பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 12– ஆ.வெ.முல்லை நிலவழகன்

  காட்சி – 12 அங்கம்    :     பூங்குயில்,  அருண் மொழி  இடம்      :     அருண்மொழி இல்லம்  நிலைமை  :     (துயிலும் கணவனின் பாதங்களைத் தொட்டுவணங்கி எழுப்பிய பின்) உயிரே! அவனென அவள் எண்ணி உணர்வுப் பொங்க அழைக்கின்றாள் பூங்:            காலைக் கதிரவனே! சோலைக் குழல் வண்டே! நாளை முடிப்பதென வேளை வோட்டாமல் தூயவண்ணனென நீயே எழுந்துவிடு! அருண்:    காலை அலர் மலரே சோலை மலர்த்தேனே! காலைநான் எழவோ காலைத் தட்டுகின்றாய்? கனியின் சுவையாகக் கனிந்தே அழைக்கின்றாய்! மணியின் ஒலியாக இனிதே மொழிகின்றாய்! கட்டாய்…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 8 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி) காட்சி – 8 (நாடகக் காட்சி – 2) அங்கம்   :     அருண் மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (இல்லாளும் நானென இன்பம் பொழிகின்ற பூங்குயில் கண்டு தலைவனும் நானென அருணும் நவின்றிடும் முறையே இங்கு) அருண்    :     மலரே நீ வருவாய்! தாள்கொஞ்சம் திறவாய்! கள்வனோ அல்ல;                                                                                                                                                               கணவனே! வந்தேன்! பூங்       :     இதோ நான் வந்தேன்! இனிய நீர் சுமந்து! பாதமோ கழுவி…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 7 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி)   காட்சி – 7அங்கம் :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடில் முன்வாசல் நிலைமை  :     (நாடகக் காட்சி முடிந்ததோ! இல்லையோ ஓடுது! மனமோ அன்புக்கெங்கோ!) அன்ப :     நாடகக் கருத்தை அறியும் முன்பு ஓடுது என்மனம் ஒன்று கேட்க? சென்னைக்கு வந்த நோக்கமென்ன? என்பதே அந்தக் கேள்வி என்பேன்! கவி       :     வானத்திலே நாகரீகம் வட்டமிட்டுச் சுற்றுதென தேன்வழியப் பேசுகின்ற சிலர் எனக்குச் சொல்லிடவே நானுந்தான் வந்தேன் நாகரீகம் கண்டேன்!…

உலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன்

உலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன் உலகம் இங்குப் போகும் போக்கை ஒன்று சேர்ந்து மாற்றுவோம் ஒருவ னுக்கே உரிமை யென்றால் உயர்த்திக் கையைக் காட்டுவோம் கலகம் இல்லை குழப்பம் இல்லை கடமை யாவும் போற்றுவோம் கயமை வீழ உரிமை வாழக் கருதி யுணர்வை ஏற்றுவோம் உழைத்து ழைத்து விளைத்த நெல்லை ஊருக் கெல்லாங் கொடுக்கிறோம் உழைத்து விட்டுக் களைத்த பின்னர் உணவில் லாமற் படுக்கிறோம் களைத்துப் போன கார ணத்தைக் கருதிக் கொஞ்சம் நோக்குவோம் கடவுள் ஆணை என்று சொன்னால் கண்ணில் நெருப்பைக்…

நாள்தோறும் நினைவில் –7 : வளம் பகிர்வோம் – சுமதி சுடர்

வளம் பகிர்வோம் வளங்களெல்லாம் கேட்காமல் இயற்கைதந்த கொடையே! வடிவுமாற்றி பயன்கொள்ள போராட்டம் ஏனோ? வளம்கொள்ள எல்லையேது? வரன்முறைகள் காண்போம்; வாழ்வறிந்து வாழ்ந்திடுவோம்; வாழவைப்போம் இணைந்து; வளம்மறுத்தும் போர்காணா மனம்உயர்ந்த மக்கள் வாழ்வதற்கு வாய்ப்பளித்து மானுடத்தில் மகிழ்வோம்; எளிமையினை கடைபிடித்து பொருள்கொள்ளல் குறைப்போம்; எல்லையின்றி அருட்கருத்தை சொல்செயலில் பகிர்வோம்.  – சுமதி சுடர், பூனா

