச் சொற்றமிழ் கேட்டிலன்   110…