(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 59 : இசைப்பணிக்கு எழுக எனல்-தொடர்ச்சி) பூங்கொடி 13. மீனவன் வரலாறுணர்ந்த காதை அடிகளார் கூறத்தொடங்குதல்  இசையியல் இயம்பும் ஏட்டுச் சுவடி வசையிலா நினக்கு வழங்கிய மீனவன் தன்றிறம் கூறுவென் தயங்கிழை! கேளாய், நின்பெரும் பணிக்கும் நீள்பயன் விளைக்கும்;                   குறியிடத்திற் காதலர்           நெல்லூர் என்னும் நல்லூர் ஆங்கண்       5           கழனி வினைபுரி களமர் குடிதனில் எழில்நிறை செல்வி இடுபெயர்ப் பொன்னி நல்லவள் ஒருத்தி, கொல்லுலைத் தொழில்புரி வில்லவன் என்னும் விடலை தன்னொடு           அறியாக்…