நாள்தோறும் நினைவில் 6 : வளம்பறிக்கும் நிலை – சுமதி சுடர்

வளம்பறிக்கும் நிலை வளம்பறித்து வாழ்பவர்கள் மனம்விரியாச் சிலர்தான் வறியவர்கள் பெருகிவரக் காரணமும் இவர்தான் உளச்சோம்பல் உடற்சோம்பல் போக்காமல் வாழ்ந்தால் உற்றாரைத் தளைப்படுத்தி உலகவாழ்வை முடிப்போம் உளம்சுருங்கும் உறவுபொய்க்கும் சினம்பெருகும் நாளும் உருக்குலையும் சேர்த்தபொருள் ஓயாத இடர்தான் வளம்காக்க போராட்டம் முறையற்ற வாழ்க்கை வாழ்வறியார் அடியொற்றி வாழ்பவரும் உண்டு  – சுமதி சுடர், பூனா

நாள்தோறும் நினைவில் – 5 : எப்பொழுதும் கல் – சுமதி சுடர்

எப்பொழுதும் கல் இளமையில் கல் இல்லறத்தில் கல் தொண்டில் கல் துறவறத்தில் கல் வீட்டில் கல் பள்ளியில் கல் தொழிலகத்தில் கல் குழுக்களில் கல் மனமறியக் கல் மனமடங்கக் கல் – சுமதி சுடர், பூனா

நாள்தோறும் நினைவில் : ஒன்றி வேலைசெய் – சுமதி சுடர்

ஒன்றி வேலைசெய் ஈடுபாட்டுடன் பணிசெய் விதிமுறைகளைக் கடைப்பிடி நேரத்தோடு இணைந்து செல் பாதுகாப்புடன் வேலைசெய் விளைவுகளைக் கவனத்தில் வை சமுதாயப் பங்கைஅளி கடமையில் கண்ணாயிரு வேலையில் நிறைவுகாண் நுட்பங்களைக் கற்றுக்கொள் நுட்பங்களைக் கற்பி ஐந்தொழில் செய்  – சுமதி சுடர், பூனா  

எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! – கவிஞர் தணிகைச்செல்வன்

எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! எங்கேயும் நான் தமிழனாக இல்லை! நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே உயர்ந்தோங்கிய தூணோரம் ஒதுங்கி நின்று உள்ளே வரலாமா? என்று “இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு ஐம்பதாண்டு காலமாக அடிதொழுது கிடக்கிறாள் என் தாய். பள்ளிகளின் வாயில்களுக்கு வெளியே வறியவள் போல் நின்று தான் பெற்ற குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட்ட ஆங்கிலச் சீமாட்டியிடம் இசைவு கோரி கண்ணீரோடு காத்து நிற்கிறாள் என் தாய். ஆலயத்துக்குள்ளே நடக்கும் ஆறுகால பூசைகளில் ஒரு காலத்துக்கேனும் என்னை உள்ளே விடக்கூடாதா- என்று சமசுகிருத எசமானியிடம்…

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! – பெருஞ்சித்திரனார்

வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

உள்ளத்தை வெளிப்படுத்து – சுமதி சுடர்

உள்ளத்தை வெளிப்படுத்து வாழ்க வளமுடன் நாள்தோறும் நினைவில் உள்ளத்தை வெளிப்படுத்து கதை சொல் கவிதை இயற்று கட்டுரை வரை பேசிப் பழகு நடித்து மகிழ் நாட்டியம் ஆடு ஓவியம் தீட்டு சிலை வடி பாட்டுப் பாடு கடிதம் எழுது  – சுமதி சுடர், பூனா http://sudarwords.blogspot.in/

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 3 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  (மார்கழி 28, 2045 / திசம்பர் 14, 2014 தொடர்ச்சி)     காட்சி –3 அங்கம்    :     கவிஞர், அன்பரசன், இடம்      :     கவிஞரது குடில் நிலைமை  : (கூரிய விழியாம்! உழைக்கும் தோளாம்!                    வீரிய நெஞ்சாம்! அன்பரசன் தனக்குத்தானே குடில் முன்னே! மனக்குறையோடு உரைக்கின்றான்!) அன்ப :   காலம் உணர்ந்த கவிஞருக்கு ஞாலப்பரிசு ஒரு குடிலோ; வணக்கம் புலவரே! வணக்கம்! மனநிறைவான வணக்கம்! கவி     :  யாரது? ஓகோ! வா! வா! தம்பி அன்ப   : …